கொரோனா நேரத்தில் குழந்தைகளுக்கு தவற விடக்கூடாத தடுப்பூசிகள் எவை? – மருத்துவர்கள் விளக்கம்

தடுப்பூசிகளை உரிய நேரத்தில் போட்டுக் கொள்ள இயலவில்லை என்றால் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசிகளை உரிய நேரத்தில் போட்டுக் கொள்ள இயலவில்லை என்றால் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் போட்டுக் கொள்ளலாம்.

 • Share this:
  கொரோனா அச்சம் காரணமாக பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகளை செலுத்த மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் காண்பித்து வருகின்றனர். சில குடும்பங்களில் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் காரணமாகவும் குழந்தைகளை தடுப்பூசி செலுத்த உரிய காலத்தில் மருத்துவமனை கூட்டி செல்ல இயலவில்லை.

  இந்நிலையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகளை கண்டிப்பாக தவற விடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  பிறந்தவுடன் போட வேண்டிய பிசிஜி தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து, ஹெபடிடிஸ் பி தடுப்பூசி செலுத்தப்படும். இதை கண்டிப்பாக தவற விடக்கூடாது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவதால் இந்த தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு கிடைத்துவிடுகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு அடுத்தபடியாக ஆறு வாரத்தில், பத்து வாரத்தில், பதினான்கு வாரத்தில் செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் மிக மிக அவசியம் எனவும் , அவற்றை பெற்றோர்கள் தவற விடக்கூடாது என குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். அதே போன்று ஒன்பதாவது மாதத்தில் MMR அல்லது MR தடுப்பூசி எனப்படுவதும் கட்டாயமாகும். இது தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா நோய்களிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும். அடுத்து ஒன்றரை வயதில் போட வேண்டியவை கட்டாயமாகும். அதற்கு அடுத்து 5வது வயதில் தான் கட்டாய தடுப்பூசிகள் போட வேண்டும்.

  இதற்கு இடையில் சின்னம்மை (சிக்கன்பாக்ஸ்), டைபாய்டுக்கு எதிரான தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது நல்லது. ஆனால் இவை கட்டாயம் அல்ல. இந்த தடுப்பூசிகளை கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு போட்டுக் கொள்ளலாம் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவிக்கிறார்.

  தடுப்பூசிகளை உரிய நேரத்தில் போட்டுக் கொள்ள இயலவில்லை என்றால் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் போட்டுக் கொள்ளலாம் என குழந்தை நல மருத்துவர் கண்ணன் தெரிவிக்கிறார். கொரோனாவை காரணம் காட்டி வெகு நாட்களுக்கு தடுப்பூசிகளை தள்ளிப் போடக் கூடாது என அவர் தெரிவிக்கிறார். ஒன்றரை வயதில் போட வேண்டிய தடுப்பூசியை கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக உரிய நேரத்தில் செலுத்த முடியாவிட்டால் ஒரு மாதம் அல்லது இரு மாதங்கள் கழித்து செலுத்திக் கொள்ளலாம் என அவர் கூறுகிறார்.
  Published by:Esakki Raja
  First published: