Home /News /lifestyle /

குழந்தைகளுக்கு தாய் மொழியை கற்பிப்பது எப்படி..? அதன் அவசியம் என்ன..?

குழந்தைகளுக்கு தாய் மொழியை கற்பிப்பது எப்படி..? அதன் அவசியம் என்ன..?

தாய்மொழியை கற்பித்தல்

தாய்மொழியை கற்பித்தல்

ஒரு குழந்தை தனது தாய்மொழியில் பேசுவது எவ்வளவு முக்கியமானது என்பதற்குப் பின்னால் பல அறிவியல் மற்றும் அறிவியல் சாராத கோட்பாடுகள் உள்ளன.

நாம் என்ன தான் வளர்ந்து பல வகையான மொழிகளை கற்றுத் தேர்ந்தாலும், முதன் முறையாக நம் தாய் மொழியில் பேசிய போது பெற்றோர் மனதில் பொங்கி எழுந்த ஆனந்தத்திற்கு எதுவும் ஈடாகாது. குழந்தைகள் ‘அம்மா’, ‘அப்பா’ என ஒவ்வொரு வார்த்தையாக பேச தொடங்கி, அதன் பின்னர் வாக்கியங்கள், சொற் தொடர்கள் ஆகியவற்றை பேச கற்றுக்கொள்கின்றனர். ஆனால் இந்த ஆரம்ப கால வார்த்தைகளே குழந்தை பேசப்போகும் தாய்மொழியை தீர்மானிக்கிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ரன்வீர் சிங், தனது மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனின் தாய்மொழியான கொங்கனி மொழியைப் பேசவும் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தனது தாய் மொழியான சிந்தியிலிருந்து வித்தியாசமான புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கான காரணத்தையும் விளக்கினார். அதேபோல் தனக்கு குழந்தைகள் பிறந்தால், தீபிகா படுகோனே அதனுடன் தாய்மொழியில் உரையாடுவதை கேட்பேன் என தெரிவித்தார். பாலிவுட் பிரபலங்களான இவர்களது பேச்சு வேடிக்கையாக இருந்தாலும், குழந்தைகளுக்கு தாய்மொழியை போதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை சுட்டிக்காட்டியது.

குழந்தைக்கு தாய்மொழி எவ்வளவு முக்கியம்?

ஒரு குழந்தை தனது தாய்மொழியில் பேசுவது எவ்வளவு முக்கியமானது என்பதற்குப் பின்னால் பல அறிவியல் மற்றும் அறிவியல் சாராத கோட்பாடுகள் உள்ளன. தாய்மொழியானது ஒரு குழந்தையை அதன் குடும்பத்துடன் பூர்வீக பந்தத்துடன் இணைக்க உதவுகிறது. அது தான் குழந்தையை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாற்றுகிறது. இது குழந்தைக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையான முறையில் தகவல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கிறது.



தாய்மொழியில் பேசும்போது எதுவும் மறைக்கப்படாது. தாய்மொழியில் செய்யப்படும் உரையாடல் எதையும் உடைக்காது, அது உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது. உங்கள் தாய்மொழியில் பேசுவது உங்கள் உணர்ச்சிகளுக்கும் உங்கள் மனதிற்கும் இடையில், நீங்கள் நினைப்பதற்கும் நீங்கள் பேச விரும்புவதற்கும், நீங்கள் கேட்பதற்கும், நீங்கள் புரிந்துகொள்வதற்கும் இடையிலான சமநிலையை ஏற்படுத்துகிறது. தாய்மொழியில் நடக்கும் உரையாடலில் இடைவெளி இருக்காது.

குழந்தையை தாய்மொழியில் பேச பழக்குவது எப்படி?

வீட்டில் தாய்மொழி பேசுங்கள்:

குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களை பெற்றோரிடம் இருந்தே கற்றுக்கொள்கின்றனர். எனவே உங்கள் குழந்தை தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பினால், வீட்டில் அப்பா, அம்மா உட்பட அனைவரும் தாய்மொழியில் பேசுவதையே வழக்கமாக கொள்ள வேண்டும். அப்போது தான் அந்த மொழியை கேட்டு பழகும் குழந்தை, அதையே பேச முயற்சிக்கும்.

குழந்தைகளை எந்த வயதில் டியூஷன் சேர்ப்பது சிறந்தது..? பெற்றோர்களுக்கான கைட்லைன்

குழந்தையிடம் தாய்மொழியில் பேசுங்கள்:

குழந்தையை கொஞ்சும் போதும், அதனுடன் தொடர்பு கொள்ளும் போதும் எப்போதும் தாய் மொழியிலேயே பேசுங்கள். உங்கள் வட்டார வழக்குப்படி எப்படி பேசுவீர்களோ, அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி குழந்தையுடன் தொடர்பு கொள்வதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.



தாய்மொழியை மதியுங்கள்:

நவீன காலத்தில் ஆங்கிலம் பேசுவது தான் நாகரீகமானது என நினைத்துக்கொண்டு, பலரும் தாய்மொழியை புறக்கணிக்கின்றனர். மேலும் இந்த மனநிலையின் காரணமாக அவர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அதே மொழிக் கோட்பாட்டை திணிக்கிறார்கள். தாய்மொழியின் புகழ் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

Coronavirus : நோய் எதிர்ப்பு சக்தியை பெற உங்கள் லஞ்ச் பாக்ஸில் இருக்க வேண்டிய 5 உணவுகள்

சோசியல் மீடியாவை பயன்படுத்துங்கள்:

தற்போதைய ஆன்லைன் யுகத்தில் பிள்ளைகளுக்கு கற்பிக்க சோசியல் மீடியா நல்ல வழியாக உள்ளது. குழந்தைகள் ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவது நல்லதல்ல என்றாலும், உங்கள் தாய்மொழி சம்பந்தமான வீடியோக்களை பார்க்கவும், விளையாடவும் அனுமதியுங்கள். முடிந்தால் நீங்களும் குழந்தைகளுடன் சேர்ந்து அத்தகைய வீடியோக்களை பார்க்கலாம், இது இடையே குழந்தைகளுக்கு தோன்றும் சந்தேகத்தை தீர்க்கவும், மொழி ஆர்வத்தை பெருக்கவும் உதவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Parenting Tips

அடுத்த செய்தி