பெற்றோராகிய நம்மில் இருந்து உருவாகும் குழந்தைகள் நம்மிடம் இருந்து தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான ஒரு விஷயம் பொய் பேசுவது ஆகும். இதனை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து கற்றிருக்கலாம் அல்லது கண்டிப்பான பெற்றோரின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க பயன்படுத்தலாம். முதல் முறையாக தங்கள் குழந்தை பொய் சொல்வதை பெற்றோர்கள் கண்டுபிடிக்கும்போது அது ஆச்சரியமான மற்றும் கடினமான தருணமாக இருக்கும். குழந்தைகள் பொய் பேசுவது என்பது அவர்களின் சூழ்நிலை மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடும்.
உங்கள் பிள்ளைகள் பொய் பேசுவதாக நீங்கள் உணர்ந்தால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முயல வேண்டும். ஒரு குழந்தை உண்மையைச் சொல்வதற்குப் பதிலாக பொய்யை நாடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை அவர்கள் தங்களை நல்ல பிள்ளையாக காட்டிக்கொள்ள முயற்சிக்கலாம், மற்றவர்கள் முன் சமத்து பிள்ளையாக இருக்க விரும்பலாம், தங்களது தவறுகளை வெளிக்காட்ட விரும்பாமல் இருக்கலாம், இல்லையெல் உண்மையை சொல்ல பயப்படவோ அல்லது வெட்கப்படவோ செய்யலாம்.
எது எப்படியாக இருந்தாலும் குழந்தைகள் பேசும் பொய் பின்நாட்களில் பெரும் குற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே தவறுகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது. சில குழந்தைகள் உணர்வுபூர்வமாக பொய் சொல்ல மாட்டார்கள், அது அவர்களின் பழக்கத்தின் ஒரு பகுதியாக மாறும். இந்த பழக்கத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே உங்கள் குழந்தையை உண்மையைச் சொல்ல ஊக்குவிக்க நீங்கள் முயற்சிக்கக்கூடிய சில உக்திகளை கொடுத்துள்ளோம்.
1. உண்மையை பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையை பெறுங்கள்:
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பிணைப்பு உறுதியாக இருக்க வேண்டும். குழந்தைகள் தெரியாமல் சின்ன தவறு செய்தால் கூட அவர்களிடம் அதிக கண்டிப்புடன் நடந்து கொண்டால், பிள்ளைகள் தங்களது தவறுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். குழந்தைகள் திறந்த மனதுடன் உங்களிடம் உண்மையை பேச வேண்டும் என்றால், நீங்கள் அவர்களை மன்னிக்க தயாராக இருக்க வேண்டும்.
உங்கள் பிள்ளை தவறு செய்யும் போது கோபப்படவோ அல்லது வருத்தப்படவோ கூடாது. இல்லையெனில், அடுத்த முறை உங்களிடம் இருந்து உண்மையை மறைக்க இன்னும் கடுமையாக முயற்சிப்பார்கள். அவர்களை ஏற்றுக்கொண்டு, நேர்மையான அணுகுமுறை எப்போதும் தண்டனைக்கு வழிவகுக்காது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். குழந்தை ஒரு தவறு செய்து மாட்டிக்கொள்ளும் போது, அதனை கோபமாக எதிர்கொண்டால் அடுத்த முறை தனது தவறை மறைக்க கடுமையாக முயற்சிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு ஈட்டிங் டிஸ்ஆர்டர் இருப்பதை கண்டறிவது எப்படி..?
2. ஊக்கம் தரும் கதைகளை கூறுங்கள்:
ஒரு ஆய்வின் முடிவின் படி, நேர்மறையான கதைகளில் வரும் முடிவு, தவறு செய்து மாட்டிக்கொண்டு தண்டனை பெறுபவர்களின் கதையை விட நேர்மறையான எண்ணத்தை குழந்தைகளிடம் உருவாக்குவதாகவும், இதனால் குழந்தைகள் பொய் சொல்லக்கூடாது உண்மையை பேச வேண்டும் என எண்ணுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கதைப்புத்தகங்களைத் தவிர, உங்கள் பிள்ளைக்குத் தெரிந்த நபர்களின் சம்பவங்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் நேர்மையான செயல் அவர்களுக்கு எவ்வாறு உதவும் என்பதையும் விளக்கலாம்.
3. ரோல் மாடலாக மாறுங்கள்:
பெற்றோர்கள் உண்மையை சொல்லி விளக்க முடியாத சூழ்நிலையில் பொய் பேசுவது, சண்டை போன்றவற்றை தவிர்ப்பதற்காக பொய் சொல்வது போன்ற நடவடிக்கைகளை குழந்தைகள் முன்பு செய்வது, அவர்களையும் பொய் பேசத் தூண்டும். குறிப்பாக குழந்தைகளிடமோ அல்லது வேறு யாரிடமோ நீங்கள் பொய் பேசுவதை அவர்கள் கவனித்தால், ‘அப்பா, அம்மாவே பொய் பேசுறாங்க, நம்ப பேசினால் என்ன?’ என்ற எண்ணம் துளிர்விடலாம்.
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ ஆய்வில், மற்றொரு அறையில் மிட்டாய் இருப்பதாக பெரியவர்கள் சொன்ன பொய்யை கேட்ட தொடக்கப்பள்ளி குழந்தைகள், தவறான நடத்தையை மறைக்க அதிக அளவில் பொய் சொல்ல வாய்ப்புள்ளதைக் கண்டறிந்துள்ளனர். எனவே பிள்ளைகளை உண்மையானவர்களாக வளர்க்க வேண்டுமென்றால் அவர்களுக்கு பெற்றோரான நீங்கள் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.