குழந்தைகளிடம் அன்பாக பேசுவது, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, பெற்றோர்கள் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்போம் என உணரவைப்பது போன்றவற்றை மேற்கொண்டாலே போதும், அடம்பிடித்து கோபத்தில் இருக்கும் குழந்தைகள் கூட நம் வழிக்கு வந்துவிடுவார்கள்.
குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் சிறந்த stress buster ஆக உள்ளனர். ஆம் நமக்கு அலுவலகம், குடும்ப வாழ்க்கை என பல இடங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், வீட்டில் உள்ள நம் குழந்தைகளின் மழலைப்பேச்சுகளைக் கேட்டாலே எல்லாம் பறந்துவிடும். ஆனால் என்ன? சில சமயங்களில் குழந்தைகளால் நமக்கு ஏற்படும் அன்புத்தொல்லைகளும் ஏராளம்.
பல நேரங்களில் அதனை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. நிச்சயம் இதுப்போன்ற சூழ்நிலைகளை ஒவ்வொரு பெற்றோர்களும் சந்தித்துவருகிறோம்.. இந்நிலையில் இன்றைக்கு கோபமாக இருக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? அந்நேரத்தில் பெற்றோர்கள் என்ன சொல்ல வேண்டும்? என நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்..
கோபத்தில் இருக்கும் குழந்தைகளை சமாளிக்கும் முறை:
உங்களது குழந்தைகள் கோபமாக இருந்தால், நீங்கள் அவர்களை அமைதிப்படுத்த சொல்லாதீர்கள்.. ஏனென்றால் அந்நேரத்தில் நாம் அமைதியாக இருக்கும்படி கூறினால் அவர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துவதோடு உங்களது குழந்தைகளின் நிலையை மோசமாக்கக் கூடும். எனவே இதுப்போன்ற விஷயங்களை இனி பின்பற்றுங்கள்..
முதலில்.. கோபமாக இருக்கும் உங்களது குழந்தைகளிடம் சென்று, உங்களது கஷ்டம் எங்களுக்குத் தெரிகிறது. கோபமாக இருப்பது பரவாயில்லை ஆனால் என்ன தவறு எங்களிடம் உள்ளது?அதனை சொல்லுங்கள் என அமைதியாக கேளுங்கள். பின்னர் எதுவாக இருந்தாலும் நாம் இருவரும் சேர்ந்து தீர்வு காண்போம் என பெற்றோர்கள் குழந்தைகளிடம் கூற வேண்டும்.
இதோடு எங்களுக்கும் சில சமயங்களில் கோபம் வரக்கூடும். ஆனால் சற்று யோசித்துப்பார்த்துக் கோபத்தில் எந்த நியாயமும் இல்லை என்பதை நினைத்து வருதமடைந்துள்ளோம். எனவே இந்த நேரத்தில் உங்களுக்குத் தேவைப்பட்டால் நான் உதவ இங்கே இருக்கிறேன் என பெற்றோர்கள் கூற வேண்டும். இந்த வார்த்தைகள் நிச்சயம் குழந்தைகளின் கோபத்தை சற்று தணிக்கச் செய்யும்.
குழந்தைகளை எந்த வயதில் டியூஷன் சேர்ப்பது சிறந்தது..? பெற்றோர்களுக்கான கைட்லைன்
மேலும் அதிகப்படியான கோபத்தில் இருக்கும் குழந்தைகளைக் கட்டி அரவைணத்து அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்யலாம். உங்களது அன்பு அவர்களைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும். உடனே உங்களது வார்த்தைகளைக் கேட்க மாட்டார்கள். அவர்களுக்காக சிறிது நேரம் நீங்கள் காத்திருக்க வேண்டும்.
பின்னர் குழந்தைகளுக்கான விளையாட்டு நேரம், படிக்கும் நேரம், தூங்கும் நேரம், டிவி பார்க்கும் நேரம் என நேரத்தை ஒதுக்கிக்கொடுத்தாலே எதற்கும் அடம்பிடித்து அழ மாட்டார்கள். நம்முடைய கனவுகளை நிறைவேற்ற அவர்கள் படிக்க வேண்டும் என்று அவர்களிடம் கண்டிப்பாக இருக்காதீர்கள். அவர்களின் உணர்வுகளுக்கும் மரியாதைக்கொடுத்து ஆசையை நிறைவேற்ற முயலுங்கள். சில நேரங்களில் குழந்தைகள் கேட்கும் விஷயம் உபயோகமானதாகத் தான் இருக்கும்.. எனவே வாங்கிக்கொடுங்கள். ஆனால் தேவையற்ற பொருள்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்..
நம்முடைய குழந்தைகள் நிச்சயம் நாம் சொல்வதை கேட்கும். கேட்காவிட்டாலும் நாளடைவில் சரியாகிவிடும். எனவே எல்லா நேரங்களிலும், ஏதோ ஒரு விஷயத்திற்காக குழந்தைகளை அதிகளவில் திட்டாதீர்கள். ஏனென்றால் நாமே நம் குழந்தைகளை கோபப்படும் மனநிலைக்கு தள்ளிவிடுவோம். எனவே பெற்றோர்கள் புரிந்து நடந்துக்கொண்டு நமக்காக உள்ள நம் மழலைச்செல்வங்களை மகிழ்வுடன் பார்த்துக்கொள்ள இனி முயன்று பார்ப்போம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anger, Parenting Tips