குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதச்சத்து அவசியம் : ஏன் தெரியுமா..?

புரதச்சத்து

தசைகள், தோல், நகம், முடி வளர்ச்சி மற்றும் எலும்புகள் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம் ஒரு முக்கிய அங்கமாகும்.

  • Share this:
சீரான மற்றும் சத்தான உணவுகள் ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியாக சாப்பிடாத குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.

எனவே குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களை கணிசமாக உட்கொள்வதை உறுதி செய்வது மிகவும் முக்கியம், குறிப்பாக குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும். புரதச்சத்தின் அவசியம் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.,

உடல் செயல்பாடுகளுக்கு அவசியம் :

உங்கள் குழந்தைகளை சிறுவயதிலேயே வெளியில் ஓடி ஆட அனுமதிக்க வேண்டும். இது அவர்கள் வளர்ச்சி மற்றும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நடனம், ஸ்கேட்டிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற செயல்பாடுகள் அவர்களுக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் வளர உதவும். இதற்கு புரதச்சத்து மிகவும் அவசியமாகும்.புரத சத்தின் முக்கியத்துவம் :

குழந்தை பருவத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்து இளமைப் பருவம் வரை புரதங்கள் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியை தூண்டுகின்றன. இது வலுவான உடல்களுக்கும், மனங்களுக்கும் அவசியம் ஆகும். தசைகள், தோல், நகம், முடி வளர்ச்சி மற்றும் எலும்புகள் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம் ஒரு முக்கிய அங்கமாகும்.

குழந்தை பருவத்தில் அதிக புரதங்கள் தேவைப்படுகின்றன. தேசிய அறிவியல் அகாடமிகள் பரிந்துரைப்படி, 1-3 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 13 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும், 4-8 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 19 கிராம் புரதச்சத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும், 9-13 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 34 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும் என கூறப்படுகிறது.எனவே புரதச்சத்துக்கள் நிறைந்த முட்டை, அசைவ உணவுகள், சோயா பீன்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். பாதாம், வேர்க்கடலை, சுண்டல், துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.

மேலும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான கொழுப்புகளும் முக்கியம் என யஷ்னா கார்க் என்ற மருத்துவர் பரிந்துரைக்கிறார். இதுகுறித்து விளக்கிய அவர், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களை வழங்கும் ஆலிவ் எண்ணெய், நட்ஸ், வெண்ணெய் மற்றும் கடல் உணவுகளை உங்கள் குழந்தைகளின் அன்றாட உணவு பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்.குறிப்பு : தற்போது பெரும்பாலான குழந்தைகள் எலெக்ட்ரானிக் கேஜெட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது மூளை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு சோம்பலை அதிகரிக்கிறது. எனவே அவற்றை முடிந்தவரை தவிர்க்க அவர்களுடன் நீங்கள் நேரம் செலவழிப்பது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published: