இன்றைய நவீன யுகத்தில் தொழில் நுட்பங்கள் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. இரண்டு வயது, மூன்று வயது குழந்தைகள் கூட மிக எளிதாக ஸ்மார்ட்போன்களை இயக்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. தங்களுக்கு வேண்டிய வீடியோக்களை அவர்களே மாற்றிக் கொள்வதும், மிக எளிதாக வீடியோ கேம்களை விளையாடுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்டர்நெட், ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக் வீடியோ கேம்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் இல்லாத ஒரு உலகத்தை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குழந்தைகள் வந்து விட்டனர். குழந்தைகளோடு சேர்த்து பெரியவர்களையும் இந்த தொழில்நுட்பங்கள் ஆட்கொண்டுள்ளன.
ஆனால் குழந்தைகளை அடிக்கடி இந்த டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்த அனுமதிப்பது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் நீண்ட நேரம் இவற்றில் செலவிடுவதின் மூலம் பல விதமான ஆபத்துக்கள் உண்டாக்கலாம். ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் குழந்தைகள் அமைதியாக இருப்பது போல தோன்றினாலும், அதுவே பிற்காலத்தில் அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.
இதைப் பற்றி பேசிய மனநல மருத்துவர் ஜென்னி ராட்ஸ்கி என்பவர் கூறுகையில் “ஆரம்பத்தில் குழந்தைகளை மொபைல் போன் உபயோகிக்க அனுமதிப்பதோ அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை உபயோகிக்க அனுமதிப்பதும் தீங்கில்லாத ஒன்றாக தோன்றலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு இது தொடரும்போது கண்டிப்பாக பிரச்சனையை உண்டாக்கும். மேலும் அதிக நேரம் எலக்ட்ரானிக் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை குழந்தைகள் பயன்படுத்துவதால் உண்டாகும் பிரச்சினைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் விதிக்க வேண்டும்:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gadgets, Kids Care, Parenting Tips