குழந்தை வாசிக்க, எழுத்துக்களை புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்படுகிறதா? டிஸ்லெக்ஸியாவின் அறிகுறியாக இருக்கலாம்..

மாதிரி படம்

ரு புதிய சொல்லகராதி, மொழி மற்றும் இலக்கணத்தைப் புரிந்துகொள்வது கடினம் என்பதால் அவர்களின் கற்றல் மற்றும் பேச்சு செயல்முறை மெதுவாக இருக்கும்.

  • Share this:
இந்தியாவில் உள்ள பள்ளி வகுப்பறையில் 10-15 சதவீதம் குழந்தைகள் தினமும் கற்றல் குறைபாட்டோடு போராட்டம் நடத்துகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ‘டிஸ்’ என்றால் ‘சிரமம்.’ ‘லெக்ஸியா’ என்றால் ‘மொழி’. 'தெளிவற்ற பேச்சு' என்பதன் வார்த்தைப் பிரயோகமே டிஸ்லெக்ஸியா (Dyslexia) என்ற பெயர் வந்துள்ளது.

இதனால் பேசும் ஒலிகளை அடையாளம் காணுவதில் சிக்கல், உச்சரிப்பு சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை வாசிப்பு இயலாமை என்றும் கூறலாம். டிஸ்லெக்ஸியா மூளையில் உள்ள மொழிகளை புரிந்துகொள்ளும் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு தகவலையும் புரிந்து படிக்க இயலாத நிலைக்கு பல காரணங்கள் இருந்தபோதிலும், கருத்தொற்றுமை இல்லாத நிலையையே நாம் 'டிஸ்லெக்ஸியா' (Dyslexia) என்கிறோம்.

டிஸ்லெக்ஸியாவின் அறிகுறிகள் :

பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு எப்படி பார்வைக் குறைபாடு அல்லது கேட்கும் திறன் குறைபாடு உள்ளதோ, அதேபோல்தான் மனித மூளையில் நியூரான்களின் செயல்திறன் குறையும். குழந்தைகள் கண்களால் காணும் ஒரு மொழியின் எழுத்துக்கள், மூளை நரம்புகள் வழியாக செல்லும் முன்னர், அதற்கேற்ப மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் செய்யப்படாமல் போகையில், குழந்தைகளுக்கு ஒரு எழுத்துக்கும் மற்றொரு எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போகும்.உதாரணமாக ஆங்கில எழுத்துக்களான 'b' மற்றும் 'd' ஒரே மாதிரி இருப்பதால், குறைபாடுள்ள குழந்தைகள் 'bag' என எழுதுவதற்குப் பதிலாக 'dag' என எழுதுவர். இதனால் அவர்களின் அடிப்படைக் கல்வி பாதிக்கப்படுகிறது. உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும் வரை அவர்களுக்கு டிஸ்லெக்ஸியா இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிவது கடினமான ஒன்றாகும். ஆனால் சில அறிகுறிகளை வைத்து உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருக்கிறதா என்பதை கண்டறியலாம். உங்கள் குழந்தையின் ஆசிரியர்தான் இதனை முதலில் கண்டறிய அதிக வாய்ப்புள்ளவர்கள். குழந்தைகளின் மூளையின் செயல்திறனை பொறுத்து நோயின் தீவிரத்தன்மை மாறுபடும்.

பள்ளி செல்வதற்கு முந்தைய அறிகுறிகள் :

இந்த அறிகுறிகள் உங்கள் குழந்தை பள்ளி செல்ல தொடங்குவதற்கு முன்பே தோன்றிவிடும். குழந்தைகள் தாமதகமாக பேச தொடங்குவது, புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள், வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது, பெயர், நிறம் மற்றும் எழுத்துக்களை நியாபகத்தில் வைத்துக்கொள்ள சிரமப்படுவது, ரைம்ஸ் கற்றுக்கொள்ளவும், பாடவும் சிரமப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருக்க அதிக வாய்ப்புள்ளது.

வாசிப்பதில் சிரமம்  :

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு வாசிப்பு சிரமம் உள்ளது. மொழி, எழுத்துக்கள், மற்றும் சொற்களைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு கடினமாக உள்ளது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அவை பெரும்பாலும் மெதுவாகப் படித்து சொற்களை தவறாக உச்சரிக்கின்றன. மற்றவர்களுக்கு முன்னால் படிக்க அவர்கள் வெட்கப்படுவார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதன் அறிகுறிகள் அதிகமாகவே இருக்கும்.அவர்கள் வயதிற்கு ஏற்ற வேகம் இல்லாமல் மெதுவாக வாசிப்பது, கேட்கும் வார்த்தைகள் புரியாமல் இருப்பது, வாக்கியங்களை கட்டமைக்க சரியான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது, வார்த்தைகளுக்கு இடையே வித்தியாசம் காணமுடியாமல் தவிப்பது, எழுத்துக்கூட்டி படிப்பதில் சிரமம், படிப்பது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது போன்றவை உங்களை குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

எண்களில் சிரமம் :

டிஸ்லெக்ஸியா உள்ள குழந்தைகள் கணிதத்தை சவாலாகக் கருதுகிறார்கள். கூட்டல், கழித்தல் மற்றும் பிற பெரிய கணக்கீடுகளைச் செய்வது அவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. நாட்கள், வண்ணங்கள் மற்றும் மாதங்களை நினைவில் கொள்வதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும். டிஸ்லெக்ஸியா பெரியவர்ளுக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். படிப்பதில் சிரமம், வாசிக்கும்போது எழுத்துப்பிழைகள், வாசிப்பதில் இருந்து விலகி இருப்பது, வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது, மற்றவர்கள் கூறுவது தாமதமாக புரிவது, மனப்பாடம் செய்வதில் சிக்கல், கணக்கு தொடர்பான பிரச்சினைகள், புதிய மொழியை கற்றுக்கொள்வதில் சிக்கல் என கற்றல் தொடர்பான பல அறிகுறிகள் டிஸ்லெக்ஸியா இருப்பதை உறுதிசெய்யக்கூடும்.மோசமான கையெழுத்து :

டிஸ்லெக்ஸிக் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் எழுத்து நடையில் சிரமப்படுகிறார்கள். பேனா அல்லது பென்சிலை கொண்டு பேப்பரில் எழுத அவர்களுக்கு சிரமமாக இருக்கும். இலக்கணம் மற்றும் நிறுத்தற்குறிகளைப் புரிந்துகொள்வது கூட அவர்களுக்கு கடினமாக இருக்கலாம்.

பணிகளை பின்பற்ற முடியாமை :

இந்த குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பல பணிகள் அல்லது தொடர் வழிமுறைகளைப் பின்பற்றும் திறன் இல்லை. ஏனென்றால், அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மெதுவாக இருப்பதால், வழிமுறைகளைப் புரிந்துகொண்டு செயல்படுத்த அவர்களுக்கு நேரம் எடுக்கும். அவர்கள் சொற்களின் வடிவத்தால் குழப்பமடைகிறார்கள்.

உங்கள் குழந்தை துறுதுறுவென இருக்கிறதா? திறம்பட கையாள இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்..

சாதாரணமாக பேச நேரம் எடுக்கும் :

ஒரு டிஸ்லெக்ஸிக் குழந்தை எப்படி பேசுவது என்பதை அறிய நேரம் எடுக்கலாம். ஒரு புதிய சொல்லகராதி, மொழி மற்றும் இலக்கணத்தைப் புரிந்துகொள்வது கடினம் என்பதால் அவர்களின் கற்றல் மற்றும் பேச்சு செயல்முறை மெதுவாக இருக்கும்.

காரணம் தெரியாமல் படிப்போடு மல்லுக் கட்டும் அவர்களை கண்டறிந்து கூடுதல் பயிற்சிகள் அளித்து புரிதலை அதிகப்படுத்தலாம். கூடவே தனித்திறன்களையும் கண்டறிந்து மேம்படுத்தினால் டிஸ்லெக்ஸியாவை தாண்டியும் சாதிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விடுவதால் குழந்தைகள் அடல்ட் ஸ்டேஜை அடையும் போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர் என்கிறார் கல்வியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Published by:Sivaranjani E
First published: