ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் பிள்ளைகளின் செல்ஃபோன் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளதா..? இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க சொல்லுங்கள்..!

உங்கள் பிள்ளைகளின் செல்ஃபோன் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளதா..? இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க சொல்லுங்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

லாக்டவுனால் வீட்டில் பிள்ளைகளை சமாளிக்க அவர்களுக்கு இந்த டிஜிட்டல் பயன்பாட்டை அதிகம் பழக்கப்படுத்திவிட்டோம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்த லாக்டவுனில் பலருக்கும் கைக்கொடுப்பது டிஜிட்டல் உலகம்தான். ஷாப்பிங், பொழுதுபோக்கு , உணவு என அனைத்திற்கும் இதுதான் கதி என்கிற நிலையில் இருக்கிறோம். இது மட்டுமா.... வீட்டில் பிள்ளைகளை சமாளிக்க அவர்களுக்கு இந்த டிஜிட்டல் பயன்பாட்டை அதிகம் பழக்கப்படுத்திவிட்டோம் என்றே சொல்லலாம்.

  தற்போது அதிலிருந்து மீட்டுக்கொண்டு வர என்ன செய்வது என்றும் குழம்பிப்போயுள்ளோம். இந்த நேரத்தில் அது சற்று கடினம்தான் என்றாலும் அவர்களுக்கு அதன் பாதுக்காப்பான பயன்பாடு குறித்து சொல்லிக்கொடுப்பதும் நம் கடமை. அப்படி எந்தெந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

  குறிப்பிட்ட நேரம் : தற்போது குழந்தைகள் என்ன பார்க்க வேண்டும், எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. அதில் டைம் குறித்துவிட்டு, ஃபில்டர் செய்துவிட்டால் நல்லது. பிள்ளைகளிடமும் இந்த நேரத்தைத் தாண்டி பயன்படுத்தக் கூடாது என கண்டிப்பாக கூறிவிடுங்கள். அதுவும் நீங்கள் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  ஃபிரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகளை அப்படியே சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

  பிரைவசி செக்அப் : அதாவது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்றால் அவர்களால் சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்க முடியாது. இருப்பினும் அவர்கள் பொய்த் தகவல்கள் மூலம் கணக்கு வைத்திருந்தாலும் அதற்குள் சென்று அவர்களுடைய பிரைவசி ஆப்ஷன்களை செக் செய்வது, அவர்களின் லைக் பேஜுகளை கவனிப்பது, நட்பு வட்டாரங்கள் எவ்வளவு போன்ற விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம். இந்த விஷயங்களை அடாவடியான கண்டிப்பாக அல்லாமல் நட்புடன் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

  பாஸ்வேர்ட் மாற்றம் : மற்றவர்களுக்கு பாஸ்வேர்டுகளை பகிர்வதன் ஆபத்தை கற்றுத்தாருங்கள். நண்பராக இருந்தாலும் பகிர்வது தவறு என சொல்லிக்கொடுங்கள். அதேபோல் உங்களின் பாஸ்வேர்டுகளையும் நம் பிள்ளைகள்தானே எனப் பகிராதீர்கள். குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய அனுமதிப்பது தவறு.

  ஆப் டவுன்லோடிங் : அவர்கள் காணும் சமூகவலைதளங்களில் காண்பிக்கும் ஆப்ஸுகளையெல்லாம் டவுன்லோட் செய்து அலோவ் பட்டன் கொடுப்பதை அனுமதிக்காதீர்கள். உங்களைக் கேட்காமல் புது ஆப் டவுன்லோட் செய்ய அனுமதிக்காதீர்கள். அவர்கள் ஹேக்கர்களாகவும் இருக்கலாம்.

  வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா..? நிரந்தரமாக ஒழிக்க இந்த 2 விஷயங்களை செய்யுங்கள்..!

  WIFI ஷேரிங் : WIFI பாஸ்வேர்டுகளைப் பகிராதீர்கள். அதேபோல் வீட்டில் அல்லது நம்பகமான WIFI கனெக்‌ஷன்களை மட்டும் பயன்படுத்தச் சொல்லுங்கள். பொதுவெளியில் ஓப்பன் WIFI பயன்படுத்தக் கூடாது என சொல்லி வையுங்கள்.

  பொறுப்புணர்வு : சமூகவலைதளங்களில் சில விஷயங்களைப் பகிரும்போது மற்றவர்களின் மனதைப் புண்படுபடி செய்யக்கூடாது என கற்றுத்தாருங்கள். கிண்டல் செய்வது, மீம்ஸ் அல்லது தவறான விஷயங்களைப் பேசுவது, பகிர்வது தவறு என சொல்லிக்கொடுங்கள்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: