Home /News /lifestyle /

பெற்றோர்கள், நமது பாலினம் எதுவாக இருக்கவேண்டும் என முடிவுசெய்யும் உரிமை இருப்பதாக ஏன் அவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள்?

பெற்றோர்கள், நமது பாலினம் எதுவாக இருக்கவேண்டும் என முடிவுசெய்யும் உரிமை இருப்பதாக ஏன் அவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள்?

மாதிரி படம்

மாதிரி படம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து ஒரு நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாலுணர்வை மட்டுமே விரும்புகிறார்கள் என்ற பொதுவான கட்டுப்பாட்டு போக்குக்குக் காரணம், அவர்கள் சமூக ஏளனத்தையும் நிராகரிப்பையும் தவிர்க்க விரும்புகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
பதில் : அனைத்துப் பெற்றோர்களும் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பான்மையான பெற்றோர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். இது குடும்பம் என்னும் கட்டமைப்பில் இயல்பாகவே நிகழக்கூடியது. இதை நீங்கள் சமுக்கக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க வேண்டும்.

இல்லையெனில் இந்த பிரச்சனையை அணுகுவது கடினம். ஹெட்ரோ செக்ஸுவலாக இருப்பவர்கள் மட்டும்தான் தகுதியானவர்கள் எனவும், அவர்களைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். அதில் திருமணம்தான் காதலை வெளிப்படுத்தவும், செக்ஸ் வாழ்க்கைக்குள் நுழையவும் பாஸ்போர்ட் கார்டாக இருக்கிறது. எனவே இதை தனிப்பட்ட கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கக் கூடாது.

பாலினத்தை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என நினைப்பதில்லை. ஆனால் அது இயல்பாக இந்த சமூகத்தோடு ஒன்றி வாழுவதால் நடக்கும் விஷயம். என்ன பாலினமாகவும் இருக்க யாருக்கும் சுந்தந்திரம் கொடுப்பதில்லை. குறிப்பாக பாரம்பரியமாக வாழும் குடும்பங்களில் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சுத்தமாக இல்லை. அதனால்தான் தங்கள் குழந்தைகளும் இந்த சமூகத்தில் சக மனிதர்களைப் போல் வாழ வேண்டும், வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்கின்றனர். ஏனெனில் இந்த சமூகம் நம் பிள்ளைகளை ஏளனமாக பார்த்துவிடக்கூடாது என நினைக்கிறனர். அதற்கு இந்த பாரம்பரிய சமூக விதிமுறைகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். எனவேதான் கேள்விகளே இல்லாமல் அவர்களால் இதை செய்ய முடிகிறது. ஆனால் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை முறைகளும் மாறி வருகிறது. சமூக விதிமுறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.உதாரணமாக ஆண் , பெண் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவில்லை எனில் பரஸ்பரம் பிரிந்து விடுகின்றனர். இன்னும் சிலர் திருமணத்திற்கு முன்பே செட் ஆகுமா என டெஸ்ட் செய்ய ஒன்றாக வாழ்ந்து பார்க்கின்றனர். அதேபோல் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் அதேசமயம் திருமணம் செய்ய விரும்பாத ஒரு பெண்ணுக்கு முழு பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பெற்றோரின் கடமைகளைச் செய்ய முடிந்தால் ஒற்றை பெற்றோராக இருக்க உரிமை உண்டு. வழக்கு எண் 377 படி காதல் என்பது காதல் மட்டும்தான்.அதில் ஹோமோசெக்ஸுவல், ஹெட்ரோசெக்‌ஷுவல் என்பதெல்லம் கிடையாது என உச்சநீதி மன்றத்தின் ஒரு தீர்ப்பு கூறுகிறது. இது அரசியல் அமைப்பிற்கு அப்பாற்பட்டது என்கிறது.

பாலியல் வன்கொடுமைகளை குறைக்க என்ன செய்யலாம்? கலந்துரையாடல்கள், போராட்டம், கட்டுரைகள் மட்டுமே போதுமா..?

இதை நீங்கள் மிகவும் தீவிரமாக அணுகுகிறீர்கள் எனில் இதை சுருக்கிக்கொள்ளாமல் விரிந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சில பெற்றோர்கள் சிறப்பானவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் சமூக கட்டமைகளுக்கெல்லாம் உட்பட்டுதான் செயல்படுவார்கள். அவர்களுக்கு நீங்கள் புரிதலை கொடுக்க விரும்பினால் முயற்சிக்கலாம். ஆனால் அது சாத்தியமில்லை என நினைத்தால் நண்பர்கள் வட்டாரம், சமூக குழுக்களுடன் இதைப்பற்றி கலந்துரையாடலாம். உங்களுக்கான அடித்தளத்தை உறுதியாக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கான கூட்டத்தை பெரிதாக்குங்கள்.இதில் நல்ல விஷயங்களும் உள்ளன. சில பெற்றோர்கள் எந்த பாலினமாக இருந்தாலும் அதை மனப்பூர்வாக ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என நினைக்கின்றனர். திருமணத்திற்கு முன் காதல் இருக்கலாம், அவர்களுடன் வாழலாம், ஒரு ஓரின சேர்க்கை தம்பதியர், இருவர், மற்றும் வேறுபட்ட பாலினத்தைத் தேர்வு செய்யலாம் என்ற கருத்தை இறுதியில் ஏற்றுக்கொள்ளும் பல பெற்றோர்கள் உள்ளனர். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து ஒரு நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாலுணர்வை மட்டுமே விரும்புகிறார்கள் என்ற பொதுவான கட்டுப்பாட்டு போக்குக்குக் காரணம், அவர்கள் சமூக ஏளனத்தையும் நிராகரிப்பையும் தவிர்க்க விரும்புகிறார்கள். இது ஒரு சிக்கலான பிரச்சினை, இதைப் பொதுமைப்படுத்துவது எளிதல்ல. ஆனால் மீண்டும் நம்முடைய சொந்த அனுபவங்களில் சிக்கிக்கொள்வதற்குப் பதிலாக இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஒரு விமர்சனக் கண் வைத்திருப்பது நல்லது.
Published by:Sivaranjani E
First published:

Tags: Healthy sex Life, Hetrosexual, Homosex, Relationship, Sexual Wellness

அடுத்த செய்தி