ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பிணிகள் மற்றும் புதிய அம்மாக்களுக்கு மன அழுத்தம் இதனால்தான் ஏற்படுகிறதாம்..! ஆய்வில் தகவல்

கர்ப்பிணிகள் மற்றும் புதிய அம்மாக்களுக்கு மன அழுத்தம் இதனால்தான் ஏற்படுகிறதாம்..! ஆய்வில் தகவல்

காட்சி படம்

காட்சி படம்

பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானோர் ஒரே பதிலை தான் கூறியுள்ளார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கருவுறுவது முதல் குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை ஒவ்வொரு பெண்ணுக்கும் நெருக்கடியான காலகட்டம் என்று கூறலாம். கர்ப்பம், பிரசவ நேரம், குழந்தையின் ஒவ்வொரு மைல்ஸ்டோன் என்று எல்லாமே மகிழ்ச்சியானது தான். இருந்தாலுமே பிரவசத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள், கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் என்று அனைவருக்குமே வழக்கமாக இருப்பதை விட அதிக அளவு மன அழுத்தத்தை ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடக்கூடாது, இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருக்கும்.

அதேபோல,பிரசவம் எப்படி நடக்கும் என்பதும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எத்தனை நபர் உதவியாக இருந்தாலுமே கைக்குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். இந்த அடிப்படையில் குழந்தை பிறப்பை நோக்கி காத்திருக்கும் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் 76% பெண்கள் ஒரே ஒரு காரணத்தைத் தான் காரணமாக கூறியுள்ளார்கள்.

இந்த ஆய்வில், 2000அம்மாக்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு பொறுப்புகளை மாறி மாறி ஏற்றுக்கொண்டு மல்டி டாஸ்கிங் செய்வதுதான் மன அழுத்தத்துக்கு காரணமாக இருக்கிறது என்று அம்மாக்கள் கூறியுள்ளனர்!

வீட்டில் பொறுப்புகள் அதிகமாக இருப்பது தான் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்று 24% அம்மாக்கள் கூறியுள்ளனர். தங்களை கவனித்துக்கொள்ள நேரமே இல்லை என்பதை 20% அம்மாக்கள் கூறியுள்ளனர். அடுத்ததாக இருக்கும் காரணம், சரியாக தூங்குவதற்கு கூட நேரம் இல்லை என்று 19 சதவிகித அம்மாக்கள் கூறியுள்ளனர்.

also read : பிரசவத்திற்கு பிறகு வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க கூடிய 5 சூப்பர் பயிற்சிகள் இதோ..

வீடு மற்றும் வேலைக்கான பொறுப்புகள், தங்களுக்கான நேரமின்மை மற்றும் தூக்கமின்மை ஆகிய மூன்று காரணங்கள் தான் ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது என்று ஆய்வில் வெளியாகியுள்ளது. தனக்கு கணவரிடம் இருந்து சப்போர்ட் இல்லை, அதனால் தான் மன அழுத்தம் உண்டாகிறது என்ற காரணத்தை ஐந்து சதவீத அம்மாக்கள் மட்டும் தான் கூறியிருக்கின்றனர். இதன் மூலம் பல பெண்களுக்கும் அவர்களின் கணவரிடமிருந்து போதிய உதவியும் ஆதரவும் கிடைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

மகிழ்ச்சியா அல்லது சரியான திட்டமிடலா?

இந்த ஆய்வில் அம்மாக்கள் மற்றும் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு எது முக்கியம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆய்வில் கலந்து கொண்ட 50 சதவீத பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதைத்தான் விரும்புகிறார்கள் என்றும், பெர்ஃபெக்ட் ஆக இருப்பது தேவையில்லை என்று கூறியுள்ளனர். மேலும் 28 சதவிகித பெண்கள் தங்களை பராமரித்து கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள் மற்றும் 22 சதவிகிதத்தினர் எல்லாவற்றையும் முன்கூட்டியே பிளான் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

எது பெண்களுக்கு மகிழ்ச்சி தருகிறது?

எது உங்களை மகிழ்ச்சியாக்கும் என்று உங்களை கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் கூறுவீர்கள். பெண்களைப் பொறுத்தவரை தங்களுக்கு மற்றவரிடம் பேசுவதுதான் மகிழ்ச்சி அளிக்கிறது என்று 52 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

also read: கோபமான மனநிலையில் அடிக்கும், உடைக்கும் குழந்தையை சமாளிப்பது எப்படி?

21 சதவிகித பெண்கள் தினசரி வேலைகளிலிருந்து கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலே அது மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். 16 சதவீத பெண்கள் வழக்கமாக அம்மாக்கள் போல தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது தான் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர்.

ஆறுதல் தேடுவது அம்மாக்கள் மற்றும் நண்பர்களிடம் தான்:

ஒரு பெண் அம்மாவாக இருந்தால் கூட, அந்த பெண்ணின் அம்மாவிடம் அவர் ஒரு குழந்தையாக மாறி விடுவார். அதை உறுதிப்படுத்துவது போல பல பெண்களும் தங்கள் அம்மாவைத்தான் சப்போர்ட் சிஸ்டம் ஆக இன்றுவரை ஆதரவு தேடி வருகிறார்கள். 37 சதவீத பெண்கள் நண்பர்களிடம் ஆறுதல் பெறுகிறார்கள். எவ்வளவுதான் அம்மா, நண்பர்கள், கணவர் என்று எவ்வளவுதான் ஆதரவாக இருந்தாலும் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் மீது போதிய கவனம் மற்றும் பராமரிப்பு இல்லை என்பதையும் ஆய்வு தெரிவித்து உள்ளது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Mental Health, Pregnancy