இரண்டாம் அலையில் தற்போது பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் குழந்தைகள் மத்தியிலும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் பெற்றோர்கள் முன்பை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மிக எளிய வழிகளில் ஒன்று ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை சாப்பிடுவது. சமீபத்தில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் அவரது குழுவினர் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில முக்கிய டிப்ஸ்களை பகிர்ந்து கொண்டனர். பெருந்தொற்று நேரத்தில் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்...
சீசன் பழங்கள்:
உங்கள் குழந்தைகளுக்கு நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு சீசன் பழங்கள் அல்லது உள்ளூர் பழங்களை கொடுக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் முழு பழத்தையும் சாப்பிட விரும்பவில்லை என்றால், அந்த பழங்களை சிறிதளவு கொடுப்பது கூட அவர்களுக்கு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
ராகி லட்டு (அ) அல்வா:
எப்போதுமே அனைவரும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆரோக்கியமான மற்றும் சத்தான ஒன்றை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ரொட்டி, நெய் மற்றும் ஜாகிரி ரோல் (jaggery roll), சுஜி அல்வா அல்லது ராகி லட்டு போன்ற இனிபான மற்றும் எளிய உணவை கொடுப்பது குழந்தைகளை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரிசி:
அரிசியில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அதில் ஒரு சிறப்பு வகையான அமினோ அமிலம் உள்ளது. ஜீரணிக்க எளிதான மற்றும் சுவையான அரிசி குழந்தைகளின் டயட்டில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான உணவு ஆகும். பருப்பு, அரிசி மற்றும் நெய் ஆகியவை குழந்தைகளுக்கு சிறந்த உணவு விருப்பமாக இருக்கின்றன.
ஊறுகாய் அல்லது சட்னி:
குழந்தைகளின் தினசரி உணவில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சில ஊறுகாய் அல்லது சட்னி வகைகள் இருப்பதும் அவசியம். இந்த சைடிஷ்கள் குழந்தைகளின் குடல் பாக்டீரியாக்கள் செழிக்க உதவும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
முந்திரி:
மதிய உணவிற்கு இடையில் சில முந்திரிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது அவர்களை சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் வைத்திருக்கும். இவை வலிகளையும் குறைக்க உதவும்.
ஆரோக்கியமாக சாப்பிடுவதைத் தவிர, பொதுவாக நம் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேறு சில விஷயங்களும் உள்ளன. உணவு என்பது ஒரு காரணி, இது உண்மையில் உங்கள் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நாம் அறியாமல் செய்யும் வேறு சில அன்றாட நடவடிக்கைகள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளின் தூக்க பழக்கவழக்கம் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அவர்களின் தூக்கத்தை முறையாக பேணுவது பெற்றோர்களின் கடமை. தவிர குழந்தைகளை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வைப்பதும் மற்றொரு முக்கியமான வாழ்க்கை முறை பழக்கமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.