• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் குழந்தை நீண்ட நேரம் செல்போன் பார்க்கிறதா?அப்ப இந்த அறிகுறி இருக்கான்னு செக் பண்ணுங்க..

உங்கள் குழந்தை நீண்ட நேரம் செல்போன் பார்க்கிறதா?அப்ப இந்த அறிகுறி இருக்கான்னு செக் பண்ணுங்க..

காட்சி படம்

காட்சி படம்

உங்கள் குழந்தையின் கண்களில் இந்த பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது.

  • Share this:
    கொரோனாவுக்குப் பிறகு குழந்தைகள் தங்கள் கல்வியை ஆன்லைன் மூலம் கற்றுவருகின்றனர். நாள்தோறும் அதிகமான நேரத்தை செல்போன் மற்றும் கம்யூட்டர் முன்பு செலவிடுகின்றனர். இதனால், அவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, அதிக நேரம் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் திரைகள் முன்பு செலவிடுபவர்களுக்கு கண்களில் அரிப்பு, கண்ணீர் வெளியேறுதல் ஆகிய பிரச்சனைகள் உருவாகும். இத்தகைய பாதிப்புகள் இருந்தால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது.

    கண் பரிசோதனை : குழந்தைகளின் கண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பெற்றோர்களுக்கு கூடுதல் கவனம் இருக்க வேண்டும். குழந்தைகள் மருத்துவர் மற்றும் பல் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை மேற்கொள்வது போல், சிறுவயதில் இருந்து கண் மருத்துவரையும் பார்த்து குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்சனைகளை தொடக்கதிலேயே சிகிச்சை எடுத்து குணப்படுத்த முடியும்.

    குழந்தை பிறந்து 6 மாதத்தில் இருந்து கண் பரிசோதனை செய்யலாம். பின்னர், 3 வயது மற்றும் 5 அல்லது 6 வயதுகளில் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. கட்டாயமாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, ஏதேனும் கண் தொடர்பான பிரச்சனைகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி கண்ணாடி அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். மரபுவழி கண் பிரச்சனை இருக்கும் குழந்தகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, தொடர் பரிசோதனை எடுத்துக்கொள்ளும்போது, அவர்களை பெரிய பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றலாம்.

    குழந்தைக்கு கண் பரிசோதனை : பிறந்த குழந்தையின் கண்கள் 6 மாதத்தில் முழு பார்வைத் திறனையும் எட்டும். அப்போது, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யும்போது குழந்தைக்கு கண் தொடர்பான பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். குழந்தையின் கண்கள் நன்றாக இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள மருத்துவர் லைட் அடித்து பரிசோதனை செய்வார். குழந்தைகள் கண்களை சரியாக மூடி திறக்கும்பட்சத்தில் கண் பிரச்சனை இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம். மேலும், பொருள்கள் இருப்பதை அவர்களால் கிரகித்துக்கொள்ள முடிகிறதா? என்ற சோதனையையும் செய்து பார்க்க வேண்டும்.

    also read : பெருந்தொற்று காலத்தில் அதிகரித்த குழந்தைகள் அடிபுடி… கையாள்வது எப்படி?

    மழலையருக்கு பரிசோதனை :  ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லும் குழந்தைகள் எழுத்துகளை படிக்க தவறினால் அல்லது கண்களில் கூச்சம் ஏற்பட்டால், அவர்களுக்கு கண்களில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளன. அவர்களுக்கு விளக்கப்படங்களுடன் கூடிய எழுத்துக்கள் கொடுக்கப்படும். ரெட்னோஸ்கோபி (Retinoscopy) ஆய்வு மூலம் கண்களின் ரெட்டினா பரிசோதனை செய்யப்படும். மேலும், முப்பரிமான கண்ணாடிகள், ஸ்டீரியோடைப் புள்ளிகள் ஆகியவற்றின் மூலம் ஆய்வுக்குட்படுத்தி, கண்களை பரிசோதனை செய்து பிரச்சனைகளை கண்டறியலாம்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனை : குழந்தைகள், தங்களுக்கு ஏற்படும் கண் பிரச்சனையை சில நேரங்களில் வெளிப்படையாக காண்பிப்பார்கள். அதாவது, வெளிச்சத்தை இனம் காண்பதில் சிக்கல், சிவப்பு கண்கள், குறைவான ஒளி உணர்திறன் ஆகியவை முக்கியமான காரணங்களாகும். மேலும், தூரத்தில் இருக்கும் பொருட்களை பார்த்தில் சிக்கல், எழுத்துகளை வாசிக்க முடியாது, தலைவலி, தொலைக்காட்சியை மிகவும் அருகில் அமர்ந்து பார்ப்பது போன்றவை அவர்களுக்கு இருக்கும் கண் பிரச்சனைக்கான அறிகுறிகளாகும். இதனை பெற்றோர்கள் அலட்சியம் செய்யாமல் உடனடியாக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று தகுந்த சிகிச்சையை கொடுக்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: