Home /News /lifestyle /

உங்கள் பேச்சை காது கொடுத்து கேட்காத பிள்ளைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது..?

உங்கள் பேச்சை காது கொடுத்து கேட்காத பிள்ளைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது..?

சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள்

சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள்

குழந்தைகளிடம் எப்போதும் ஒரே சாய்ஸ் கொடுத்து, அதை ஏற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. இரண்டு சாய்ஸ் கொடுத்து, அதில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னீர்கள் என்றால், அவர்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்வார்கள்.

உங்கள் வீட்டில் சுட்டிக் குழந்தைகள் இருக்கின்றனவா? அப்படியானால் நீங்களும் கூட இந்த அன்புத் தொல்லையை எதிர்கொண்டு வருவீர்கள். நீங்கள் அக்கறையோடு சொல்லும் எந்த விஷயத்தையும் உங்கள் குழந்தை காது கொடுத்து கேட்காது. தனக்கு எது பிடித்திருக்கிறது என தோன்றுகிறதோ, தனக்கு எது சரி என நினைக்கிறதோ, அதை செய்வதில் தான் குழந்தைகள் குறியாக இருக்கும்.

இத்தகைய சூழலில், உங்கள் செல்லக் குழந்தைகளை உங்கள் வழிக்கு கொண்டு வருவது எப்படி? அவர்களுக்கான நல்ல விஷயங்களை ஏற்க வைப்பது எப்படி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரவு உணவுக்கு சாதம் வேண்டுமா, ரோட்டி வேண்டுமா?

குழந்தைகளிடம் எப்போதும் ஒரே சாய்ஸ் கொடுத்து, அதை ஏற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. இரண்டு சாய்ஸ் கொடுத்து, அதில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னீர்கள் என்றால், அவர்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்வார்கள். குறிப்பாக, உணவில் இந்த வாய்ப்பு கிடைக்கும்போது ஆர்வமுடன் சாப்பிட தொடங்குவார்கள்.

வாயை மூடு என அதட்ட கூடாது

குழந்தைக்கு எல்லா விவரமும் தெரிந்திருக்காது. தனக்கு தெரிந்ததை, தெரிந்த மொழிநடையில் குழந்தை பேசிக் கொண்டிருக்கும். உடனே வாயை மூடு என்று அதட்டக் கூடாது. மாறாக, இது தவிர, இதை இப்படி பேச வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.



இதை அடுத்தமுறை வாங்குவோம்

வீடு முழுக்க விளையாட்டு பொம்மைகள் இருந்தாலும் புதிதாக இன்னொன்று வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடிக்க தொடங்கும். அந்த சூழலில், இது வேண்டாம், இது நன்றாக இல்லை என கூறுவதற்குப் பதிலாக, இது நன்றாக இருக்கிறது ஆனால், வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்திய பிறகு, இதை அடுத்த முறை வாங்குவோம் என கூறலாம்.

குழந்தைகளை எந்த வயதில் டியூஷன் சேர்ப்பது சிறந்தது..? பெற்றோர்களுக்கான கைட்லைன்

அமைதி அடைய அனுமதியுங்கள்

சில சமயம் உங்கள் குழந்தை அடம்பிடிக்கும் போது நீங்கள் என்ன சொன்னாலும் பலன் இருக்காது. அத்தகைய சூழலில், குழந்தை தானாகவே அமைதியாகட்டும் என்று விட்டு விடுங்கள்.

ரெடி, ஸ்டார்ட் 1, 2, 3…

ஒரு செயலை வெறுமனே செய்ய சொல்வதைக் காட்டிலும், நான் இப்போது 1, 2, 3 சொல்கிறேன், உடனே தொடங்க வேண்டும் என்று, அந்த செயல் குறித்த ஆர்வத்தை குழந்தைகளிடம் தூண்டுங்கள். குழந்தைகளை திட்டுவதை கைவிட வேண்டும்.



உதவி வேண்டுமா?

குழந்தை தனது அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்பதற்காக திட்டுவதைக் காட்டிலும், “சரி, நீ அறையை சுத்தம் செய், நானும் உனக்கு உதவுகிறேன்’’ என்று அன்போடு சொல்லுங்கள்.

குழந்தைகளுக்கு தாய் மொழியை கற்பிப்பது எப்படி..? அதன் அவசியம் என்ன..?

10 நிமிடம் கழித்து கிளம்பலாமா?

உங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் குழந்தை தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறது என்றால், “சரி இப்போது கிளம்புவோமா அல்லது இன்னும் 10 நிமிடம் இருந்துவிட்டு கிளம்புவோமா’’ எனக் கேளுங்கள். இடைப்பட்ட நேரத்தில் குழந்தை தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.

மென்மையாக பேசவும்

உங்கள் குழந்தை சத்தமாக பேசும்போது, நீங்கள் உரக்க பேசினீர்கள் என்றால் அது எரிச்சல் உணர்வு ஏற்படக் காரணமாக அமையும். ஆகவே, குழந்தையிடம் எப்போதும் மென்மையாக பேசவும்.



தவறில் இருந்து என்ன கற்றுக் கொண்டாய்

குழந்தை ஏதேனும் தவறு செய்து விட்டால் அல்லது ஏதேனும் கெட்ட குணம் அதனிடம் இருந்தால் அதற்காக திட்டுவதை விடுத்து, அதில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டாய் என கேளுங்கள் அல்லது பாடத்தை உணர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Parenting Tips

அடுத்த செய்தி