முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப பரிசோதனை இந்த நேரத்தில்தான் செய்ய வேண்டுமா..? கருவுற நினைக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்..!

கர்ப்ப பரிசோதனை இந்த நேரத்தில்தான் செய்ய வேண்டுமா..? கருவுற நினைக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருக்கும் பட்சத்தில், துல்லியமான முடிவுகளை பெற நீங்கள் சோதனை எடுப்பதற்கு முன் 35 முதல் 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

பொதுவாக கருவுற வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலம் தள்ளிப்போனாலே, ஒருவேளை கருவுற்றிருக்கிறோமோ என்ற சந்தேகம் வரும். இருப்பினும், மாதவிடாய் தள்ளிப்போவதை வைத்து அதனை கணிக்க முடியாது. இப்போதெல்லாம் கர்ப்ப பரிசோதனை கருவி மூலம் பெண்கள் கருவுற்றிருக்கிறார்களா? இல்லையா? என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதுபோன்ற கருவி பயன்பாட்டில் இல்லாத காலத்தில், பெண்கள் வீட்டிலேயே சில சோதனைகள் மூலம் கண்டுபிடிப்பது வழக்கம்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஓவர்-தி-கவுண்டர் (OTC) கர்ப்ப பரிசோதனைகள் மூலம் அதனை விரைவில் கண்டறிய முடியும். இருப்பினும் பல பெண்களுக்கு இந்த சோதனையை எப்போது செய்ய வேண்டும் என்ற சந்தேகம் இருக்கிறது. ஏனெனில் துல்லியமான முடிவுகளை பெற நீங்கள் சரியான நேரத்தில் இந்த சோதனை கருவியை பயன்படுத்த வேண்டும். பரிசோதனையை மிக விரைவாக மேற்கொள்ளும் போது நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் கூட, அது தவறான முடிவைக் கொடுக்கும். எனவே கர்ப்ப பரிசோதனைக் கருவியை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

சோதனை கிட் எவ்வாறு செயல்படுகிறது?

கர்ப்ப சோதனை ஓடிசி என்ற டெஸ்ட் கிட் மூலம் செய்யப்படுகிறது. இந்த டெஸ்ட் கிட் பெண்களின் சிறுநீரில் ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) இருக்கிறதா என்று சோதனை செய்கிறது. HCG என்பது ஒரு வகை ஹார்மோன் ஆகும். இது கருவுற்ற பெண்களின் சிறுநீரில் காணப்படுகிறது. கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே அல்லது உங்கள் கருப்பை புறணியுடன் இணைந்தால் இந்த ஹார்மோன் வெளியிடப்படுகிறது.

ஃபலோபியன் குழாயில் விந்தணுக்களால் முட்டைகளை கருத்தரித்த 6-7 நாட்களுக்கு பிறகு இந்த செயல்முறை நடக்கிறது. மேலும் 2 முதல் மூன்று நாட்களக்கு இது இரட்டிப்பாகி கொண்டே இருக்கும். நீங்கள் இந்த கிட் மூலம் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்துவிட்டால் அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அல்லது நீங்கள் மருத்துவரை சந்தித்தும் ரத்த மாதிரி பரிசோதனையை செய்துக் கொள்ளலாம். சிறுநீர் பரிசோதனையை விட ரத்த பரிசோதனை மிக துல்லியமான முடிவுகளை காண்பிக்கும்.

சோதனை செய்ய சரியான காலம் எது?

உங்கள் மாதவிடாய் காலம் தள்ளிப்போன பிறகு கர்ப்ப பரிசோதனையை செய்யலாம். அதுவே உகந்த நேரமாக இருக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிலும் உங்கள் மாதவிடாய் காலம் தள்ளிப்போகும் முதல் நாளிலேயே கூட நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம். சில சமயங்களில் உங்கள் மாதவிடாய் காலம் தள்ளிபோவதற்கு 4 அல்லது 5 நாட்களுக்கு முன்னதாக சோதனை செய்து பார்த்தால் அது கருவுற்ற நிலையை உங்களுக்கு காண்பிக்கும்.

அதாவது, சில கர்ப்ப பரிசோதனை கருவி, கர்ப்பத்தின் போது உற்பத்தியாகும் HCG ஹார்மோன்களை பீரியட்ஸ் தேதி வருவதற்கு முன்னதாகவே கண்டுபிடித்துவிடும். ஏனெனில் மாதவிடாய் ஏற்பட வேண்டிய நாளுக்கு முன்னரே இத்தகைய ஹார்மோன்கள் உங்களது உடலில் உற்பத்தியாகிவிடும். ஆனால் பீரியட்ஸ் தேதி தள்ளிபோவதற்கு முன்னதாக நீங்கள் பரிசோதனை செய்யக்கூடாது. உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருக்கும் பட்சத்தில், துல்லியமான முடிவுகளை பெற நீங்கள் சோதனை எடுப்பதற்கு முன் 35 முதல் 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.

சோதனை செய்ய சரியான நேரம் என்ன?

கர்ப்ப சோதனை செய்ய எப்படி ஒரு காலம் வரையறுக்கப்படுகிறதோ, அதேபோல துல்லியமான முடிவுகளை தெரிந்துகொள்ள சரியான நேரமும் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காலையில் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் துல்லியமான முடிவை அளிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஏனென்றால், காலையில் சிறுநீர் அதிகமாக வெளியேறும் என்பதால், அதில் HCG ஹார்மோன் செறிவு அதிகமாக இருக்கும். இதன் பொருள் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் சாதகமான முடிவை தருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

பெண்களை அச்சுறுத்தும் கருப்பை புற்றுநோய் : உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

எனவே, உங்கள் பீரியட்ஸ் காலம் தாமதமாகும் போது இந்த சோதனையை செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மாதாந்திர கால சுழற்சிக்கு முன் நீங்கள் சோதனை எடுக்கும் சமயங்களில், நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கலாம். இதனால் உங்கள் சிறுநீர் நீர்த்துப்போகும் போது அது தவறான-எதிர்மறையான முடிவுகளை தர வாய்ப்புகள் உள்ளது.

எனவே, வீட்டிலேயே சோதனை செய்யும்போது உங்கள் பீரியட்ஸ் காலம் தள்ளிப்போனது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதேசமயம், சிலர் கருவுற்றலை தடுக்க சில பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தினாலும், அவர்கள் கருவுறும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் உங்கள் பீரியட்ஸ் காலம் தள்ளிப்போகும் போதோ அல்லது கருவுற்றதற்கான சில அறிகுறிகளை கொண்டிருக்கும் போதோ கட்டாயம் இந்த சோதனையை செய்வது அவசியம்.

First published:

Tags: Pregnancy test