ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தையின் காதில் படியும் அழுக்குகளை எப்படி நீக்க வேண்டும்..? பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

குழந்தையின் காதில் படியும் அழுக்குகளை எப்படி நீக்க வேண்டும்..? பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

குழந்தை பாதுகாப்பு

குழந்தை பாதுகாப்பு

பெற்றோர்கள் குழந்தைகளின் காதில் சேரும் அழுக்கை நீக்க இயர் பட்ஸை உபயோகிக்கின்றனர். ஆனால் அது உண்மையில் சரியான வழியா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

காதுகளில் அழுக்கு சேர்வது மிகவும் பொதுவான ஒரு விஷயம். அது ஒரு பசை போல காதின் ஜவ்வுக்கு அருகில் சேரும். பொதுவாகவே காதில் பசை போல ஒரு திரவம் இருக்கும். அது காதில் சேரும் அழுகை சேகரிக்கிறது. இதனை அடிக்கடி நீக்க வேண்டும். பெரியவர்களாகிய நாம் பட்ஸ் போன்ற பொருட்களின் உதவியோடு காதுகளில் உள்ள அழுக்கு பசைகளை நீக்கி விடுகிறோம். ஆனால் குழந்தைகளின் காதுகளில் சேரும் அழுக்கை பெற்றோர்களாகிய நாம் தான் நீக்க வேண்டும்.

சில வீடுகளில் குழந்தைகளின் காதில் உள்ள அழுக்கை நீண்ட காலத்திற்கு எடுக்காமல் விட்டுவிடுவதால் நாளடைவில் அது இறுகி காது வலியை ஏற்படுத்தும். மேலும் காது கேட்காமல் கூட போகலாம். பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளின் காதில் சேரும் அழுக்கை நீக்க இயர் பட்ஸை உபயோகிக்கின்றனர். ஆனால் அது உண்மையில் சரியான வழியா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் குழந்தைகளின் காதில் சேரும் அழுக்குகளை எடுக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும். பின்வருமாறு காணலாம்.

காது மெழுகு (earwax) என்றால் என்ன?

வெளிப்புற காது ஓட்டையில் சுரக்கும் ஒரு பொருள் தான் காதுமெழுகு. இது மெழுகு போன்ற ஒரு திரவமாகும். இந்த திரவம் காது துளைகளில் இருக்கும் தோலைப் பாதுகாப்பதோடு, நீர், பூச்சிகள் மற்றும் பிற பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள், வெளிப்புற தூசு, மாசு போன்றவற்றிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. காது பசையில் இருக்கும் முக்கிய கூறுகள் கொழுப்பு அமிலங்கள், ஆல்கஹால், ஸ்குவாலீன் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை ஆகும். காது மெழுகு 'செருமென்' என்றும் அழைக்கப்படுகிறது.

குழந்தைகளின் காதில் அழுக்கு எவ்வாறு குவிகிறது?

காதுகள் அழுக்கு, தூசி மற்றும் பிற துகள்களால் சேதமடைவதைத் தடுக்க, அவை மெழுகு திரவத்தை சுரக்கின்றன. வழக்கமாக, இந்த மெழுகு பசைகள் காது ஓட்டை வழியாக வெளியேறிவிடுகிறது. இருப்பினும், சில நேரங்களில், அது வெளியேறாமல் காது துளையிலேயே குவிந்து காதில் எரிச்சலை ஏற்படுத்தும். இதனை நாம் தான் பார்த்து நீக்க வேண்டும்.

ஆனால், உங்கள் குறுநடை போடும் குழந்தையின் காதுகளை இயர் பட்ஸால் சுத்தம் செய்யும் போது, ​அந்த அழுக்கு பசை எதிர்பாராதவிதமாக காது துளையை அடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், காதுகளில் சேர்ந்த அழுக்கால் கூச்சம் ஏற்படும் போது சில குழந்தைகள் தங்கள் விரல்களை கொண்டு காதுகளை குடைவர். இது திரட்டப்பட்ட மெழுகைத் மேலும் ஆழமாக தள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். அப்படியானால், இதற்கு என்ன தான் வழி?.

குழந்தைகளில் காது அழுக்கு பசையை நீக்கும் வழிகள்:

1. தலையை பக்கவாட்டில் வைத்தபடி காதுகளை உயர்த்திய நிலையில் வைக்கவும் :

குழந்தையை பக்கவாட்டில் படுக்க வைத்து, அல்லது தலையை சாய்த்து காதுகள் உயர்த்தி வைத்திருப்பது போல சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இப்போது காதில் சொட்டு மருந்துகளை சிதறாமல் போட வேண்டும். அப்போது தான் காது துளையில் அழுக்கு இருக்கும் இடத்தில் சொட்டு மருந்து வேலை செய்யும். இது குழந்தையின் காது அழுக்கை எளிதாக அகற்ற உதவும்.

2. சுத்தமான காட்டன் துணியைப் பயன்படுத்துங்கள் :

உங்கள் குழந்தை காதுகளின் வெளிப்புறத் துளையை சுத்தம் செய்ய மென்மையான காட்டன் துணியை உபயோகிக்கவும். அதன் பிறகு ஆயில் அல்லது கிரீம் மூலம் அழுக்கினை சுத்தம் செய்யலாம்.

3. ஊக்கு, தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் பின், இயர்பட் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது:

நம்மில் பெரும்பாலோர் நம் குழந்தையின் காதுகளை சுத்தம் செய்ய ஊக்கு, இயர் பட்களை பயன்படுத்துகிறோம். இருப்பினும், இதைச் செய்யும்போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை உங்கள் காதுகுழலை சேதப்படுத்தலாம் மற்றும் காது துளையில் மெழுகு மேலும் உள்நுழையலாம்.

4. மருத்துவர் பரிந்துரைத்த காது சொட்டு மருந்து அல்லது எண்ணெயைப் பயன்படுத்துங்கள் :

உங்கள் குழந்தையின் காதில் குவிந்துள்ள அழுக்கு பசையை மென்மையாக்க காது சொட்டு மருந்துகளை பயன்படுத்தும் போது, அது ​​மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ENT வல்லுநர்கள் குழந்தையின் காதுகளை சுத்தம் செய்வதற்கு முன்பு ஆலிவ் அல்லது மினரல் ஆயிலைப் பயன்படுத்தி மென்மையாக்க பரிந்துரைக்கின்றனர்.

மேற்கூறிய நுட்பங்கள் வேலை செய்யவில்லை என்றால், ஒரு ENT நிபுணர் அல்லது குழந்தை மருத்துவரை அணுகுவது நல்லது.

எப்போது ஓயும் கொரோனா? குழந்தைகள் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்திய பெருந்தொற்று காலம்! மருத்துவர் சொல்வது என்ன?

உங்கள் குழந்தைகளில் காத்து அழுக்கு மற்றும் காது தொற்று ஏற்பட்டிருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது?

குழந்தைக்கு காதில் அழுக்கு குவிந்ததா அல்லது காதில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டுபிடிப்பது கடினம். உங்கள் குழந்தை காது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தங்களது காதுகளை தடவலாம் அல்லது இழுக்கலாம். காதில் அழுக்கு சேர்ந்திருந்தாலும் இதையே தான் குழந்தைகள் செய்வர். ஆனால், தொற்று மற்றும் அழுக்கு இரண்டையும் வேறுபடுத்த ஒரு வழி இருக்கிறது. அதாவது, காதில் ஏற்படும் தோற்றால் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.

அதுவே, காதில் அழுக்கு மட்டும் சேர்வதால் அவதிப்படும் குழந்தைக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படாது. உங்கள் குழந்தையின் காதில் அழுக்கு பசை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், அதை வெறுமனே பார்த்து கண்டுபிடிக்கலாம். காதில் அழுக்கு சேர்ந்திருந்தால் மஞ்சள் அல்லது பழுப்பு நிற நீர் வெளியேறும். அதுவே, காது தொற்று ஏற்பட்டால், பால் சீழ் அல்லது இரத்தக்களரி வெளியேற்றம் இருக்கும்.

First published:

Tags: Ear care, Ear Wax