• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புத்தாண்டில் உங்கள் குழந்தைகளுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுங்க!

புத்தாண்டில் உங்கள் குழந்தைகளுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுங்க!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உங்கள் குழந்தைகளின் பன்முகத்தன்மையைப் பாராட்டுவதற்கு, இந்த ஆண்டின் துவக்கம் உங்களுக்கு சரியான தருணமாக இருக்கும்.

  • Share this:
    புத்தாண்டு என்பது கடந்த ஆண்டில் நாம் எதைச் சாதித்தோம் என்பதையும், வரும் ஆண்டில் என்னென்ன சாத்தியமான வாய்ப்புகளை பிரதிபலிக்கும் என்பதையும் கணக்கிடும் நேரமாக இருக்கும். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை நீங்கள் ஆராய்ந்து, உங்கள் குழந்தைகளின் பன்முகத்தன்மையைப் பாராட்டுவதற்கு, இந்த ஆண்டின் துவக்கம் உங்களுக்கு சரியான தருணமாக இருக்கும். ஆகையால் அவர்களுக்கு நீங்கள் அறிமுகப் படுத்த வேண்டிய சில விஷயங்களை பட்டியலிடுகிறோம்.

    காலண்டர் 

    காலண்டர்கள் வானியல் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. எடுத்துக்காட்டாக, சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகள் முறையே சூரியன் மற்றும் சந்திரனின் கட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. இது குறித்து உங்கள் குழந்தைக்கு புரியும் விதத்தில் எளிமையாக சொல்லிக் கொடுங்கள்.

    குடும்பத் தீர்மானங்களைச் செய்யுங்கள்

    இந்தியாவில் புத்தாண்டு என்பது காலண்டர் ஆண்டிற்கான முதல் மாதத்தின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி தொடங்குகிறது என்பதை உங்கள் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துங்கள், மேலும் புதிய ஆண்டின் தொடக்கத்தை மக்கள் மிக நீண்ட காலமாக கொண்டாடி வருகின்றனர். உங்கள் குழந்தைகள் வரவிருக்கும் ஆண்டில் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, எல்லோரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில ஃபேமிலி ரெசல்யூஸனை எடுக்க முயற்சி செய்யுங்கள்.

    நியாபகங்களுக்குள் ஓர் உற்சாக பயணம்

    புத்தாண்டு தினத்தில் கடந்த ஆண்டை நினைவில் கொள்வது ஒரு புறம் இருந்தாலும், வரும் நாட்களுக்கான திட்டமிடுதல் மிக முக்கியம். விடுமுறை நாட்கள் உங்கள் குழந்தைகளுடன் பழகுவதற்கும், ஆண்டு முழுவதும் நடந்த சில வேடிக்கை நிகழ்வுகளை நினைவில் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம். உங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பிய சில தருணங்களை எழுதி, ஏன் என்று ஒரு புத்தகத்தை உருவாக்குங்கள். நல்ல விவாதத்திற்கு ஆங்காங்கே சில படங்களையும் வரையுங்கள்.

    வேறு நாடுகளின் புத்தாண்டு

    நம் அண்டை நாடுகள் எப்போது புத்தாண்டு கொண்டாடுகிறார்கள், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: