ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தாயின் உடல் சூடு.. குறைபிரசவ குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கிய விஷயத்தை சொன்ன உலக சுகாதார நிறுவனம்!

தாயின் உடல் சூடு.. குறைபிரசவ குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கிய விஷயத்தை சொன்ன உலக சுகாதார நிறுவனம்!

கங்காரு தாய் பராமரிப்பு

கங்காரு தாய் பராமரிப்பு

ஒவ்வொரு குழந்தைக்கும் வளமாக உயிர்வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு உயர்ந்த தொழில்நுட்பங்கள் மட்டுமே வழி அல்ல. குழந்தைகளின் மேம்பாட்டிற்கு கொடுப்பதின், சொந்தத்தின் பாசத்தை மையமாக கொண்ட இந்த முறை அணுகல் பெரிதும் உதவும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

உலக சுகாதார நிறுவனம் (WHO) குறைப்பிரசவ மற்றும் பிறக்கும் போது எடை குறைந்த குழந்தைகளின் உயிர்வாழ்வு மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்த, புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.

குழந்தைகளை தோலோடு தோல் வைத்து பராமரிப்பது குழந்தைகளுக்கு கருப்பைக்கு வெளியே உள்ள வாழ்க்கையை துரிதமாக சரிசெய்ய உதவுகிறது, தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும். குழந்தையுடன் உறவை வளர்ப்பதற்கும் உதவுகிறது. தோலோடு தோல் வைத்து பராமரிப்பது என்பது குழந்தையைப் பிறந்த பிறகு அவ்வப்போது சுமார் ஒரு மணி நேரம் தாயின் மார்பில் நேரடியாகப் படுக்க வைத்து போர்வையால் போர்த்தி பழக்கப்படுத்துவத்தைக் குறிக்கும்.

இந்த புதிய வழிகாட்டுதல்கள், கங்காரு தாய் பராமரிப்பு என அழைக்கப்படுகிறது. விரைவாக பிறந்த அல்லது எடை குறைந்த குழந்தைகளை இன்குபேட்டர்களில் வைக்காமல் பிறந்த உடனேயே தோலோடு தோல் வைத்து பராமரிப்பது தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இது முன்பு பழக்கத்தில் இருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்மாறாக இருந்தாலும் இது சிறந்த பலனைத் தருவதாக உலக சுகாதார நிலையம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : 'மைனர் என்றாலும் உண்மையான காதல் குற்றமல்ல' - போக்சோ வழக்கில் உத்தரவிட்ட டெல்லி நீதிமன்றம்!

" குழந்தைகள் இந்த உலகில் ஆரோக்கியமாக செழித்து உயிர்வாழ முடியும். ஒவ்வொரு குழந்தைக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு உயர்ந்த தொழில்நுட்பங்கள் மட்டுமே வழி அல்ல. குழந்தைகளின் மேம்பாட்டிற்கு கொடுப்பதின், சொந்தத்தின் பாசத்தை மையமாக கொண்ட இந்த முறை அணுகல் பெரிதும் உதவும்" என்று WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

குறைப்பிரசவம் ஒரு பொது சுகாதார கவலை

குறைப்பிரசவம் என்பது கற்போதிய காலத்தில் அதிகரித்து வருகிறது. சுமார் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறப்பதாகவும், 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு இந்த குறைபாடே முக்கிய காரணமாக உள்ளது.

அவர்கள் எங்கு பிறக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, குறைப்பிரசவ குழந்தை உயிர்வாழும் வாய்ப்பைக் குறைக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் உள்ளன. அதிக வருமானம் உள்ள நாடுகளில் 28 வாரங்களில் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உயிர்வாழும் அதே வேளையில், இந்த எண்கள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 10% க்கும் குறைவான உயிர்வாழ்வு விகிதங்களைக் கொண்டிருக்கிறது.

உயிர்வாழ்வதற்கு தாயுக்கும் சேயுக்குமான தொடர்பு முக்கியமானது

பிரசவத்தின் போதும் அதற்குப் பின்னரும் தரமான பராமரிப்பு, பொதுவான நோய்த்தொற்றுகளைத் தடுத்தல் மற்றும் நிர்வகித்தல், மற்றும் கங்காரு தாய் பராமரிப்பு போன்ற சாத்தியமான, செலவு குறைந்த நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான குறைமாதக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும் என்று குறிப்பிடுகிறது.

இதையும் படிங்க : நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும்! - எப்படி தெரியுமா?

இன்குபேட்டர்களில் வைத்து குழந்தைகளை தேற்றி பின்னர் தாயிடம் கொடுப்பதை விட இந்த கங்காரு தாய் பராமரிப்பு தாய்-சேய் நலன், பராமரிப்பு, தாய்ப்பால் எடுத்துக் கொள்வது என எல்லா விதங்களில் நல்ல பலனைத் தருவதாக கூறியுள்ளனர்.

"பெற்றோருடனான முதல் அரவணைப்பு உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, குழந்தைகளின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு முற்றிலும் முக்கியமானது" என்று WHO வின் மருத்துவ அதிகாரி டாக்டர் கரேன் எட்மண்ட் கூறினார்.

உயர் தொழில்நுட்ப உபகரணங்களோ அல்லது நம்பகமான மின்சார விநியோகமோ தேவைப்படாததால், இந்த புதிய பரிந்துரைகளை குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Baby Care, WHO