குழந்தையை வளர்ப்பது உலகில் கடினமான செயல்களில் ஒன்றாகும். அதிலும், உங்கள் குழந்தை சரியாக சாப்பிடுகிறார்களா, ஆரோக்கியமான உணவுகளை உண்கிறார்களா என்பதை தினசரி கண்காணிப்பது உறுதிபடுத்துவது மிகப்பெரிய சவால்.
தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று காரணமாக, குழந்தைகள் உணவுமுறை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது பெற்றோரின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும். குழந்தைகளைப் பொறுத்தவரை, உணவு தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமாக விளங்குகிறது.
எனவே, அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, முழு உணவு வகைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், ரசாயனக் கலவைகள் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? உங்களுக்கு நிபுணர்கள் அங்கீகரித்த, ஆரோக்கியமான வழிகள் இங்கே.
முட்டை:
முட்டை ஊட்டச்சத்துகளின் கூடாரம் என்று அழைக்கலாம். இது உங்கள் சருமம், தசை மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. முட்டையில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் பி2 (ரிபோஃப்ளேவின்) குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மிகவும் அவசியம். உடல் கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு வளர்ச்சி ஆகியவை முட்டையில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மூலம் பெறப்படுகிறது.
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என எந்த நேரத்திலும் நீங்கள் குழந்தைகளுக்கு முட்டை சாப்பிட கொடுக்கலாம். குடைமிளகாய், காளான்கள் மற்றும் பிற வண்ணக் காய்கறிகளை சேர்த்து மிகவும் சுவையாக, குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் முட்டைகளை சமைக்கலாம்.
காய்கறிகள் மற்றும் கீரைகள்:
குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பது கொஞ்சம் கடினமான செயல் தான். ஆனால், உங்கள் ஊரில் விளையக்கூடிய உள்ளூர் காய்கறிகள் மற்றும் கீரைகளை நீங்கள் உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டும். உதாரணமாக, முருங்கைக்காய், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பாலக்கீரை, அவரை, வெண்டை, போன்றவை. இந்த உணவுகள் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
காய்கறிகளை உங்கள் குழந்தையின் உணவில் எப்படி சேர்ப்பது?
காய்கறிகளை பல வடிவங்களில் வெட்டி உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். காய்கறிகள் பயன்படுத்தி பைட்-சைஸ் பண்டங்களை செய்து அவர்களுக்கு சீஸ் அல்லது ஹம்மஸ் டிப்புடன் கொடுக்கலாம்.
தாங்கள் என்ன பார்க்கிறார்களோ, அதையே குழந்தைகள் பின்பற்றுகிறார்கள். எனவே, உங்கள் உணவிலும், நிறைய காய்கறிகள் மற்றும் கீரைகள் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க | சியா விதைகளா? சப்ஜா விதைகளா?- உடல் எடையை எது விரைவாக குறைக்க உதவும்?
மஞ்சள்:
மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆன்டிசெப்டிக், அழற்சி-எதிர்ப்பு, போன்ற தன்மைகளுடன் உணவில் தினசரி மஞ்சள் சேர்ப்பது ஆஸ்த்மா, அலர்ஜி போன்ற பல்வேறு நோய்களையும் தடுக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்கள் வழக்கமான சமையலில், குழம்பு, பொறியல், சப்ஜி, மசாலா மற்றும் பால் ஆகிய உணவுகளில் மஞ்சள் சேர்க்கலாம். பாலில் மஞ்சள் தூள் கலந்தும் அருந்த கொடுக்கலாம்.
உலர் பழங்கள், விதைகள் மற்றும் நட்ஸ்:
உலர் பழங்கள் மற்றும் விதைகளில் தாதுக்கள், நல்ல கொழுப்பு மற்றும் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளன. முந்திரி, பாதாம், உலர் அத்திப்பழம், உலர் திராட்சை, வால்நட், ஆப்ரிகாட்ஸ் ஆகிய அனைத்திலும் EFA எனப்படும் essential fatty acids உள்ளன. இந்த ஊட்டச்சத்து, உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படுவதற்கும் பெரிய பக்கபலமாக இருக்கின்றன. நீங்கள் உலர் பழங்கள், விதைகள் மற்றும் நட்ஸ்களை பவுடராக மாற்றி, சூப்புகள், கஞ்சி ஆகியவற்றில் கலந்து குடுக்கலாம்.
தயிர்:
ப்ரோபையாட்டிக் மற்றும் வைட்டமின் B12 நிறைந்த தயிர், வயிற்றில் உற்பத்தியாகும் கெட்ட பேக்டீரியாக்களை அழிக்கும். இதனால், தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே அன்றாடம் மத்திய உணவில் தயிர் சேர்த்து கொடுக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Children, Kids Health, Parenting