• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • டீனேஜ் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் காட்ட வேண்டிய அன்பும், அக்கறையும்!

டீனேஜ் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் காட்ட வேண்டிய அன்பும், அக்கறையும்!

காட்சி படம்

காட்சி படம்

Parenting Tips : டீனேஜ் வயது குழந்தைகளை சமாளிப்பது என்பது பெற்றோருக்கு கடினமாக இருக்கும்.

  • Share this:
குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று. நாம் எந்தளவுக்கு அவர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறோமோ, அதேபோல அவர்களின் மனநலத்திலும் நாம் கவனம் செலுத்துவது அவசியம். அதிலும், சில பெற்றோர்கள் குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயது வரை கவனித்து கொள்கின்றனர். பின்னர், அவர்கள் பெரியவர்களானவுடன் அவர்களின் மீதான கவனம் குறைந்து விடுகிறது.

இதன் காரணமாக பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சில குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இன்றைய ஸ்மார்ட்போன் காலத்தில் ஒவ்வொரு பள்ளிக்குழந்தையும் தனக்கென ஒரு மொபைல்போன்களை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலமாக கூட குழந்தைகள் வழிதவறிச்செல்லலாம். இதனை பெற்றோர்களாகிய நாம் தான் கவனிக்க வேண்டும். எனவே, டீன் வயதில் இருக்கும் உங்கள் ஒவ்வொரு குழந்தைகள் மீதும் நீங்கள் காட்ட வேண்டிய அன்பும், உங்களிடம் இருந்து அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசிய விஷயங்கள் குறித்தும் நாம் இந்த பதிவில் காணலாம்.

டீனேஜ் வயது குழந்தைகளை கவனிப்பது ஏன் முக்கியமானது :

டீனேஜ் வயது குழந்தைகளை சமாளிப்பது, அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வது என்பது பெற்றோருக்கு கடினமாக இருக்கும். அதேபோல டீன் வயதில் பெற்றோரின் கண்டிப்புகளை குழந்தைகள் ஏற்றுக்கொள்வதில் சிரமத்தை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரும் தங்களது எண்ணங்களைப் புரிந்துகொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். இது அவர்களது உறவை மோசமாக்கும். எனவே உங்கள் பதின்வயது குழந்தைகளுடன் கண்டிப்பான பெற்றோர்களாக இருப்பதை விட அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க கூடிய தோழர்களாக இருப்பது அவசியம்.

பெற்றோர்கள் செய்யவேண்டிய சில விஷயங்கள் :

பதின்வயதினர் எதிர்காலத்தில் தாங்கள் என்னவாக வேண்டும் என்பதைக் கண்டறிந்து, பெற்றோரின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் நேரம் இது. அப்படியானால் பெற்றோர்களாகிய நாம் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.,

1. அவர்களின் ஆர்வத்தில் நீங்களும் ஆர்வம் காட்டுங்கள் :

அவர்களின் பொழுதுபோக்கைப் பற்றிய முழுமையான அறிவு உங்களுக்கு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அவர்களுக்கு பிடித்த விஷயங்களில் நீங்களும் ஆர்வத்தைக் காட்டலாம் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்க உங்களால் முடிந்தவரை பங்கெடுக்கலாம்.

2. அவர்களை ஊக்குவிக்கவும் :

விமர்சிப்பதை விட, அவர்களின் கனவுகளைத் தொடர அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். அவர்களின் சிறிய முயற்சிகளை பாராட்ட தவறவிடக்கூடாது.

also read : உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்!

3. அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் :

உங்கள் பிள்ளையை மதிய உணவு அல்லது பிக்னிக்குகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை உருவாக்குங்கள். அதை ஒரு பழக்கமாக வைத்து, அதற்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

4. உங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள் :

உங்கள் குறுக்கீடு இல்லாமல் தங்கள் விஷயங்களைத் தாங்களே நிர்வகிக்க உங்கள் டீன் வயது குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுங்கள். அனுமதியின்றி அவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

5. அவர்களின் எதிர்கால திட்டத்தைப் பற்றி கேளுங்கள் :

அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் எதிர்கால திட்டத்தைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள், அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

6. அவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்:

உங்கள் டீனேஜ் குழந்தைகள் ஏதாவதொரு பிரச்சனையுடன் உங்களிடம் வந்தால், அவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்குங்கள். பெற்றோர்கள் என்றால் கண்டிப்பு அவசியம் தான். ஆனால் அதுவே அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அவர்களுக்கு ஆலோசனை அறிவுரைகளை வழங்குவது அவசியம்.

7. உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எவ்வெளவு முக்கியம் என்பதை உணர்த்துங்கள்:

உங்கள் குழந்தைகளை நீங்கள் எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள், எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக அவர்களிடம் தெரிவியுங்கள். இது உங்கள் இருவருக்குமான உறவை வலுப்படுத்த உதவும்.

குழந்தை பருவத்தில் உங்கள் பிள்ளைகள் செய்யும் சேட்டை, குறும்புத்தனம், அன்பான விஷயங்கள் போன்றவற்றை எந்தளவுக்கு நேசிக்கிறோமோ, அதேபோல உங்கள் குழந்தைகள் டீன் வயதை எட்டியவுடன் அவர்களை நேசிப்பதோடு அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதில் அக்கறை செலுத்த வேண்டியதும் அவசியம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: