• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Parenting Tips : குழந்தைகள் உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதை காட்டும் அறிகுறிகள்..

Parenting Tips : குழந்தைகள் உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதை காட்டும் அறிகுறிகள்..

காட்சி படம்

காட்சி படம்

Parenting Tips : அழுகையில் கண்ணீர் இல்லை என்றாலும் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்று அர்த்தம்.

  • Share this:
    மனித உடல் சீராக இயங்க 60 சதவீத தண்ணீர் கட்டாயம் அவசியம். இது ஒவ்வொரு உறுப்புகளிலும் தேங்கி உள்வேலைகளை செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்கிறது. அந்த வகையில் வளரும் குழந்தைகளுக்கு உடலில் நீர்ச்சத்து என்பது மிக மிக அவசியமான ஒன்று. அவர்களின் உடலில் நீர்ச்சத்துக் குறைந்து, தாகம் எடுத்தாலும் அதை கேட்கும் திறன் குழந்தைகளுக்கு இருக்காது. எனவே அதை உணர்த்தும் விதமாக என்னென்ன அறிகுறிகள் காட்டும் என்று பார்க்கலாம்.

    உதடு வறண்டுபோய் இருக்கும். வாய் ஓரங்களில் வெடிப்பு விட்டிருக்கும். புண் போல் மாறியிருக்கும். எச்சில் சுரப்பது குறைந்திருக்கும். இவை பொதுவான காரணங்களாகும்.

    குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது இயல்பு. 3 முதல் 5 மணி நேரத்திற்குள் அவர்களுடைய டயப்பர் நனைந்துவிடும். அந்த அளவிற்கு உட்புறம் வேலைகள் இயங்கி கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருக்கும். எனவே இப்படி எதுவும் இல்லாமல் மாட்டிய டயப்பர் 3 -5 மணி நேரம் வரை அப்படியே உள்ளது. 5 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஈரம் ஆகாமல் இருக்கிறதுது எனில் அது குழந்தைகளின் உடலில் நீர் இல்லை என்பதை உணர்த்துவதாகும்.

    also read : குளிர்காலத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..

    அழுகையில் கண்ணீர் இல்லை என்றாலும் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்று அர்த்தம். அதேபோல் அவ்வப்போது குழந்தைகளின் கண்களிலிருந்தும் நீர் லேசாக வெளியேறும். அப்படி எதுவும் இல்லாமல் வறண்டு போய் இருந்தால் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்று அர்த்தம்.



     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: