பதின்பருவ பிள்ளைகளை எப்படி கையாளுவது..? பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல்

பதின்பருவ பிள்ளைகள்

ஆசைகள் புதிதாக பிறக்கும், இலக்குகளைப் பற்றி சிந்திக்க தொடங்குவார்கள், புதிய சூழ்நிலைகளையும் எதிர்கொள்வார்கள். இந்த நேரத்தில் பெற்றோர் மிக கவனமாக ஒரு சில விஷயங்களை தங்களின் குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டிய கடமை உள்ளது.

  • Share this:
பதின்பருவம் என்பதும் வளர்ச்சியின் படிநிலையில் ஒன்று. குழந்தை பருவத்தில் இருந்து பதின்பருவத்துக்குள் நுழையும் குழந்தைகள் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்வார்கள். உடல்ரீதியாக மட்டும்மல்லாமல், பாலுணர்வு, உணர்ச்சிகள் ரீதியாகவும் புதிய மாற்றங்களை சந்திப்பார்கள். ஆசைகள் புதிதாக பிறக்கும், இலக்குகளைப் பற்றி சிந்திக்க தொடங்குவார்கள், புதிய சூழ்நிலைகளையும் எதிர்கொள்வார்கள். இந்த நேரத்தில் பெற்றோர் மிக கவனமாக ஒரு சில விஷயங்களை தங்களின் குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டிய கடமை உள்ளது.

அந்தநேரத்தில், தாங்கள் குழந்தைகள் அல்ல, பதின்பருவத்தை எட்டியுள்ளவர்கள் என்பதை புரியவைப்பதுடன் பெற்றோர் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மேலும், முடிவுகளை எடுக்க போதுமான அனுபவம் இல்லாமல் இருப்பதையும் உணர்த்தி, தங்களின் வார்த்தைப்படி நடக்க வேண்டும் என்பதையும் கூற வேண்டும். ஏனென்றால், பெற்றோரின் நிழலில் மட்டுமே இருந்த குழந்தைகள், தற்போது நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், புதிய நபர்கள் என பரந்துபட்ட உலகில் பயணிக்க தொடங்குகிறார்கள்.

இந்த பதின்பருவத்தில் உணர்ச்சி பிறழ்வுகள் அதிகளவில் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பதின்பருவத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படும் மன பிறழ்வுகளில் மன அழுத்தம் 4வது இடத்திலும், பதட்டம் 9வது இடத்திலும் உள்ளன. 15 முதல்19 வயதிற்குள் இருக்கும் பதின்பருவத்தினர் பெரும்பாலானோர் இயலாமை, அவநம்பிக்கையை சந்தித்து தற்கொலை முடிவுகளை அதிகளவில் எடுப்பதாகவும் மனநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மனநிலை பாதிப்பு, போதை உள்ளிட்டவைகளுக்கு அடிமையாதல், பிரச்சனைகளை தைரியமுடன் எதிர்கொள்ளும்பாங்கு ஆகியவை இதற்கு காரணம் என கூறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை பதின்பருவ தற்கொலைகள் உலகளவில் அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.



பதின்பருவ குழந்தையை எதிர்கொள்வது பெற்றோருக்கு ஒரு சங்கடமான நிலையாகும். அவர்களுக்கு பாதுக்காப்புடன் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை கையாள்வது என்பது சிரமம். தங்களுக்கு கிடைக்கும் வெற்றி, தோல்வி மற்றும் நேரும் அனுபவங்களில் இருந்து தார்மீகத்தை பதின்பருவத்தை கற்றுக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டில், சரி மற்றும் தவறுகளை புரியவைக்க வேண்டிய கடமை பெற்றோரிடம் இருக்கிறது.

பதின்பருவ குழந்தைகளை கையாளும் முறை

கவனித்தல்

உங்கள் குழந்தைகளின் உரையாடல்களை கவனமாக கவனிக்க வேண்டும். அவர்கள் பேசும் அனைத்து வார்த்தைகளுக்கும் சரியான சமிக்கைகளை கொடுத்துக்ககொண்டே இருங்கள். உதாரணமாக, ம்ம்ம்.., ஆ.., ஓ.. அப்படியான சமிக்கைகள் நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். தேவையான இடங்களில் அமைதியை கடைபிடியுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன், பார்க்கலாம் என்ற வார்த்தைகளை சொல்லுங்கள்.



புரியவைத்தல்

சூழ்நிலைகளை அவர்களுக்கு புரியவைத்தல் என்பது பெற்றோர்களின் கடமை. எல்லா உணர்ச்சிகளும் அவரவர் தனிப்பட்ட உரிமை. எந்த எமோஷனும் தவறு கிடையாது. அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரவர்களுக்கு சரி என்பதை முடிவெடுப்பார்கள். இதனால் ஏற்படும், கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகள் இயல்பானது, அவற்றை கடந்து சென்று நல்லது எது என்பதை பார்க்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுங்கள். தனக்கு சரி என உணர்வதை, மற்றவரும் அதனையே உணருவார் என்ற இருபக்க உணர்ச்சிகளையும் புரியவையுங்கள்.

நீங்கள் பசியோடு இருக்கும்போது தப்பித்தவறிக்கூட இந்த 5 விஷயங்களை செஞ்சிடாதீங்க!

 

பரிந்துரைத்தல்

பதின்பருவத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறினால், அது அவர்களுக்கு கோபத்தை மட்டுமே உண்டாக்கும். அவர்கள் முன் இருக்கும் இரண்டு நிலைகளை பரிந்துரை செய்யுங்கள். உனக்கான சுதந்திரம் வேண்டும் என்றால், நீ செல்ல வேண்டிய பாதை இது, அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருந்து, அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால், நீ செல்ல வேண்டிய பாதை இது என முன்வைத்துவிடுங்கள்.



அனுமதித்தல்

உங்கள் மேற்பார்வையின் கீழ் சிறிய செயல்களை செய்ய அனுமதியுங்கள். சிறிய செயல்களில் இலக்குகளை நிர்ணயித்து அவர்கள் ஈட்டும் வெற்றி அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். சின்ன சின்ன வெற்றிகள், பெரிய வெற்றிகளை பெறுவதற்கான உத்வேகத்தையும் கொடுக்கும். இதற்கான இடத்தை பெற்றோர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

பொறுப்பு

நீங்கள் அவர்களுக்கு பின்புலத்தில் இருக்கிறீர்கள் என்ற தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுங்கள். அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து, முயற்சிகளை ஊக்குவியுங்கள். குழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்களை மனதார பாராட்டுங்கள். தவறுகளுக்கு விமர்சனங்களையும், தண்டனைகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: