வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவது அவசியமானது. ஊட்டச்சத்துக்கள், மினரல்கள், புரதம், நல்ல கொழுப்பு வகை உணவுகளை இந்த வயதில் அதிகம் கொடுக்க வேண்டும். நாம் சீரான உணவுகளை கொடுத்து குழந்தைகளை வளர்த்தால் அவர்களது உடல் நலன், மன நலன் மற்றும் உணர்வுகள் ஆகியவை மேம்படும்.
அதே சமயம், சில குழந்தைகள் உணவை கண்டாலே வெறுத்து ஒதுக்கக் கூடிய சூழல் ஒரு சில வீடுகளில் இருக்கும். குழந்தைகளுக்கு எதை சாப்பிடக் கொடுப்பது, எப்படி கொடுப்பது என்ற விஷயத்தில் பெற்றோருக்கு மன குழப்பமே ஏற்படும். ஆனால், குழந்தைகள் வயிற்றுக்கு கேடான ஜங்க் ஃபுட் உணவுகளைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். ஒரு சேலஞ்ச்க்காக சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உள்ளே சென்று இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாக நோட்டமிடுங்கள். அங்குள்ள எண்ணற்ற பொருட்கள் குழந்தைகளை கவரும் ஸ்நாக்ஸ் அல்லது இதர உணவுப் பொருட்களாகத் தான் இருக்கும்.
இப்படியொரு சூழலில், சத்தான உணவுப் பழக்கத்தை உங்கள் குழந்தைகளிடம் எப்படி ஏற்படுத்துவது என தெரியாமல் திணறி வருகிறீர்கள் என்றால், கீழ்காணும் குறிப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
பிளேட்டுகளில் வண்ண மயமான உணவுகள் இருக்க வேண்டும்
குழந்தைகளை முதலில் கவர்ந்து இழுக்கக் கூடியது வண்ணங்கள் தான். அவர்களுடைய கண் பார்வையில் தென்படும்போதே சாப்பிடும் ஆசையை தூண்டுவதாக அது அமைய வேண்டும். குறிப்பாக, கலர், கலரான காய்கறிகளை சுவையாக சமைத்து, அவற்றை பிளேட்டுகளில் அடுக்கி வைத்து விட்டீர்கள் என்றால், குழந்தைகள் மிகுந்த ஆவலுடன் சாப்பிடுவார்கள்.
ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சூப்பர் ஐடியா… சிகிச்சை பெறும் குழந்தைகள் விரைந்து குணமாக இதை செய்யுங்கள்!
ஸ்நாக்ஸ் டைம் ஒதுக்குங்கள்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்நாக்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அதே சமயம், கண்ட நேரத்தில் அதை சாப்பிடும்படி குழந்தைகளை பழக்கிவிட கூடாது. உணவு அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கான நேரத்தில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். சரியான நேரத்தில் சீரான உணவுகளை சாப்பிட்டார்கள் என்றால், அவர்களுக்கு சாக்லேட் அல்லது கூல்டிரிங்க்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே வராது.
சாப்பிடும் விதத்தை குறை சொல்லாதீர்கள்
குழந்தைகள் எப்படி சாப்பிட வேண்டும் என்ற பக்குவம் தெரிந்தவர்கள் அல்ல. சின்னஞ்சிறு குழந்தைகள் என்றால் இரண்டு கைகளாலும் கூட சாப்பிடுவார்கள். கொஞ்சம் பெரிய குழந்தைகள் என்றாலும் கூட சாப்பை கீழே இரைக்காமல் சாப்பிடத் தெரியாது. என்ன இருந்தாலும், தேவையான அளவு உணவை சாப்பிடுகிறார்களா என்பதை மட்டும் கவனியுங்கள். சாப்பிடும் சமயத்தில் குழந்தைகளை கோபத்துடன் கண்டிக்க கூடாது.
சம்மர் வந்தாச்சு... குழந்தைகளை வேர்க்குரு, வெயில் கொப்புளங்களில் இருந்து காக்க டிப்ஸ்
புதிய உணவுகளை சேருங்கள்
குழந்தைகளின் உணவுப் பட்டியலில் படிப்படியாக சத்தான பல காய்கறிகள், கீரைகள் மற்றும் பழ வகைகளை ஒவ்வொன்றாக சேர்த்துக் கொண்டே வர வேண்டும். புதிய உணவுகளை பார்க்கும்போது குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.