முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளிடம் பெற்றோர் இந்த விஷயங்களை செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்!

குழந்தைகளிடம் பெற்றோர் இந்த விஷயங்களை செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்!

குழந்தை

குழந்தை

Parenting Tips | குழந்தைகளிடம் அன்பும், கனிவும் காட்டும் அதே சமயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், சில விஷயங்களில் குழந்தைகளை கட்டாயப்படுத்தும்போது அவர்களிடம் நம்பிக்கை சிதைவு, வெறுப்புணர்வு போன்றவை மேலோங்குகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

நல்ல குணமும், நேர்மையும் கொண்ட குழந்தைகளை வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை ஆகும். குழந்தைகளிடம் அன்பும், கனிவும் காட்டும் அதே சமயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், சில விஷயங்களில் குழந்தைகளை கட்டாயப்படுத்தும்போது அவர்களிடம் நம்பிக்கை சிதைவு, வெறுப்புணர்வு போன்றவை மேலோங்குகின்றன.

பெற்றோரிடம் அன்பு காட்டாமல் வெறுமை உணர்ச்சியை குழந்தைகள் கடந்து செல்கின்றன. பின்னாளில் முரட்டுத்தனமாகவும், கோபம் கொண்டவராகவும் மாறுவதற்கும் இது காரணமாக அமைந்து விடுகிறது. குழந்தைகளை அவர்கள் மனநிலையில் இருந்து அணுகுவதற்கு பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தெந்த விஷயங்களில் குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதை கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது

குழந்தைகள் அப்பாவித்தனமாக இருப்பவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். பெற்றோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அவர்களுக்கு தேவை. ஆனால், ஏதேனும் ஒரு விஷயத்தை கட்டாயம் முடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போது நம்பிக்கையை இழந்து, ஆற்றலையும் இழக்கின்றனர்.

எப்போது நிறுத்த வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் குழந்தையின் நலனுக்காக முன்வைக்கும் நல்ல விஷயம் தான் என்றாலும் கூட, அதை அவர்கள் செய்யவில்லை என்றபோது மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கூறுவீர்கள். ஆனால், எப்போது அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள். எல்லை தாண்டி வற்புறுத்தல் கூடாது.

Also Read : குழந்தைகளிடமும் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் ஆபத்து : என்ன காரணம்..? தடுக்கும் வழிகள் என்ன..?

குழந்தைகளை பொய் பேச கற்றுக் கொடுக்காதீர்கள்

உங்களின் சுயநலனுக்காக பொய் பேசும்படி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காதீர்கள். பொய் பேசுவது தீய பழக்கம் என்பதே முதலில் கவனிக்க வேண்டிய விஷயம். இரண்டாவதாக, பொய் பேசுவதன் மூலமாக பிறரை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை நீங்களே கற்றுக் கொடுக்கிறீர்கள்.

பசியில்லை என்றாலும் சாப்பிடக் கட்டாயப்படுத்துவது

குழந்தைகளுக்கு உணவின் மீது ஆசையும், பசியும் இருந்தால் அவர்களே விறுவிறுவென்று சாப்பிடுவார்கள். ஆனால், பசி இல்லை என்றால் நாம் வைத்த உணவை மீதம் வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த சமயத்தில் இதை முழுவதும் சாப்பிட்டுத்தான் எழுந்திரிக்க வேண்டும் என்று அதட்டக் கூடாது. பசியில்லா நேரத்தில் வலுக்கட்டாயமாக சாப்பிடுவதால் வயிறு மந்தமாகிவிடும்.

Also Read : குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது அவர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்..?

பிறருக்கு முத்தம் கொடுக்க, வணக்கம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது

நமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் போன்றோரை சந்திக்கும்போது அவர்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும், கட்டியனைக்க வேண்டும் அல்லது வணக்கம் செலுத்த வேண்டும் என்று குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது.

இல்லாத தவறுக்கு மன்னிப்பு கேட்க சொல்வது

உங்கள் குழந்தை தவறே செய்யாத போது, அவர்களை மன்னிப்பு கேட்கும்படி அல்லது வருத்தம் தெரிவிக்கும்படி வற்புறுத்தக் கூடாது. இதனால், தவறு செய்யும்போது கூட அதை உணராமல் சாதாரணமாக கடந்து சென்று விடுவார்கள்.

Also Read : சமீப ஆண்டுகளாக குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோய் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்.!

டயட் கடைப்பிடிக்க சொல்வது

குழந்தை அதுவாக விரும்பி நிறைய சாப்பிடுகிறது என்றால், அப்படியே விட்டுவிடுங்கள். வளர் இளம் பருவத்தில் இது சாதாரணமானது. ஆனால், இதற்கு மேல் வேண்டாம் என்று சாப்பாட்டுக்கு தடை போடாதீர்கள்.

விரும்பாத செயலை கட்டாயப்படுத்துவது

top videos

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஆனால், நம் குழந்தையிடம் இல்லாத ஒரு திறமையை நாம் வலுக்கட்டாயமாக திணிக்க நினைக்கக் கூடாது.

    First published:

    Tags: Lifestyle, Parenting Tips