முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கிண்டல், கேலி மற்றும் துன்புறுத்தல் : இவை இரண்டிற்குமான வித்தியாசத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க டிப்ஸ்

கிண்டல், கேலி மற்றும் துன்புறுத்தல் : இவை இரண்டிற்குமான வித்தியாசத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க டிப்ஸ்

டீனேஜ் பிள்ளைகள்

டீனேஜ் பிள்ளைகள்

சாதாரண கிண்டல், கேலி என்பது குழந்தைகளுக்கு இடையே பிணைப்பை அதிகரிக்கும். ஆனால், துன்புறுத்தல் என்பது உங்கள் குழந்தைகளை உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கக் கூடும்.

  • Last Updated :

குழந்தைகள் ஒருவரை, ஒருவர் கிண்டல், கேலி செய்து குதூகலமாக இருப்பது வழக்கமான விஷயம் தான். அதே சமயம், சிலர் கிண்டல், கேலி என்ற பெயரில் குழந்தைகளை துன்புறுத்த தொடங்கி விடுவார்கள். கிண்டல், கேலி மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை சாதாரணமாக குழந்தைகள் புரிந்து கொள்ள இயலாது.

சாதாரண கிண்டல், கேலி என்பது குழந்தைகளுக்கு இடையே பிணைப்பை அதிகரிக்கும். ஆனால், துன்புறுத்தல் என்பது உங்கள் குழந்தைகளை உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கக் கூடும். முதலில், துன்புறுத்தல் என்றால் என்ன என்பதை குழந்தைகளுக்கு புரிய வைத்தால் மட்டுமே, அவர்களில் அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

அடிப்படை வித்தியாசம் :

மற்றவருடைய உணர்வுகளை புண்படுத்தாமல் ஒருவருக்கு, ஒருவர் விளையாடுவது, பட்டப்பெயர் சொல்லி அழைப்பது, பிராங் செய்து விளையாடுவது போன்றவை இயல்பானவை தான். ஆனால், துன்புறுத்தல் என்பது ஒருவர் வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் காரியங்கள் ஆகும். சில சமயங்களில் இது கைகலப்பு மற்றும் வன்முறையில் சென்று முடியும்.

முதலில் சாதாரண கிண்டல், கேலி போல ஆரம்பிக்கும் சில பேச்சுகள் திசைமாறிச் சென்று, அவமதிப்புது, உடல் ரீதியாக துன்புறுத்துவது என்று சென்றுவிடும்.

துன்புறுத்தலுக்கான அறிகுறிகள் :

குழந்தைகள் பொதுவாக இதுபோன்ற விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள அச்சம் கொள்வார்கள். ஏனென்றால், அவர்கள் குழப்பம் அடைந்திருக்கலாம் அல்லது மிரப்பட்டிருக்கலாம். ஆகவே, மற்றவர்களால் குழந்தைகள் துன்புறுத்தப்படுகிறார்களா என்பதை கண்டறிந்து, அதை சரி செய்வது பெற்றோரின் கடமை ஆகும்.

குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்ப போகும் பெற்றோர்களுக்கான முக்கிய டிப்ஸ்.!

திடீர் காயங்கள் அல்லது வடுக்கள் :

குழந்தைகளின் உடலில் காரணமே இல்லாமல் சில உராய்ப்புகள், காயங்கள் போன்றவை தென்பட்டால், அவர்கள் எதையோ உங்களிடம் இருந்து மறைக்கிறார்கள் என்று அர்த்தம். யாரேனும் அவர்களை துன்புறுத்தியிருக்கலாம். ஆகவே, மெல்ல பேச்சு கொடுத்து இதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறைவான நண்பர்கள் :

குழந்தைகளின் நட்பு வட்டம் பெரியதாக இல்லாமல், சிறியதாக இருப்பதே அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கான அறிகுறி ஆகும். ஏனென்றால் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைகள் மற்றவர்களிடம் பழகுவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

உங்கள் டீனேஜ் பிள்ளை காதலில் இருக்கிறாரா..? இதை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும்

குழந்தைகள் பள்ளி செல்ல மறுப்பது :

பிறர் மூலமாக துன்புறுத்தப்படும் குழந்தைகள் பள்ளி செல்வதற்கே அச்சம் கொள்வார்கள். அவ்வபோது ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி விடுப்பு எடுப்பார்கள். சில குழந்தைகளுக்கு படிப்பின் மீது கவனம் சிதறி, மதிப்பெண் குறையும்.

குழந்தைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகள் :

top videos

    உங்கள் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை நீங்கள் உறுதி செய்து விட்டால், அவர்களிடம் அன்பாக பேசி, அவர்களது பிரச்சினைகளை முதலில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிரச்சினை எங்கு நடைபெற்றது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பள்ளியில் நடைபெற்ற சம்பவம் என்றால் ஆசிரியர்களிடமும், வீட்டுக்கு அருகாமையில் என்றால், தொடர்புடைய பெற்றோரிடமும் புகார் செய்யுங்கள். அதே சமயம், துன்புறுத்திய குழந்தைகளிடமும் அன்பாக அறிவுரைகளை வழங்குங்கள்.

    First published:

    Tags: Parenting Tips, Teenage parenting