Home /News /lifestyle /

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் 1 நீரிழிவு : ஆய்வு தகவல்

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் 1 நீரிழிவு : ஆய்வு தகவல்

டைப் 1 நீரிழிவு

டைப் 1 நீரிழிவு

சமீபத்தில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் நடத்திய ஆய்வில், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பலரும் டைப் 1 நீரிழிவால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற அச்சுறுத்தும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் நீரிழிவு நோயால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா தான் முதல் இடத்தில் இருக்கிறது. நீரிழிவைத் தொடர்ந்து பல்வேறு லைஃப்ஸ்டைல் நோய்களும் உருவாகி வருகின்றன. ஆனால், நீரிழிவின் தாக்கம் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமாக மாறியுள்ளது. அது மட்டுமில்லாமல், பல இளம் குழந்தைகளும், வளரும் பருவத்தில் உள்ள சிறுவர்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் நடத்திய ஆய்வில், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பலரும் டைப் 1 நீரிழிவால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற அச்சுறுத்தும் தகவல் வெளியாகி உள்ளது.

டைப் 1 நீரிழிவு என்பது உடலால் இன்சுலின் சுரக்க முடியாத நிலையைக் குறிக்கும். எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை ஊசி மற்றும் மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொண்டு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு என்ற நிலையில் உடலுக்கு போதுமான அளவு இன்சுலின் சுரக்காது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதை சரி செய்வதன் மூலமும், மருந்துகள் மூலமும் டைப் 2 நீரிழிவு தீவிரமான பாதிப்பாக மாறாமல் தடுக்க முடியும். உதாரணமாக, தினசரி உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகிய இரண்டுமே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும். ஆனால், டைப் 1 டயாபிட்டீஸ் பொறுத்தவரை, தினசரி மருந்துகள் மற்றும் சில நேரங்களில் இன்சுலின் ஊசியும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். மேலும், குளுக்கோஸ் அளவை அவ்வபோது மானிட்டர் செய்ய வேண்டும்.



இந்த வகை நீரிழிவு நோயால் இந்தியா முழுவதும் இது வரை 2.5 லட்சம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகளும் அடங்கும். அதிர்ச்சியூட்டும் படியாக, பாதிக்கப்பட்டவர்களில் 14 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 95,600 என்று தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீங்கள்  ஹெலிகாப்டர் பெற்றோரா..? கண்டறிய உதவும் எளிய வழிகள்..! 

ICMR வெளியிட்ட ஆவணத்தில், குழந்தைகள், டீனேஜர்கள் மற்றும் பெரியவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோயை எப்படி நிர்வகிப்பது என்பது பற்றிய விவரங்களும் உள்ளது. டைப் 1 நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தால் எப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, ரத்தத்தில் சர்க்கரை அளவை எப்படி கண்காணிப்பது, உடற்பயிற்சி, சிகிச்சை, மருந்துகள், உள்ளிட்ட விவரங்கள் மற்றும் வழிமுறைகளை, 173 பக்க ஆவணமாக வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகள் அனைத்துமே எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள், ICMR அதிகாரிகள் மற்றும் மூத்த மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது.



ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லையென்றால், எந்த வயதினருக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம். ஆனால், 10-14 வயதுள்ள குழந்தைகளை அதிகமாக டைப் 1 நீரிழிவு பாதிக்கிறது. 25–34 வயதுள்ளவர்களை டைப் 2 நீரிழிவு பாதிக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Kids diabetes

அடுத்த செய்தி