ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கருவில் வளரும் போதே இந்த சுவை பிடிக்கும், பிடிக்காது என்று கண்டறியும் சிசுக்கள் - ஆய்வு

கருவில் வளரும் போதே இந்த சுவை பிடிக்கும், பிடிக்காது என்று கண்டறியும் சிசுக்கள் - ஆய்வு

கருவில் உள்ள குழந்தை சுவை அறியும்

கருவில் உள்ள குழந்தை சுவை அறியும்

கருவில் வளரும் குழந்தைகள், தனது அம்மா சாப்பிடும் உணவின் மூலம், சுவை மற்றும் வாசனையை பிரித்துணர முடியும் என்பது தான் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு நபரும் ஒரு சில உணவுகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதே போல, ஒருசில உணவுகள் பிடிக்கவே பிடிக்காது. குறிப்பாக குழந்தைகள் தங்களுக்கு பிடிக்காத உணவை பெரும்பாலும் தவிர்ப்பார்கள், அடம்பிடிப்பார்கள் அதையும் மீறி அம்மாக்கள் வற்புறுத்தி சாப்பாடு கொடுக்கும் போது அழுது, முகத்தை சோகமாக வைத்துக் கொள்வார்கள்.

இந்த உணவின் சுவை பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது வளர்ந்த பின்னர் ஒரு குழந்தைக்கு ஏற்படுவது அல்ல. குழந்தை கருவில் இருக்கும் போதே ஒரு உணவை சாப்பிடும் போது மகிழ்ச்சியாகவும், மற்ற உணவை சாப்பிடும் போது வருத்தமாகவும் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை கருவில் வளரும் போதே இந்த உணவு தான் பிடிக்கும் இந்த உணவு பிடிக்காது என்பது குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது! இதை பற்றி கேட்கும்போதே சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா.

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அது கருவில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பதை ஸ்கேன் செய்து, கருவில் இருக்கும் சிசுவின் முகபாவங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 4D அல்ட்ராசவுன்ட் ஸ்கேன் மூலம், கர்ப்பிணிகள் கேரட் சாப்பிட்டால் சிரிக்கும் பாவனையும், கேல் எனப்படும் கீரை வகையை சாப்பிட்டால் சோகமான அழுவும் முக பாவனையும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளின் பழக்க வழக்கம், அவர்களின் சுற்றுப்புறம் ஆகியவை குழந்தையின் பழக்க வழக்கங்கள், விருப்பங்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கேரட் vs கேல் – ஆய்வு

இந்த ஆய்வில், 18 முதல் 40 வயதிலான 100 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். இவர்கள் 32 வாரங்கள் முதல் 36 வாரங்கள் கர்ப்ப காலத்தில் ஸ்கேன் செய்யப்பட்டனர். ஸ்கேன் செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, கர்ப்பிணிகளுக்கு 400mg கேரட் கேப்ஸ்யூல் அல்லது கேல் பவுடர் வழங்கபப்ட்டது.

கேரட் மற்றும் கேல் சுவையுள்ள கேப்ஸ்யூல்களை சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்த போது, சிசுவின் முகபாவம் பதிவு செய்யப்பட்டது.

கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணாம சாப்பிடுங்க...

சிசுவிற்கு சுவை எப்படித் தெரிகிறது என்பது ஒரு ஆச்சரியம் என்றால், வயிற்றில் இருக்கும் சிசுவின் முகபாவம் எவ்வாறு தெரிந்தது என்பது மற்றொரு ஆச்சரியம்.

ஒரு உணவு எவ்வளவு சுவையாக இருக்கிறது என்பதை, அதன் சுவை மற்றும் வாசனையின் மூலம் தான் தெரிந்து கொள்கிறார்கள். கருவில் இருக்கும் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இருக்கும் கருப்பையில் உள்ள அம்னியோட்டிக் திரவத்தை சுவாசித்தும், விழுங்கியும், அதன் மூலம் வாசனையை உணர்கிறார்கள்.

இந்த ஆய்வின் துணை ஆசிரியரான, பேராசிரியர் நட்ஜா ரெயிஸ்லான்ட், “கருவில் வளரும் குழந்தைகள், தனது அம்மா சாப்பிடும் உணவின் மூலம், சுவை மற்றும் வாசனையை பிரித்துணர முடியும் என்பது தான் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வினால் கிடைக்கும் நன்மைகள் :

இந்த ஆய்வைத் தலைமைத் தாங்கி நடத்திய பேய்ஸா உஸ்டுன், “எங்களின் ஆய்வு, குழந்தை பிறப்பதற்கு முன்னர் இருக்கும் ரியாக்ஷன்களை பார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. கருவில் வளரும் போதே, தொடர்ச்சியாக ஒரு சில சுவைகள் குழந்தைகள் பிறந்த பிறகு அது என்ன விரும்பும் விரும்பாது என்பதை நிர்ணயிக்கும். எனவே, இது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் எது என்பதை குழந்தைக்கு உணர்த்தும்” என்று தெரிவித்தார்.

தினசரி வெந்நீர் குடிப்பதை உங்கள் பழக்கமாக்கிக்கொண்டால் இவ்வளவு நன்மைகளை பெறலாமா..? மிஸ் பண்ணாதீங்க...

மேலும், குழந்தைகள் கருவில் வளரும் போதே, எந்த அடிப்படையில் சுவை மற்றும் வாசனை உணர்வுகள் மனிதர்களுக்கு வளர்கின்றன என்பதை மேலும் கண்டறிய முடியும். அது மட்டுமின்றி, கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் போது, குழந்தைக்கும் அந்த பழக்கம் ஏற்படும்.

உணவு மட்டும் இல்லாமல், கர்ப்பிணிகளின் கோபம், மன அழுத்தம், வருத்தம் ஆகியவையும் குழந்தைகளை பாதிக்கிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Carrot, Pregnancy care, Pregnancy diet