முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் பெண்களுக்கு மட்டுமா உண்டு? ஆண்களுக்கும்தான்… அறிகுறிகளும் சிகிச்சையும்!

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் பெண்களுக்கு மட்டுமா உண்டு? ஆண்களுக்கும்தான்… அறிகுறிகளும் சிகிச்சையும்!

ஒரு புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருப்பதாக உணர்ந்தால், ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.

ஒரு புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருப்பதாக உணர்ந்தால், ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.

ஒரு புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருப்பதாக உணர்ந்தால், ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

கர்ப்பகாலம், பிரசவம், குழந்தையை கையாள்வது என்ற பல கட்டங்களில், குழந்தை பிறந்த பிறகு, பெண்களுக்கு போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் எனப்படும் மகப்பேறுக்குப் பிறகான மனச்சோர்வு ஏற்படுகிறது. இது ஆணுக்கும் ஏற்படுகிறது. காரணங்கள் வேறுபட்டாலும், மனச்சோர்வு என்பது பாலினம் சார்ந்ததல்ல. மகப்பேறுக்கு பின், ஆண், பெண் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, குழந்தை பிறப்பு சார்ந்த மன அழுத்தம் பெண்கள் அனைவருக்குமே ஏற்படுவது இயல்பானது.

பிரசவ வலி, பிரசவத்தில் சில நேரங்களில் காணப்படும் சிக்கல், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம், குழந்தை பிறந்த பிறகு உடலிலும் மனதிலும் ஏற்படும் சோர்வு, வலியிலிருந்து நிவாரணம், உணர்ச்சிகள் போராட்டம் ஆகியவற்றை பெண்கள் எதிர்கொள்வதால், போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் என்பது தவிர்க்க முடியாதது.

ஆண்களுக்கும் குழந்தை பிறந்த பிறகான மனச்சோர்வு ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கூறிய எந்த பிரச்சனைகளையும் ஆண்கள் எதிர்கொள்ளவில்லை என்றாலும், வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், புதிய கூடுதலான பொறுப்புகள், சவால்கள், உறக்கமில்லாத இரவுகள், குழந்தை பிறக்கும் வரை அனுபவித்த பதற்றமான சூழல் ஆகியவை தந்தையின் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெண்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தைப் போலவே, குழந்தையை பத்திரமாக பெற்று, வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தந்தையின் தவிப்பும், ஆண்கள் உடலில் ஹார்மோன்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள், புதிய வாழ்க்கைக்கு ஏற்றபடி அனுசரிக்க, பழக, கடினமாக உணரச் செய்யும்.

போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனின் அறிகுறிகள்:

பெற்றோராக, அப்பாவாக ஒரு புதிய பொறுப்பை ஏற்று சரியாக நடப்பது அவ்வளவு எளிதானது இல்லை. குழந்தையின் தேவைகளைப் பார்த்துக் கொள்வதும், உங்கள் பணியை அவர்களின் கால அட்டவணையின்படி திட்டமிடுவதும் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.

பிரசவத்திற்குப் பிறகு சோர்வான மன நிலையும், மன அழுத்தம் அதிகப்படியாக இருப்பது போல தோன்றும் உணர்வு மிகவும் பொதுவானது. ஆனால் இந்த அறிகுறிகள், இயல்பை விட நீண்ட நேரம் நீடித்தால் அவற்றை நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வின் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஆனால், பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள் இங்கே.

- பசியின்மை

- எடை இழப்பு

- தூக்கமின்மை

- காரணமில்லாத வலிகள்

- தீவிரமான சோர்வு

- கவனக் குறைபாடு / விரும்பியவற்றின் மீது ஈடுபாடில்லாத தன்மை

வருத்தமான அல்லது நம்பிக்கையற்ற உணர்வு

- உபயோகமில்லை என்ற உணர்வு அல்லது குற்ற உணர்வு

- அதிகப்படியான கவலை

- திடீர் மனநிலை மாற்றங்கள்

Must Read | உடல் எடையை குறைக்க கஷ்டப்படுகிறீர்களா? ஈஸியான 5 யோகாவை டிரை பண்ணுங்க!

யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது:

மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு அறிகுறிகள் பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஏற்படலாம். ஆனால், பலரும் இந்த அறிகுறிகளை உணர்ந்தும், கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அதே போல, இந்த அறிகுறிகள் இருப்பதாகவே பலரும் உணர்வதில்லை.

ஆய்வுத்தரவுகளின் படி, 8 சதவிகித ஆண்கள், போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அறிகுறிகள் மோசமடைய பல காரணிகள் உள்ளன.

- மனச்சோர்வால் பாதிப்படைந்த நிலை

- குடும்பத்தில் மனச்சோர்வு பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால்

- அப்பாவின் பொறுப்பை ஏற்றுக்கொள்வது பற்றிய கவலை

- பொருளாதார சிக்கல்

- சமூக ரீதியான ஆதரவு அல்லது உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாதது

- குடும்பம் அல்லது வாழ்க்கைத் துணையுடனான உறவில் சிக்கல்கள்

- மனைவிக்கு உங்கள் மீது முழு கவனிமில்லை அல்லது உடலுறவு கொள்ள முடியாத நிலை

- அதிக பிரச்சனைகள் நிறைந்த குழந்தை பிறப்பு அனுபவத்தால் ஏற்படும் மனஅழுத்தம்

மனச்சோர்வை கண்டறிவது எப்படி?

பெண்களுக்கு ஏற்படும் குழந்தை பிறந்த பிறகான மனச்சோர்வின் அறிகுறிகளை எளிதில் கண்டறியலாம். பெரும்பாலும், ஆண்களின் விஷயத்தில் அத்தனை சுலபமாக கண்டறிய முடியாது. ஆண்கள் மற்றும் மனநல பிரச்சினைகள் என்பதே பெரிதாக விவாதிக்கப்படாமல் இருக்கிறது. இந்த சூழலில், முதல் முறையாக ஒரு குழந்தையை பெறும் போது, ஒரு அப்பாவாக ஆண்களின் மனச்சோர்வின் தொடர்ச்சியான அறிகுறிகள் வெளியே தெரியாமல் போவது ஆச்சரியமில்லை.

மனச்சோர்வை கண்டறியும் முயற்சியில், மருத்துவ ரீதியான கேள்விகள் இருக்கக்கூடும். மனச்சோர்வின் அறிகுறிகள் தானா என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பு, மருத்துவர் முதலில் உடல் ரீதியான அறிகுறிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவார்.

சிகிச்சை:

ஒரு புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், ஒரு நிபுணரை அணுகுவது நல்லது. மனச்சோர்வு என்பது ஒரு தீவிரமான மனநிலை மாறுபாடு என்பதால், அது தானாகவே சரியாகாது. அதிலிருந்து மீள சரியான நேரத்தில் ஒரு நிபுணரின் உதவியைப் பெற வேண்டியது மிகவும் அவசியம். நீண்ட கால மற்றும் சிகிச்சையளிக்கப்படாத மனச்சோர்வு பிற்கால வாழ்க்கையில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் தற்போதைய நிலைமை மற்றும் உங்கள் அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்து, உங்கள் மருத்துவர் அல்லது தெரபிஸ்ட் உங்களுக்கு மருந்து, தெரபி அல்லது இரண்டையும் பரிந்துரைக்கலாம்.

First published:

Tags: Depression, Father, Healthy Life, Post Pregnancy Depression