டீன் ஏஜ் பருவத்தில் தோன்றும் பருக்களை இயற்கை வழியில் சரிசெய்ய உதவும் டிப்ஸ்!

மாதிரி படம்

பதின்வயதினர் பருவமடையும் போது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஹார்மோன்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை தூண்டி பருக்களை உருவாக்குகிறது.

  • Share this:
டீனேஜ் என்பது சமூக சவால்கள், ஹார்மோன் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள் ஆகியவற்றை ஒரு சேர சந்திக்கும் வயதாகும். டீனேஜில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்சனைகளை ஏற்படுகிறது. இதனால் சுய மரியாதை இல்லாமல் தவிக்கின்றனர். முகப்பரு பிரச்சனைகளை சரி செய்ய சந்தைகளில் பல்வேறு க்ரீம்கள், பேஸ் வாஷ்கள் கிடைக்கிறது. ஆனால் அவை பயன்படுத்தப்பட்ட சில நாட்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

எனவே உங்கள் டீன் ஏஜ் பருவத்தில் தெளிவான சருமத்தை பெற உதவும் இயற்கை முறையிலான டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

பருக்கள் வர என்ன காரணம்?

பதின்வயதினர் பருவமடையும் போது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஹார்மோன்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை தூண்டி அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி செய்கிறது. மேலும் சருமத்தில் உள்ள துளைகளை மூடுகிறது. தடுக்கப்பட்ட துளைகள் பாக்டீரியாவால் பாதிக்கப்படும்போது, ​​அவை வீக்கமடைந்து முகத்தில் பருக்கள் உருவாகின்றன. பின்னர் இவை ஒயிட்ஹெட்ஸாக மாறி, ஆக்சிஜனேற்றம் காரணமாக பிளாக்ஹெட்ஸாகவும் மாறும். நாளடைவில் தழும்புகளாக உருவெடுக்கிறது.



பருக்களை நீக்க உதவும் டிப்ஸ் :

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகும், மேலும் ஃப்ரீ ரேடிகல்களின் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. பருவ வயதில் முகப்பருவை தடுக்க உங்கள் குழந்தையின் தினசரி உணவில் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் சேர்ப்பது நல்லது. தினமும் ஒரு கிளாஸ் ஜூஸ் அருந்தி வந்தால் சருமம் பொலிவாகும்.

துளசி இலைகள்

துளசி இலைகள் பருக்களை குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. ஒரு சில துளசி இலைகளை நசுக்கி, சாற்றை எடுத்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண தண்ணீரில் கழுவி வர பருக்கள் குறைந்துவிடும். துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அந்த நீரை அருந்தி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.



பப்பாளி

பப்பாளியில் காணப்படும் என்சைம்கள், பப்பேன் மற்றும் சைமோபபைன் பருக்கள் மற்றும் பருக்களால் தோன்றும் வீக்கத்தை குறைக்கின்றன, மேலும் பப்பாளி பல எக்ஸ்ஃபோலைட்டிங் தயாரிப்புகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

பப்பாளி பயன்படுத்துவதால் சரும துளைகளை அடைக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. இது பருக்களை அகற்ற உதவுகின்றன. உங்கள் டீன் ஏஜ் உணவில் பப்பாளியை சேர்ப்பது மட்டுமின்றி, பப்பாளியை நன்கு மசித்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தெளிவான சருமத்தை பெறலாம்.

தேன்

தேன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது முகப்பருவை குணமாக்குவது மட்டுமின்றி, சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. சுத்தமான முகத்தில் தூய தேனைப் பூசி, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும். இது சருமத்தில் எண்ணெய் பசையை பராமரித்து பருக்கள் வருவதை தடுக்கிறது. தேன் கலந்த பேஸ் வாஷ் தினமும் பயன்படுத்தலாம்.

சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம்

சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றின் சம பாகங்களை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை மூலிகை நீரை தேநீராக குடிக்கவும். இது உடலை குளிர்வித்து, நச்சுக்களை வெளியேறுகிறது. மேலும் சரும பிரச்சனைகளை சரி செய்து தெளிவான சருமத்தை பெற உதவுகிறது.



வேப்ப இலைகள்

வேப்ப இலைகள் ஆன்டி-பாக்டீரியா, கிருமி நாசினிகள், வயதான தோற்றத்தை எதிர்க்கும் தன்மை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஒருசேர பெற்றுள்ளது. இது சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்துகிறது, இதனால் முகப்பரு மற்றும் பருக்கள் தோன்றுவது கட்டுப்படுகிறது. வேப்ப இலைகள் மற்றும் ரோஸ் வாட்டர் ஒரு பேஸ்டை தோலில் தடவி, உலர வைத்து கழுவவும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் சரும பொலிவு பாதுகாக்கப்படும்.

அல்லது வேப்ப இலைகள், இலவங்கப்பட்டை மற்றும் முல்தானி மிட்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஆன்டி-பிம்பிள் ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும். இலவங்கப்பட்டை முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுடன் போராடுகிறது, மேலும் மல்டானி மிட்டி ஆழமான அழுக்குகளுக்கு சென்று சருமத்தை சுத்தப்படுத்துகிறது. வெப்ப இலைகள் பருக்களை நீக்க உதவுகிறது. இதனால் உங்கள் சருமத்தில் தோன்றும் பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.



சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை :

பேஸ் வாஷ்

சருமத்தின் வகையைப் பொறுத்து பேஸ் வாஷ்ஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முகத்தை சுத்தப்படுத்தவும். உங்கள் டீனேஜில் எண்ணெய் சருமம் இருந்தால், அவர்கள் ஜெல் பேஷ் வாஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

புளியங்கொட்டையில் கூட அழகுப் பராமரிப்பு இருக்கா..? எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் என தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

எக்ஸ்போலியேட்

எக்ஸ்போலியேட் இறந்த தோல் செல்களை நீக்க உதவுகிறது. எக்ஸ்ஃபோலியேட் செய்ய மென்மையான ஸ்க்ரப் பயன்படுத்தவும். ஸ்க்ரப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை மென்மையான, வட்ட வடிவில் தேய்க்கவும். தெளிவான, சருமத்தை பெற கற்றாழை மற்றும் எலுமிச்சையின் நன்மையுடன் கூடிய ஆயுர்வேத ஸ்க்ரப்பை பயன்படுத்தவும்.

தூங்க செல்வதற்கு முன்னர் மேக்கப்பை சுத்தமாக வாஷ் செய்துவிடவும். முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ், மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன்களை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தில் தோற்றும் கருமையை தவிர்க்க முடியும்.

 
Published by:Sivaranjani E
First published: