Home /News /lifestyle /

நீங்கள் குழந்தைகளின் மனம் புண்படும்படி பேசும் பெற்றோர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

நீங்கள் குழந்தைகளின் மனம் புண்படும்படி பேசும் பெற்றோர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

குழந்தைகள் வளர்ப்புமுறை

குழந்தைகள் வளர்ப்புமுறை

நாம் காட்டும் அதீத அக்கறை என்பது சில சமயம் குழந்தைகளின் மனதை புண் படுத்துவதாக அமைந்து விடும். இதனால், அவர்கள் தன்னம்பிக்கை இழந்து தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாறி விடுவார்கள்

குழந்தைகளை நல்ல குணமும், பண்பும் நிறைந்தவர்களாக வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு தான். அதே சமயம், நாம் காட்டும் அதீத அக்கறை என்பது சில சமயம் குழந்தைகளின் மனதை புண் படுத்துவதாக அமைந்து விடும். இதனால், அவர்கள் தன்னம்பிக்கை இழந்து தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாறி விடுவார்கள் அல்லது எளிதில் கோபம் கொள்ளும் முரட்டு குணம் உள்ளவராகவும் கூட மாறி விடுவார்கள்.

பிறர் குழந்தைகளுடன் ஒப்பீடு செய்வது :

பொதுவாக எல்லா பெற்றோரும் செய்யும் பெரும் தவறு இது தான். “அடுத்த வீட்டு பையன் அல்லது பொண்ண பாரு, எவ்வளவு சமத்தா இருக்காங்க, நீயும் தான் இருக்கியே’’ என்று குழந்தைகளிடம் எப்போதுமே சலித்துக் கொள்வார்கள். இது உங்கள் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கும். ஆகவே, குழந்தையின் திறன் அல்லது குணங்களை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யாதீர்கள்.

கேள்வி கேட்பதை தடுப்பது :

குழந்தைகளிடம் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அதனால், ஒரு விஷயம் குறித்து அடுக்கடுக்காக அவர்கள் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால், சில பெற்றோர் இதை மட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். “கேள்வி எல்லாம் கேட்காதே, சொன்னதை செய்’’ என அதட்டி அடக்கி வைத்து விடுவார்கள்.



எதற்கெடுத்தாலும் வசை பாடுவது :

நீங்கள் சொன்னதை செய்யாமல், குழந்தை அதனுடைய விருப்பத்திற்கு எதையேனும் செய்தால், அதற்காக பெற்றோர் கடிந்து கொள்வார்கள். எந்த சமயத்திலும், எப்போதுமே குழந்தையின் செயல்களை சுட்டிக்காட்டி வசை பாடிக் கொண்டே இருப்பார்கள்.

சொல் பேச்சு கேட்காத குழந்தையை வழிக்கு கொண்டு வருவது எப்படி..? பயனுள்ள 6 குறிப்புகள் இதோ!

சமூகம் என்ன நினைக்கும் தெரியுமா?

எல்லோருடைய வீட்டிலும் நிச்சயமாக இந்த வசனம் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கும். “இதெல்லாம் தப்பு, வெளில தெரிஞ்சா என்ன நினைப்பாங்க தெரியுமா’’ என்று குழந்தைகளை உணர்வு ரீதியாக அச்சுறுத்துவது. சமூகத்திற்கு என்று தனி விதிகள் எதுவும் எழுதப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பணத்தை பற்றி என்ன தெரியும் :

குழந்தைக்கு பக்குவம் போதாது என்று நிதி சார்ந்த விஷயங்களை அவர்களிடம் பெற்றோர் பகிர்ந்து கொள்வதே இல்லை. ஆனால், சிறு வயதில் இருந்தே பணத்தில் தன்னிறைவு பெறுவது மற்றும் பணத்தின் முக்கியத்துவம் குறித்து கற்பிக்க வேண்டும்.



உன்னைவிட எங்களுக்கு நல்லா தெரியும் :

வயதில் பல ஆண்டுகள் மூத்தவர் என்பதால் உங்களின் அனுபவம் கூடுதலாகத் தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், குழந்தை சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். “உன்னைவிட எங்களுக்கு நல்லா தெரியும்’’ என்று அடக்கி வைக்கக் கூடாது.

இந்த 90 சதவீத மார்க் எடுக்கணும் :

கல்வியில் உங்கள் குழந்தையின் திறன் என்னவோ, அதற்கு ஏற்றபடி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். மாறாக, பிற குழந்தைகளை போல 90 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கக் கூடாது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Parenting Tips

அடுத்த செய்தி