தங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் என்றால் பெற்றோர்கள் அவர்களுக்கு என்ன பரிசளிக்கலாம் என்பதைப் பற்றித்தான் அதிகமாக சிந்திக்கின்றனர். சிலர் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அள்ளித்து மகிழ்விக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
சிலர், பரிசுப் பொருட்களை பார்த்து மற்றவர்களிடம் வியப்படைய வேண்டும் என்றும் எண்ணுவதுண்டு. அதில், பெற்றோர்கள் தங்களின் பெருமையை பிறருக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணமும் கலந்திருப்பதை ஆங்காங்கே காண முடியும்.
பிள்ளைகளின் விருப்பம் மட்டுமல்லாது, அவர்களின் எதிர்காலம், அவர்களின் மகிழ்ச்சி, நல் இயல்பை வளர்க்கும் பெற்றோர்களின் முயற்சி ஆகியவை இணைந்ததாக, பிள்ளைகளின் மன ஓட்டங்களை அறிந்து, கொடுக்கப்படும் பரிசாக இருக்க வேண்டும் என்றும் சிலர் கருதுவதுண்டு.
பிறந்தநாளுக்கு பெற்றோர்கள் எப்படிப்பட்ட பரிசை கொடுக்கலாம், என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து, சிறுவர்களுக்கான மனோதத்துவ நிபுணர். ஷ.அமனஷ்வீலி ‘
குழந்தைகள் வாழ்க’ என்ற தமது நூலில் குறிப்பிட்டுகிறார். நாள் தோறும் பிள்ளைகள் உண்மையான மகிழ்ச்சியைப் பெற செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் கூறுகிறார்.

ஷ.அமனஷ்வீலி
அதில், “குழந்தைக்கு சந்தோஷம் தர நிறைய சாக்லேட்டு தர வேண்டுமென்றோ, நூற்றுக் கணக்கான விளையாட்டுச் சாமான்களைப் பரிசளிக்க வேண்டுமென்றோ, எண்ணற்ற முறை முத்தமிட வேண்டுமென்றோ, இடையறாது ஏராளமான அன்பு வார்த்தைகளைப் பேச வேண்டுமென்றோ அவசியமில்லை.
உண்மையான மகிழ்ச்சியைப் பெற, சந்தோஷமாக இருக்க அவர்களுக்கு சிறிதளவே போதும். ஒரு மணி நேரம் அவர்களுடன் விளையாடுங்கள். அவர்கள் சந்தோஷமடைவார்கள்; சாதாரண தாளையும் எளிய பென்சிலையும் தாருங்கள். அவர்களுடைய முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியென பாருங்கள்; வீட்டிற்கு சீக்கிரம் வாருங்கள். அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான குதிப்பால் வீடே அதிரும்; இரவு அவர்களுக்கு ஒரு கதை சொல்லுங்கள். அவர்கள் உலகிலேயே மிக சந்தோஷமான மனிதனாக உறங்குவார்கள்.
Must Read : வாய்ப்புகள் கைநழுவுகிறதா கவனமான இருங்கள்... இவர் உங்களுடனும் இருக்கலாம்!
உங்களுடைய மென்மையான, அக்கறை மிக்க உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள், அவர்கள் எப்போதும் சந்தோஷமானவர்களாக இருப்பார்கள் என்று என்னால் உறுதி கூற முடியும். இது அவர்களுக்கு அன்றாட மகிழ்ச்சிகளின் தீரா மூல ஊற்றாகும்.
Read More : வெற்றிப் புன்னகை... ஒரு தாயின் வைராக்கியம்!
ஆண்டிற்கு ஒரு முறை, அவர்களின் பிறந்த நாளன்று, தனக்கு நெருக்கமானவர்களின் மத்தியில் தனது தனித்துவம் உயர்ந்துள்ளதை, தான் பெரியவன் ஆனதை உணரும்படி ஏதாவது செய்யுங்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு முடிவே இருக்காது.” என்று கூறுகிறார் ஷ.அமனஷ்வீலி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.