ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இளம் பிள்ளைகளின் கிரஷ்: பள்ளி செல்லும் பிள்ளை கிரஷ் பற்றி பேசுவதை எப்படி எதிர்கொள்வது..?

இளம் பிள்ளைகளின் கிரஷ்: பள்ளி செல்லும் பிள்ளை கிரஷ் பற்றி பேசுவதை எப்படி எதிர்கொள்வது..?

 இளம் பிள்ளைகளின் கிரஷ்

இளம் பிள்ளைகளின் கிரஷ்

தங்களுடைய பெற்றோரிடம் டீன் ஏஜ் பிள்ளைகள் தான் தங்களுடைய நெருக்கமான தோழன் அல்லது தோழி பற்றி பேச தயங்குவார்கள். ஆனால் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு யார் மீதாவது ஈர்ப்பு ஏற்படும்போது அது அவர்களின் பார்வைக்கு தவறாகத் தெரியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எந்த வயதிலும் யார் மீதும் ஈர்ப்பு வரும். சில நேரங்களில் ஈர்ப்பு தான் காதலாக மாறும். அதுவும் பள்ளிப் பிள்ளைகள் மற்றும் கல்லூரிகளில் பிடித்தவர் மீது க்ரஷ் ஏற்படுவது உண்டு. பத்து வயது குழந்தைக்கு கூட உடன் படிக்கும் அல்லது பக்கத்து வீட்டில் இருக்கும் சக வயதினர் மீது கிரஷ் தோன்றும். இது இயல்பானது தான். தனக்கு பிடித்த ஒரு ஆண் அல்லது பெண்ணைப் பற்றி பல குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் வெளிப்படையாகக் கூறுவார்கள். உங்கள் பிள்ளை அப்படி ஒருவர் மீது ஈர்ப்பு இருக்கிறது என்பதை உங்களிடம் கூறும் போது, நீங்கள் அதை பெரிய பிரச்சனையாக மாற்றி கத்தி கூப்பாடு போடக் கூடாது.

தங்களுடைய பெற்றோரிடம் டீன் ஏஜ் பிள்ளைகள் தான் தங்களுடைய நெருக்கமான தோழன் அல்லது தோழி பற்றி பேச தயங்குவார்கள். ஆனால் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு யார் மீதாவது ஈர்ப்பு ஏற்படும்போது அது அவர்களின் பார்வைக்கு தவறாகத் தெரியாது. எனவே பெற்றோரிடம் அதைப் பற்றி தைரியமாக பேசுவார்கள். அது மட்டுமின்றி அவர்கள் க்ரஷ் அல்லது இவனுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் என்ற வார்த்தைகளை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். வயது வித்தியாசம் இருப்பதால் இளம் பிள்ளைகள் கூறுவதை பெற்றோர்களால் அவ்வளவு எளிதாக சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.

10 வயது குழந்தை க்ரஷ் பற்றி பேசுவது இயல்பானதா?

ஒரு குழந்தை தனக்கு ஸ்பெஷலாக, நெருக்கமாக உணரும் ஒரு நபரின் மீது பெரியவர்கள் போல அன்பும் பாசமும் கொண்டிருப்பது தான் கிரஷ் என்று கூறப்படுகிறது. கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு கூட உடன் படிக்கும் குறிப்பிட்ட ஒரு குழந்தை மீது ஈர்ப்பு உண்டாக்கும். அந்த குறிப்பிட்ட குழந்தை தனக்கு பிடித்த குழந்தையிடம் ஸ்நாக்ஸ், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றைக் கொடுக்கும், பக்கத்தில் அமரும், உணவைப் பகிரும். 6 வயதில் இருந்தே குழந்தைக்கு கிரஷ் ஏற்படும்.

உங்களுக்குப் பிடித்த நபரிடம் பேசும் போது, அவருடன் இருக்கும் போது எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அதே போல குழந்தைக்கும் அந்த உணர்வு இருக்கும். கிரஷ் என்பது ஒருவர் மீது வரும் ஈர்ப்பு, அவருடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம், அவ்வளவு தான்.

குழந்தைகள் ஏன் சாப்பிட அடம் பிடிக்கிறார்கள்..? அவர்களை எவ்வாறு கையாள்வது..? உங்களுக்கான டிப்ஸ்

கிரஷ்கள் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எப்படி பேச வேண்டும் என்று யோசித்தால், உங்களுடைய கிரஷ் பற்றி நினைத்துப் பாருங்கள்! குழந்தைகள் தவிர்த்து, டீனேஜ் பிள்ளைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என்று எல்லாருக்கும் ஒருவர் அல்லது பலர் மீது க்ரஷ் இருக்கும். எனவே, குழந்தை கிரஷ் பற்றி நீங்கள் உடனடியாக ரியாக்ட் செய்ய வேண்டாம். கிரஷ் என்பது சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை தான் இருக்கும். அது காலப்போக்கில் மறைந்து விடும். எனவே, அதை சாதாரணமாக விஷயமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

* உங்கள் குழந்தை க்ரஷ் பற்றி பேசும் போது அமைதியாக இருங்கள்.

* அவசரமாக ரியாக்ட் செய்ய வேண்டாம்.

* குழந்தை கூறுவதை முழுதாக நிதானமாக கேளுங்கள்.

* நீங்கள் குழந்தையுடன் பேசாமல் இருப்பதோ கோப்படுவதோ அவர்களை குழப்பும்.

* க்ரஷ் என்பது ஒரு தற்காலிகமான விஷயம் தான். அது காலப்போக்கில் கடந்து விடும்.

குழந்தையிடம் நீங்கள் கோபமாக அல்லது கடுமையாக நடந்து கொள்வது அவர்களை பாதிக்கும். எதிர்காலத்தில் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்த முடியாதவாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Crush, Parenting Tips