• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கைக்குழந்தை காரணமே இல்லாமல் அழுகிறது எனில் உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

கைக்குழந்தை காரணமே இல்லாமல் அழுகிறது எனில் உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

குழந்தை வளரப்பு

குழந்தை வளரப்பு

ஏதாவது வேண்டும் என்றாலோ, அம்மாவின் கவனத்தை தன் மீது திருப்ப வேண்டும் என்றாலோ, அல்லது ஏதாவது அசௌகரியமாக உணரும் போது குழந்தைகள் அழுகை வழியாகத்தான் தெரியப்படுத்துவார்கள்.

  • Share this:
குழந்தை வளரப்பு ஒரு கலை. அதிலும் கைக்குழந்தைகளை மிகவும் கவனமாகவும் கையாள வேண்டும். கைக்குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும், சிரிப்பும், சின்ன சின்ன சேட்டைகளும் ரசிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், அதே நேரத்தில் கைக்குழந்தைகள் அடிக்கடி அழுவார்கள்.

பல நேரங்களில், குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்பதை அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. குழந்தை பசிக்காக அழும் என்று பெரும்பாலான தாய்மார்கள் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தையின் அழுகையில் பல்வேறு காரணங்கள் உள்ளன. கைக்குழந்தைகள் என்னென்ன காரணங்களுக்காக அழுகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அழுகை என்பது குழந்தைகளின் மொழி

அழுகை என்பது குழந்தையின் மொழி. ஏதாவது வேண்டும் என்றாலோ, அம்மாவின் கவனத்தை தன் மீது திருப்ப வேண்டும் என்றாலோ, அல்லது ஏதாவது அசௌகரியமாக உணரும் போது குழந்தைகள் அழுகை வழியாகத்தான் தெரியப்படுத்துவார்கள். அவ்வகையில் குழந்தைக்குப் பசிக்கும் போதும் அழும், வயிறு நிறைய பால் குடித்த பிறகு கூடுதலாக பாலூட்டும் போதும் அழும்.

குழந்தையின் அழுகையும் பசியும்

தூக்கத்திலிருந்து கைக்குழந்தைகள் விழித்துக் கொள்ளும் போதே அல்லது நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போது, சட்டென்று சிணுங்கலுடன் தொடங்கி, பெரிதாக அழத் தொடங்கும். பெரும்பாலான சமயங்களில் கைக்குழந்தைகள் அதுதானே பசிக்காகத்தான் அழுகிறது என்று நினைத்து பாலூட்டத் தொடங்குவார்கள். எனவே, பாலூட்டும் தாய்மார்கள் குழந்தையை பசியை அறிந்து பால் கொடுக்க வேண்டும்.



கைக்குழந்தைகள் அழுவதற்கான மற்ற காரணங்கள்

சில குழந்தைகள் யாராவது தூக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பெரியவர்களின் கவனத்தை ஈர்க்க அழத் தொடங்கும். அம்மாவோ அல்லது குடும்பத்தில் யாரேனும் ஒருவர் தூக்கிக் கொண்ட உடனே குழந்தையின் அழுகை நின்றுவிடும். சில சமயங்களில், தாயின் கதகதப்பான அரவணைப்பு தேவைப்படும். அப்போது வேறு யார் தூக்கி வைத்துக் கொண்டாலும் குழந்தையின் அழுகை நிற்காது.

பெற்றோர் கவனத்திற்கு… குழந்தைகளின் மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் இந்த செயல்களை செய்துவிடாதீர்கள்!

 

சில நேரங்களில் குழந்தைக்கு தேவைக்கு அதிகமான ஆடைகளை அணிவிக்கும் போது, அசௌகரியமாக உணர்வைத் தரும்.
டயாப்பர் அணிவித்து இருக்கும் போது, சிறுநீர் கழித்து ஈரமாக உணர்ந்தால் குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால் அழும்.

ஆடையில் ஏதாவது ஒவ்வாமை ஏற்படக் கூடிய அறிகுறிகள் தோன்றும் போதே குழந்தைகள் அதை அழுகையின் வழியாக வெளிப்படுத்தும்.



குழந்தைகள் அழும் போது என்ன செய்ய வேண்டும்

பொதுவாக கைக் குழந்தைகள் அழத் தொடங்கியவுடன், தாய்மார்கள் குழந்தையை கையில் ஏந்தி சில நிமிடங்கள் சமாதானப் படுத்த முயற்சி செய்யலாம். நீண்ட நேரம் குழந்தை விடாமல் அழுதால், ஆடைகளை நீக்கி உடலில் ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். குழந்தைக்கு எந்த ஆடை வசதியாக இருக்கிறதோ, அதை அணிவிக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்தில் குழந்தையை வைத்திருக்கலாம். ஆடைகளை அல்லது குழந்தை கம்பளி / போர்வையை இறுக்கமாக சுற்றக் கூடாது. அவ்வபோது டயாப்பர்களை மாற்ற வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: