விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் வீடியோ கேம்கள் - பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

வன்முறை கலந்த வீடியோ கேம்களில் மூழ்கும் குழந்தைகள் வன்முறை எண்ணங்களுக்கு ஆட்படுவதாகக் கூறுகிறது ஓர் ஆய்வு.

விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் வீடியோ கேம்கள் - பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
(கோப்புப்படம்)
  • Share this:
வீடியோ கேம்கள் குழந்தைகளிடையே பல வருடங்களாகப் பிரபலமாக இருந்து வந்தாலும் செல்போன் வந்த பிறகு வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் விளையாடி வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக விளையாடத் தொடங்கிய இந்த வீடியோ கேம்கள் இன்று ஒரு போதைப் பொருள் போல பலரை அடிமையாக்கி விட்டது.

ஒருவரை அடிமையாக்கும் வகையிலேயே இந்த வீடியோ கேம்களின் வடிவமைப்பு இருக்கின்றது. ஒரு கேமிற்குள் பல நிலைகள், ஒவ்வொரு நிலைக்கும் சில பரிசுகள், கண்ணைக் கவரும் அனிமேஷன்கள், தினமும் விளையாடுவோருக்கு சிறப்புப் பரிசுகள் எனப் பல வலைகளை விரித்து அனைத்து வயதினரையும் இவை ஈர்க்கின்றன. சிலர் தங்கள் தனிமையை விரட்டவும் இம்மாதிரியான விளையாட்டில் ஈடுபடுவது உண்டு.

சில கேம்கள் சாகசங்கள் நிறைந்ததாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளன. அடித்தல், குத்துதல், துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லுதல், வெடிகுண்டு வீசுதல் போன்ற விளையாட்டுகளை தனியாகவும் பல குழுக்களாகவும் இணையதளத்தில் இணைந்து விளையாடுகின்றனர். சிலருக்கெல்லாம் இவற்றை விளையாடாமல் தூக்கமே வருவதில்லை. கனவிலும் கூட இந்த கேம்கள் வருவதாக என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது நிச்சயம் மனநலச் சிக்கல்களை உருவாக்கும்.


Also see:


ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இப்படியான வன்முறை கலந்த வீடியோ கேம்களில் மூழ்கும் குழந்தைகள் வன்முறை எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பதோடு, இவர்கள் எதிர்காலத்தில் வன்முறையில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத குழந்தைகள் இதில் அதிக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

குழந்தைகள் மட்டுமல்லாமல் இளைஞர்களின் குணங்களும் இந்த மாதிரியான வீடியோ கேம்களால் பாதிக்கப்பட்டுள்ளன. சில இளம் வயதினர் இரவு பகல் பாராமல் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த வகையான காரணங்களால் சில இளம் தம்பதிகள் மத்தியில் விரிசல் விழத் தொடங்கியுள்ளது. தன் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் நாள் முழுவதும் விளையாட்டு மோகத்தில் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் தலையெடுத்துவிட்டன. தூக்கம் கெடுவது, அதன் காரணமாக வயிறு கோளாறு, மன அழுத்தம் போன்றவை உருவாவது என இதனால் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.

இந்த விளையாட்டுகளில் இருந்து வெளிவர நினைப்பவர்கள் இவற்றைப் படிப்படியாக கைவிடுவது நல்லது. திடீரென இதனை நிறுத்தினால், புகைப் பழத்திற்கு அடிமையானவர்களை அப்பழகத்திலிருந்து திடீரென நிறுத்தினால் ஏற்படும் மனநல பாதிப்பிற்கு நிகரான அளவு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டால் குழந்தைகளை இதிலிருந்து மீட்க முடியும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏதேனும் ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருத்தல், பிடித்தமான நபர்களுடன் பேசிக்கொண்டு இருத்தல் போன்றவற்றால் இவ்விளையாட்டு மோகம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

விளையாட்டு விபரீதமாகும் என்கிற கூற்று தற்போது கண்முன் நிகழ்கிறது. உண்மையில் விபரீதத்தின் தீவிரம் உணராமல்தான் இருக்கின்றோம். இனியும் நாம் இதில் அலட்சியம் கொள்ள வேண்டாம்!

- வீரச்செல்வி மதியழகன்
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading