முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளை நல்வழிபடுத்த 'நல்ல போலீஸ்-கெட்ட போலீஸ்' வளர்ப்பு முறை பற்றி தெரியுமா..?

குழந்தைகளை நல்வழிபடுத்த 'நல்ல போலீஸ்-கெட்ட போலீஸ்' வளர்ப்பு முறை பற்றி தெரியுமா..?

நல்ல போலீஸ் - கெட்ட போலீஸ் வளர்ப்பு முறை

நல்ல போலீஸ் - கெட்ட போலீஸ் வளர்ப்பு முறை

உண்மையில் இந்த குழந்தை வளர்ப்பு முறையில் கெட்ட போலீசாக வரும் பெற்றோர் தான் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பார். இவர் சற்று கொடுமையானவரான பிம்பத்தை உருவாக்கி விடுவார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய காலத்தில் பெற்றோர்கள் பலரும் குழந்தையை வளர்ப்பதில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் பெற்றோர்கள் அவர்களது இளமைப் பருவத்தில் இருந்த வாழ்க்கை முறைக்கும் தற்போதைய குழந்தைகள் வளரும் வாழ்க்கை முறைக்கும் மிகப் பெரும் அளவில் வித்தியாசம் உள்ளது.

எனவே பல பெற்றோர்களும் இன்றைய சூழலில் தங்களது குழந்தைகளை சரியாக வளர்க்க சற்று சிரமப்படுகின்றனர் என்று கூற வேண்டும். மேலும் அவர்களுக்கு உறவுகளின் மேன்மையைப் பற்றி புரிய வைக்கவும் மற்ற உலக விஷயங்களை பற்றி சொல்லிக் கொடுப்பதற்கும் சரியான ஒரு வழிமுறை தேவைப்படுகிறது. இதற்கு தான் நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் என்ற குழந்தை வளர்ப்பு முறையை பற்றி பணி கூறுகின்றனர்.

அது என்ன நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் குழந்தை வளர்ப்பு முறை?

அதாவது குழந்தைகளிடம் ஒருவர் மிக கண்டிப்பான ஒரு பெற்றோராகவும், மற்றொருவர் மிகவும் மென்மையானவராக, விளையாட்டுத்தனங்கள் நிறைந்தவராக தங்களது பிள்ளையை வளர்ப்பது ஆகும். மேலும் இந்த குணமானது பெற்றோர்கள் தாங்கள் வலிந்து ஏற்படுத்திக் கொண்டதாக இருக்கக் கூடாது. இயற்கையிலேயே அவர்களுக்கு அப்படி ஒரு குணம் இருந்தால் மட்டுமே இந்த குழந்தை வளர்ப்பு முறை கைகூடும்.

இதை எப்படி நடைமுறைப்படுத்துவது?

இந்த குழந்தை வளர்ப்பு முறையில் பிள்ளைகள் விளையாட்டு தனமாக மகிழ்ச்சியாக இருப்பதும் அதே சமயத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஒழுக்கமாக இருப்பதும் ஒரு சேர நடக்க உதவுகிறது. இதில் கெட்ட போலீசாக இருக்கும் பெற்றோர் குழந்தைகளை தங்களது வீட்டு பாடங்களை செய்த பின்னரே விளையாட அனுமதிப்பது போன்ற செயல்களை செய்வார். இதுவே நல்ல போலீசாக இருக்கும் பெற்றோர் குழந்தைகள் விரும்பிய அனைத்தையும் அவர்கள் இஷ்டப்படி செய்ய அனுமதிப்பார்.

இவ்வாறு குழந்தைகள் இரண்டு விதமான சூழ்நிலைகளிலும் வளரும்போது தங்கள் விரும்பிய அனைத்துமே அவர்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அவர்கள் ஒழுக்கமாக வளர்வதுடன் தங்களது குழந்தை பருவத்தில் பெற வேண்டிய மகிழ்ச்சியான விஷயங்களை தவற விடாமல் வளரவும் இது உதவுகிறது.

கெட்ட போலீஸாக இருப்பது சற்று கடினமான ஒன்று!

உண்மையில் இந்த குழந்தை வளர்ப்பு முறையில் கெட்ட போலீசாக வரும் பெற்றோர் தான் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பார். பிள்ளைகளின் வாழ்வில் நல்ல போலீசை விட கெட்ட போலீஸ் சற்று கொடுமையானவரான பிம்பத்தை உருவாக்கி விடுவார். இதன் காரணமாக பிள்ளைகள் கெட்ட போலீஸ் தன்னை விரும்பவில்லை என்று, குழந்தையும் அவர்களிடமிருந்து இடைவெளியை கடைப்பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது கெட்ட போலீசுக்கு சற்று மன வருத்தத்தை உண்டாக்கலாம்.

மேலும் இந்த குழந்தை வளர்ப்பு முறையில் உள்ள பிரச்சனையே குழந்தைகள் இதற்கு பழக்கப்பட்டு விட்டாலும் பெற்றோர்களால் இந்த முறையில் முழுவதுமாக குழந்தை வளர்ப்பது என்பது சற்று கடினமான ஒன்று. எப்போதுமே கெட்ட போலீசாகவே இருப்பது உங்கள் குழந்தையை உங்களிடம் இருந்து அதிகம் விலக்கி வைத்து விடும். அதே சமயத்தில் குழந்தை நல்ல போலீஸுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து கெட்ட போலீசுக்கு மனதளவில் பொறாமையும், தாழ்வு மனப்பான்மையும் கூட உண்டாகலாம்.

Also Read : உங்க குழந்தை அதிகமா டிவி, மொபைல் பாக்குறாங்களா..? ஆய்வு கூறும் பகீர் தகவல்.!

இந்த குழந்தை வளர்ப்பு முறையை எப்படி சரியாக கையாளுவது?

குழந்தை எப்போதுமே ஒரு பெற்றோரின் அரவணைப்பிலே மட்டும் வளரும் சூழ்நிலையில் இருந்தால், இந்த குழந்தை வளர்ப்பு முறை கை கொடுக்காது. இது சரியாக அமைய வேண்டும் எனில் சில நேரங்களில் பெற்றோர்கள் விரும்பினால் தங்களது கதாபாத்திரத்தை மாற்றிக் கொள்ளலாம். சூழ்நிலைகளைப் பொறுத்து கெட்ட போலீஸ் நல்ல போலீசாகவும் நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் ஆகவும் மாறி குழந்தைகள் வளர சரியான சூழலை அமைத்துக் கொடுக்கலாம். எது எப்படி இருந்தாலும் குழந்தைகளின் வாழ்க்கையில் முன்னேற்ற சரியான செயல்களை செய்வதே முக்கியமான ஒன்று.

First published:

Tags: Parenting, Parenting Tips, Teenage parenting