Home /News /lifestyle /

Baby Poop : உங்கள் கைக்குழந்தைக்கு உணவு அலர்ஜி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி..?

Baby Poop : உங்கள் கைக்குழந்தைக்கு உணவு அலர்ஜி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி..?

 உணவு அலர்ஜி

உணவு அலர்ஜி

பெரியவர்களுக்கு மட்டும் தான் அலர்ஜி உண்டாகி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்பது கிடையாது. இது குழந்தைக்குமே பொருந்தும்.

குழந்தைகளை பொறுத்தவரை, அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதிலுமே எழுதப்படாத விதி இருக்கிறது. அதே நேரத்தில் அம்மா சாப்பிடும் உணவுகள் செரிமானமாகா விட்டால், அது குழந்தையையும் பாதிக்கும். எனவே குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் வரை அம்மா மற்றும் குழந்தை சாப்பிடும் உணவு இருவருக்கும் ஆரோக்கியமானதாகவும், எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

கைக்குழந்தையைப் பொறுத்தவரை சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்கிறதா மற்றும் மலம் கழிக்கிறதா என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். பேபி பூப் என்று சொல்லப்படும் கழிவு பல நிறங்களில் பல வடிவங்களில் காணப்படும். கைக்குழந்தைக்கு உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளை வைத்து உடலில் என்ன விதமான பிரச்சனை அல்லது அலர்ஜி இருக்கிறது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும்.

குழந்தைகளில் காணப்படும் மில்க் புரோட்டீன் அலர்ஜி :

பெரியவர்களுக்கு மட்டும் தான் அலர்ஜி உண்டாகி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்பது கிடையாது. இது குழந்தைக்குமே பொருந்தும். அவர்களுக்கு பாலில் இருக்கும் புரதச்சத்து அவர்களுக்கு அலர்ஜியா என்பதை அவர்களின் கழிவிலிருந்து எளிதாக கண்டறியலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு மஞ்சள் நிற கழிவும் தாய்ப்பால் இல்லாமல் ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பிரௌன் நிறத்திலும், கெட்டியாகவும் கழிவு வெளியேறும்.



இதில் காணப்படும் மாற்றங்கள் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் குழந்தைக்கு சரியான இடைவெளியில் மலம் வெளியேறவில்லை என்றால் அது உணவு சம்பந்தப்பட்ட அலர்ஜியாக இருக்கக்கூடும். குறிப்பாக பசும் பாலில் இருக்கும் ஒரு சில புரத சத்துக்கள் குழந்தைக்கு ஒவ்வாமை குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி தீவிரமான மலச்சிக்கலையும் உண்டாக்கும். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கும்.

குழந்தை பிறந்த பின் உண்டாகும் மனச்சோர்வு எவ்வளவு காலம் நீடிக்கும்..? அந்த சமயத்தில் செய்ய வேண்டியவை , செய்யக்கூடாதவை..

உங்கள் குழந்தைக்கு பசும்பாலில் இருக்கும் புரதத்தால் அலர்ஜி ஏற்படுகிறது என்றால் அதை நீங்கள் பின்வரும் அறிகுறிகள் வைத்து எளிதாக கண்டறியலாம்.

* குழந்தை எப்பொழுதுமே எரிச்சலான மனநிலையில் சிணுங்கிக்கொண்டே இருக்கும்
* வயிற்று வலி மற்றும் வயிறு உப்பசம் காணப்படும்
* வாந்தி எடுக்கும்
* அடிவயிறு பஞ்சு போல இருக்கும் மற்றும் ராஷஸ் தோன்றும்

இதை தவிர்த்து குழந்தைக்கு பேதியாகும். ஒரு நாளைக்கு அதிக முறை கழிவு வெளியேறும். மலம் வெளியேறும்போது அதில் ரத்தக் கசிவு ஏற்படலாம். டயாப்பரில் கழிவு திரவமாக அல்லது சளி போன்று காணப்படும். சில நேரங்களில் குழந்தைக்கு உடல் முழுவதும் சிவந்து போதல், வீசிங் ஆகியவை தீவிரமான அலர்ஜியைக் குறிக்கும்.



குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தையின் மலம் தண்ணீராக அல்லது ரத்தத்துடன் வெளியேறினாலோ, அல்லது சளி போன்ற இருந்தாலோ குழந்தைக்கு பாலில் இருக்கும் புரதத்தால் அலர்ஜி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை குழந்தைக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவும் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை அதாவது பால், தயிர், ஐஸ்க்ரீம், வெண்ணை என்று அனைத்தையுமே சிறிது காலம் வரை தவிர்க்க வேண்டும். ஃபார்முலா மில்க் கொடுக்கும் குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்படி வேறொரு ஃபார்முலா மில்க் வழங்க வேண்டும் இந்த அறிகுறிகள் சில நாட்களில் மறையும்.

குழந்தை வளர்ந்த பின்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி கொஞ்சம் கொஞ்சமாக பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அவர்களுக்கு மீண்டும் கொடுக்க தொடங்கலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு ஐந்து வயது ஆன பின்பு இந்த அலர்ஜி தானாகவே மறைந்துவிடும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food allergy, Kids Care

அடுத்த செய்தி