முதல் மாதவிடாய் எதிர்கொள்ளும் உங்கள் மகளுக்கு எப்படி வழிகாட்ட வேண்டும்..? தாய்மார்களுக்கான குறிப்புகள்..!

முதல் மாதவிடாய்

முந்தைய காலத்தில் 14-16 வயதில் பூப்பெய்தல் நிகழும், ஆனால் இப்போது இது 12-13 வயதிலேயே நிகழ்ந்து விடுகிறது.வாழ்க்கை முறை , உணவு ஆகியவை தற்போது மாறி வருவதால் மாதவிடாயின் வயது முன்கூட்டியே நிகழ்கிறது

  • Share this:
பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று பூப்பெய்துவது மற்றும் அதனை தொடர்ந்து வரும் மாதவிடாய் சுழற்சி. உங்களுக்கு ஒரு மகள் இருந்தால், அவளுடைய மாதவிடாய் சுழற்சி தொடங்கும் ஒரு கட்டத்தில் உங்களிடம் வருவாள். முதல் முறையாக ஏற்படும் மாதவிடாய் குறித்து எண்ணற்ற சந்தேகங்களை நீங்கள் தீர்க்க வேண்டியது இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் அவள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அமைதியாக பதிலளிக்கவும். நீங்கள் பொறுமையாக கையாளுவது உங்கள் குழந்தைக்கு உதவும்.

ஃபோர்டிஸ் லா ஃபெம் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெங்களூரைச் சேர்ந்த மூத்த மகப்பேறு மருத்துவர் பிரதிமா ரெட்டி எம்.பி.பி.எஸ்., இதுகுறித்து அளித்த விளக்கத்தில் மெனார்ச் என்பது மாதவிடாய் காலத்தின் ஆரம்பம் என்றும் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிறு வயதிலேயே பூப்பெய்து விடுவதால் மாதவிடாயை சிறுமிகள் பலரும் எதிர்கொள்ளும் சூழல் நிலவுவதாக கூறியுள்ளார்.

முந்தைய காலத்தில் 14-16 வயதில் பூப்பெய்தல் நிகழும், ஆனால் இப்போது இது 12-13 வயதிலேயே நிகழ்ந்து விடுகிறது. ஒரு சிலர் 12 வயதுக்கும் குறைவாக உள்ள நிலையில் கூட பூப்பெய்து விடுகிறார்கள். இதன் விளைவாக சிறு வயதில் இருந்தே மாதவிடாயை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள்.



வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சுகாதார விளைவுகள் காரணமாக இது நிகழ்கிறது. ஆனால் இது புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் பிரதிமா ரெட்டி விளக்கியுள்ளார்.

மேலும் ஹைதராபாத் யசோதா மருத்துவமனைகளின் மகப்பேறியல் ஆலோசகர் டாக்டர் சாரதா இதுகுறித்து பேசுகையில், வாழ்க்கை முறை , உணவு ஆகியவை தற்போது மாறி வருவதால் மாதவிடாயின் வயது முன்கூட்டியே நிகழ்கிறது என தெரிவித்தார்.

பெண்கள் 14 வயதிற்குள் பூப்பெய்து விட வேண்டும், இல்லை என்றால் ஆலோசனை பெற மருத்துவரை அணுக வேண்டும். அதேநேரத்தில் பெண்கள் 8 வயதிற்கு முன்னர் பூப்பெய்து விட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும், 6 வயதிற்கு முன்பே பூப்பெய்தல் நிகழ்ந்தால் நிச்சயமாக ஆபத்தானது என அவர் எச்சரிக்கிறார்.

முன்கூட்டியே பூப்பெய்தல் நிகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் விவரிக்கின்றன. அதாவது மாதவிடாய் நிகழும் பெண்ணின் வயது அவர்களின் தாய்மார்களின் மாதவிடாயுடன் தொடர்புடையது. அதேபோல அதிக எடையுள்ள பெண்கள் எடை குறைந்த பெண்களை விட முன்னதாகவே பூப்பெய்து விடுகின்றனர்.



அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு துறைகளில் இருப்பவர்கள், துரித உணவுகளை அதிகம் உட்கொள்பவர்கள் விரைவில் மாதவிடாயை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர். மேலும் புரதம் மற்றும் பால் அதிக அளவில் உட்கொள்வது ஆரம்பகால மாதவிடாய்க்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகளில், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் நகரங்களில் உள்ளவர்களை விட சற்று தாமதமாக மாதவிடாயை சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. `

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா? இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்

பெற்றோர்கள் தங்கள் மகள்களை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் :

இந்தியாவின் கிராமப்புறமாக இருந்தாலும், நகர்ப்புறமாக இருந்தாலும் மாதவிடாய் என்பது ஒரு தடைசெய்யப்பட்ட, அதாவது தீண்டத்தகாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. “இந்தியப் பெண்களில் 71% பேருக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் வரை அதுகுறித்த விழிப்புணர்வு கிடையாது.

அதுகுறித்த தெளிவான விஷயங்கள் தெரியாத காரணத்தால் பல்வேறு மத தடைகளால் சூழப்பட்டுள்ளது. பல பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது உண்மையில் உடலில் என்ன நடக்கும் என்று தெரியாது.

மாதவிடாயின் போது சுகாதாரம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத பகுதியாகும். மாதவிடாயின் போது சுகாதாரமாக இல்லாவிட்டால் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் ரெட்டி கூறியுள்ளார்.

மாதவிடாய் குறித்த பூப்பெய்தும் வயது வரக்கூடிய சிறுமிகளுக்கு அதைப் பற்றி அடிக்கடி பேசவும். மாதவிடாய் என்றால் என்ன, அது எப்போது தொடங்கும், அது ஏன் வேதனையாக இருக்கும், மாதவிடாய் எவ்வளவு காலம் நீடிக்கும், பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் குறித்தும் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குங்கள். மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என அவர்களிடம் தெளிவாக சொல்லுங்கள்.



மாதவிடாய் சுகாதாரத்திற்கான உதவிக்குறிப்புகள் :

* பெண்கள் மற்றும் இளம் பருவ பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக இருக்க வேண்டும். தற்போது தமிழக அரசு சார்பில் கூட அந்ததந்த கிராமங்களில் உள்ள பெண்களுக்கு தேவையான இலவச சானிடைசரி பேடுகளை விநியோகம் செய்கின்றனர். அவற்றை வாங்கி பயன்படுத்தி சரியான முறையில் அந்த கழிவுகளை அகற்ற வேண்டும்.

* தேவைக்கேற்ப உடலைக் கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.

* பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பொருட்களை அகற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்துக்கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* குறிப்பாக ஏழை நாடுகளில் பெண்கள் போதுமான மாதவிடாய் நாட்களை நிம்மதியாக கழிக்க கணிசமான தடைகளை எதிர்கொள்கின்றனர். இது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நேரம் என்பதால், பெற்றோர்கள் மாதவிடாயை புரிதலுடன் கையாள வேண்டும். மாதவிடாய் ஓய்வு அவசியம் என்பதால் தான் பெண்கள் தனியாக இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் விதிகளை வகுத்துள்ளனர், அதனை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: