Home /News /lifestyle /

9 - 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு HPV தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் என்ன..?

9 - 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு HPV தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் என்ன..?

HPV தடுப்பூசி

HPV தடுப்பூசி

9 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் குத புற்றுநோய் உள்ளிட்ட பல சிக்கலை தவிர்க்க இந்த தடுப்பூசியை பெறலாம். எனவே 9 வயதை எட்டியவுடன் சிறுவர் மற்றும் சிறுமியர் என இருவருக்கும் HPV தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) என்பது ஒரு வைரஸ் தொற்று. இது பாலியல் ரீதியாக தோலிலிருந்து தோல் தொடர்பு மூலம் மக்களிடையே பரவுகிறது.

இந்த வைரஸ் பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று பலர் நினைக்கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள HPV தடுப்பூசிகளை போட்டு கொள்ள சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனென்றால் இது ஆண்களுக்கும் பல விதமான புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் இந்தியாவில் HPV தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு சிறுவர் மற்றும் சிறுமியருக்கு இந்த தடுப்பூசி போடுவதற்கான பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சில HPV நோய் தொற்றுகள் தானாகவே சரியாகி விடும் என்றாலும் சில குறிப்பிட்ட வகை HPV புற்றுநோய்களை உண்டாக்கும். உலகின் சில நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் காட்டிலும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருக்கிறது.

இதில் 70% HPV வைரஸால் ஏற்படுகிறது. எனவே அமெரிக்காவில் பள்ளி மட்டத்திலேயே சிறுவர், சிறுமியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் HPV வைரஸ் இருபாலாருக்குமே தொண்டையின் பின்பகுதியிலும், நாக்கின் அடிப்பகுதி மற்றும் டான்சில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஓரோபார்னீஜியல் கேன்சரை உண்டாக்குகிறது.



ஏன் 9 - 15 வயது சிறுவர்களுக்கு HPV தடுப்பூசி?

ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புள்ள நாடாக இந்தியா இருக்கும் அதே நேரம், சிறுவர்களை இந்த அபாயத்திலிருந்து காக்கும் கடமை உள்ளது. 9 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் குத புற்றுநோய் உள்ளிட்ட பல சிக்கலை தவிர்க்க இந்த தடுப்பூசியை பெறலாம். எனவே 9 வயதை எட்டியவுடன் சிறுவர் மற்றும் சிறுமியர் என இருவருக்கும் HPV தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக சிறுவர்களுக்கு ஆரம்ப ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதாலும், சிறந்த ஆன்டிபாடி ரெஸ்பான்ஸை வெளிப்படுத்துவதாலும் 9 - 15 வயது சிறந்ததாக கருதப்படுகிறது. 15 வயதிற்கும் போடப்படும் இந்த தடுப்பூசியால் சிறுவர்கள் பாதுகாக்கப்பட்டு பார்ட்னர் டூ பார்ட்னர் HPV வைரஸை பரிமாற்ற முடியாது.

இரவு தூங்கும் முன் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது நல்லதல்ல... ஏன் தெரியுமா..?

சிறுவர்களுக்கான டோஸேஜ் அளவு :

9 - 15 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு 2 டோஸேஜ் மட்டுமே போதுமானது. ஆனால் இந்த வயதளவு தாமதமானால் 3 டோஸ்கள் தேவைப்படும்.



HPV ஏன் சிறுவர்களுக்கு அச்சுறுத்தல்?

HPV பல வகை புற்றுநோய்களை ஏற்படுத்தும். இதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை மட்டும் ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். HPV-யால் உருவாகும் மற்ற கேன்சர்கள் தாமதமாக கண்டறியப்படலாம். எனவே HPV தடுப்பூசி சிறுவர்களுக்கு இத்தகைய அச்சுறுத்தல்களை தடுக்கிறது. பல மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்டவை சிறுவர்களுக்கு HPV தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தி உள்ளன. தவிர ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெர்முடா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, நியூசிலாந்து மற்றும் செர்பியா உள்ளிட்ட நாடுகளில் இருபாலருக்கும் பொருத்தமான தடுப்பூசி திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Kids Health, Vaccin

அடுத்த செய்தி