• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெருந்தொற்று காலத்தில் அதிகரித்த குழந்தைகள் அடிபுடி… கையாள்வது எப்படி?

பெருந்தொற்று காலத்தில் அதிகரித்த குழந்தைகள் அடிபுடி… கையாள்வது எப்படி?

சகோதர சண்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பெற்றோர்களாகிய நீங்கள் அதனை புரிந்து கொண்டு, அதேநேரத்தில் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

  • Share this:
சகோதர, சகோதரிகளுடன் பிறந்த அனைவரும் சிறுவயதில் சகோதர சண்டையை எதிர்கொள்ளாமல் கடந்திருக்க வாய்ப்பே இல்லை. எதற்காக சண்டை வருகிறது என்ற வரைமுறையெல்லாம் இருக்காது. துணி, உணவு, பொம்மை, விளையாட்டு என அனைத்திற்கும் சண்டை வந்திருக்கும். சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்வது என்பது பெற்றோர்களுக்கு தலைவலியே.

அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் சகோதரர்கள் சண்டையிட்டுக்கொள்வதை பார்க்கும்போது, இருவருக்கும் தகுந்த பரிசு கிடைக்கும். ஒரு சில நேரங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சகோதரர்களுக்கு இடையில் மேலும் பிரச்சனையை உண்டாக்கும். இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ஒப்பீடு:

சகோதரர்களுக்கு இடையே கட்டாயம் ஒப்பீடு இருக்கக்கூடாது. இருவரையும் ஒப்பீடு செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். யார் வேகமாக ஓடுவார்கள்? சாப்பிடுவார்கள்? போன்ற ஒப்பீட்டு விஷயங்களை செய்யக்கூடாது. இது அவர்களுக்கு இடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். சகோதரர் மீது தேவையில்லாத கோபம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே பிரிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Must Read | அதிக நேரம் குளிப்பவரா நீங்கள்? தெரிந்தே இந்த தவறுகளை இனி செய்யாதீர்கள்!

புரிந்து கொள்ளுதல்: 

தொடர்ந்து இருவருக்கும் இடையே சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தால், அப்போதைக்குரிய தீர்வை மட்டும் பெற்றோர் எடுக்காமல், மோதல்களுக்கான பின்புலத்தை அறிய முற்பட வேண்டும். இதற்கு முன்பு நேர்ந்த சில விஷயங்களின் அடிப்படையில், அவன் என்ன என்னைவிட பெரியவனா? என்னால் முடியாதா? போன்ற எண்ணங்கள் சகோதரர்களுக்குள் ஏற்பட்டிருக்கும். அதனை கண்டுபிடித்து இருவரும் சமம், தனித்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

தனித்தன்மை:

ஏற்கனவே கூறியதுபோல் இருவருக்கும் இடையில் எந்த ஒப்பீடும் இருக்கக்கூடாது. அவரவர் தனித்தன்மையை பாராட்டி சீராட்டி வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளின் தனித்தன்மையை அங்கீகரிக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் மோதல் மனோபாவம் குறைந்து அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். குழந்தைகளும் தன்னால் இது முடியவில்லையே? என ஏங்கமாட்டார்கள். அவரவர் இயல்புக்கு ஏற்ப ஒவ்வொரு விஷயத்தை செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.

நியாயமாக நடத்துதல்:

சகோதரர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இருக்கும் என்பதால் சமமாக நடத்துவது என்பது இயலாத விஷயம். அதாவது, வயதுக்கு ஏற்ப பொம்மைகளும், துணிகளும் மற்றும் தேவைகளும் மாறுபடும். அதனால், ஒருவருக்கு செய்வதை இன்னொருவருக்கு செய்ய முடியாது என்பதால் இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு இதனை புரிய வைக்க வேண்டும்.

விளையாட்டு:

ஒரே மாதிரியான விளையாட்டுகளை குடும்பத்துடன் இணைந்து விளையாடுவதை செய்யலாம். பெற்றோர்களும் இணைந்து விளையாடும்போது குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரிக்கும். இந்த மாதிரியான செயல்கள் இருவருக்கும் இடையேயான விரிசலைக் குறைத்து பாசம் பெருவதற்கான வாய்ப்பாக அமையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவனிக்க வேண்டிவை:

சகோதர சண்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பெற்றோர்களாகிய நீங்கள் அதனை புரிந்து கொண்டு, அதேநேரத்தில் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். ஒரு எல்லைக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்பதால் இருவரையும் கண்டிக்க வேண்டும். முறையான நேரத்தில் சில கண்டிப்புகளை செய்ய தவறும்போது பெற்றோர்கள் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: