பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு காரணங்களுக்காக கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குறிப்பாக, பதின்பருவத்தில் அதாவது டீனேஜ் பிள்ளைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் தங்கள் பெற்றோரோடு முரண்படுவார்கள். உங்களுக்கு பதின்மவயதில் மகனோ மகளோ இருக்கிறாரா? அவர்களுடன் ஏற்படும் முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்று பார்க்கலாம்.
ஏன் முரண்பாடு ஏற்படுகிறது?
முரண்பாட்டுக்கு முக்கிய காரணம், தேவைகள், மற்றவர் மீதான எதிர்பார்ப்புகள் மற்றும் அவரவரின் பார்வை. உதாரணமாக, நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், பொழுதுபோக்கு, விளையாட்டில் கவனம் சிதறக்கூடாது என்பது பெரும்பாலான டீனேஜ் பிள்ளைகள் இருக்கும் பெற்றோரின் தேவையும், எதிர்பார்ப்பும். இதுவே பெரிய முரண்பாடாக இளம் வயதினரிடம் இருக்கும்.
முரண்பாடுகள் உண்டாக்கும் விளைவுகள் :
சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் போல தொடங்கும் பிரச்சனை, நாளடைவில் பெற்றோர் மற்றும் மகன் / மகளுக்கு இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். இதனால் உறவில் விரிசல் விழவும் வாய்ப்புள்ளது.
முரண்பாடுகளை எப்படித் தவிர்ப்பது :
தன்னுடைய மகனோ மகளோ தான் கூறுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை பெரிய பிரச்சனையாக பாவிக்காமல், சூழலை மென்மையாகக் கையாள வேண்டியது பெற்றோரின் கடமை. உங்கள் டீனேஜ் பிள்ளையுடன் இருக்கும் முரண்பாடுகளை, கருத்து வேறுபாடுகளை எளிதாகக் கையாள்வதற்கான டிப்ஸ் இதோ..,
அமைதி :
உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் வாக்குவாதம் ஏற்படும் சூழல் வந்தால், நீங்கள் விரும்பாத ஏதோ ஒன்றை உங்கள் பிள்ளை செய்தால், அல்லது உங்களைக் கோபப்படுத்தும் படி அல்லது காயப்படுத்தும் படி உங்கள் பிள்ளை நடந்து கொண்டால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது – அமைதியாக இருப்பதாகும். கொஞ்ச நேரத்துக்கு எதுவும் கூறாமல், அமைதியாக இருப்பதே இருவருக்கும் நல்லது.
பிள்ளைகளை குறை சொல்லக்கூடாது :
உங்கள் பிள்ளை செய்த ஏதோ ஒரு செயலுக்காக நீங்கள் குறை சொல்லிக்கொண்டே இருந்தால், அவர்களை அது மீண்டும் மீண்டும் அத்தகைய செயல்களை செய்வதற்கு தூண்டும். எனவே, அவர்கள் மீது தவறிருந்தால், பெற்றோராகிய நீங்கள் அதனை நிதானமாக கையாள வேண்டும்.
மொபைல்… குழந்தைகள்… பெற்றோர்களுக்கு மருத்துவ உலகம் விடுக்கும் எச்சரிக்கை!- Explainer
உண்மையான பிரச்சனை குறித்து தெரிந்து கொள்ளுங்கள் :
பெரும்பாலும், பதின் பருவத்தினர் வெளிப்படையாக இருக்க மாட்டார்கள். அது மட்டுமின்றி, மேலே கூறியது போல, உங்கள் பார்வையும் உங்கள் மகன் அல்லது மகளின் பார்வையும் வேறு வேறாகத் தான் இருக்கும். உங்களுக்கு சின்ன பிரச்சனையாக தோன்றுவது அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாகத் தெரியலாம். உங்கள் பிள்ளை கோபமாக அல்லது எரிச்சலாக நடப்பதற்கான காரணம் என்ன என்பதை யூகிக்க வேண்டாம். அவர்கள் மீது தவறு என்று நீங்கள் ரியாக்ட் செய்யும் முன்பு, உண்மையான பிரச்சனை என்பதை கண்டறிய முயற்சி செய்யுங்கள்.
தவறு செய்வது இயல்பு தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்
தவறே செய்யாத மனிதன் என்று யாருமே இல்லை. அதிலும், குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினர் அவ்வபோது தவறு செய்வது மிக மிக இயல்பானது. எந்தத் தவறுமே செய்யாத நபர் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது. இதை பெற்றோராகிய நீங்களும் உணர வேண்டும்.
புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்
டீனேஜ் என்பது மிகவும் சிக்கலான பருவம். உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு மாற்றங்களை, வளர்ச்சியை எதிர்கொள்ளும் வயது. அது மட்டுமின்றி, பள்ளி, பொதுத்தேர்வு, கல்லூரி என்று அடுத்தடுத்து பல சவாலான சூழல்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, அதிகமாக கண்டிப்பு காட்டுவது எந்த வகையிலும் உதவாது. எனவே, அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளுக்கு ரூல்ஸ் வேண்டாம்.. ப்ரீயா விடுங்க..
அடிப்படையாக சில விதிகளை உருவாக்குங்கள்
உங்கள் மகன் அல்லது எதை எல்லாம் செய்யலாம், அவர்களின் எல்லை ஆகியவற்றை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அடிப்படையாக சில விதிகளை உருவாக்கி, அதன்படி நடக்க வேண்டும் என்று கூறுங்கள். இதனால் பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Teenage, Teenage parenting