Home /News /lifestyle /

உங்கள் குழந்தைகள் உயரம் குறைவாக இருக்கிறார்களா? அவர்கள் வளர உதவும் பயிற்சிகள்!

உங்கள் குழந்தைகள் உயரம் குறைவாக இருக்கிறார்களா? அவர்கள் வளர உதவும் பயிற்சிகள்!

 குழந்தைகளின் வளர்ச்சி

குழந்தைகளின் வளர்ச்சி

குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களின் மரபணுக்களும் காரணமாக அமைகின்றன. பெற்றோர்களின் மரபணுக்கள் அடிப்படையில் கூட குழந்தையின் வளர்ச்சி அமையலாம்.

பிறந்த குழந்தையின் மாதாந்திர வளர்ச்சியை கண்காணிப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல குழந்தைகள் வளர வளர அவர்களின் வளர்ச்சியை கண்காணிப்பதும் அவசியம். பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சி அவர்களின் ஊட்டச்சத்தினை பொறுத்தே அமைகிறது. குறைவாக ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளும் சிறுவர்கள் வளர்ச்சியில் குறைபாட்டை காண்கிறார்கள்.

அதேபோல குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களின் மரபணுக்களும் காரணமாக அமைகின்றன. பெற்றோர்களின் மரபணுக்கள் அடிப்படையில் கூட குழந்தையின் வளர்ச்சி அமையலாம். குட்டையாக இருப்பவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை குறைவாக கொண்டிருக்கிறார்கள் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சில பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அந்தவகையில் குட்டையாக இருப்பவர்களின் வளர்ச்சிக்கு உதவும் பயிற்சிகள் பற்றியும், அது எவ்வாறு உயரத்திற்கு உதவுகிறது என்பதையும் இந்த பதிவில் காணலாம்.



சூரியநமஸ்காரம்:

சூரியநமஸ்காரத்தில் 12 வெவ்வேறு தோரணைகள் உள்ளன. அவற்றை செய்வதன் மூலம் உங்கள் எலும்புகள் மற்றும் தசைகள் அனைத்தையும் நீட்டிக்க முடியும். யோகா கலையில் மிக முக்கியமானது சூரிய நமஸ்காரம் நல்ல பன்னிரண்டு ஆசனங்களின் அற்புதமான தொகுப்பே சூர்ய நமஸ்காரம். தனித்தனியாக ஆசனங்களை செய்வதைவிட, சூர்ய நமஸ்காரம் செய்தாலே 12 விதமான ஆசனங்களின் பலன் கிடைத்துவிடும்.

கேட் அண்ட் கேமல் :

இது உங்கள் முதுகெலும்பு நெடுவரிசையை விரிவுபடுத்துகிறது. இது உயரத்தை அதிகரிக்க உதவும். பூனை மற்றும் ஒட்டகம் போல நம்முடைய முதுகெலும்பை உயர்த்தி இறக்க வேண்டும். இதற்கு முதலில் தரையில் முட்டிப் போட்டு இரு கைகளையும் தரையில் ஊன்ற வேண்டும். இப்போது மூச்சை இழுத்தபடி முதுகெலும்பை ஒட்டகம் முதுகு போல மேலே உயர்த்த வேண்டும். சில விநாடிகள் இதே நிலையிலிருந்து விட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்து இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.



 

தடாசனம் :

இது உங்கள் கைகள், முதுகெலும்பு மற்றும் கால்களை நீட்டிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது. இது நின்று கொண்டு செய்ய வேண்டிய பயிற்சி ஆகும். இதனை செய்வதன் மூலம் உடலுறுப்புகளுக்கு ரத்தம் பாய்வது அதிகரிக்கிறது. இதனால் உடல் கழிவுகள் நீங்குகின்றன.

ஒரு வயது குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க கூடாது..!

சுகாசனம் :

இது உங்கள் இடுப்பு மற்றும் கீழ் முதுகின் நீட்சிக்கு உதவுகிறது. முதலில் நீங்கள் சம்மணங்கால் போட்டு அமர வேண்டும். பிறகு உங்கள் வலது பதம் , இடது காலின் மீது ஒன்றன்பின் ஒன்றாக மடக்கவும். உங்களது வலது பாதம் இடது தொடையின் கீழாகவும், இடது பாதம் வலது காலின் கீழாகவும் இருக்கட்டும். உங்களது தலை, முதுகு, கழுத்து ஆகியவை ஒரே நேர் கோட்டில் இருக்குமாறு அமர்ந்து மூச்சை மெதுவாக இழுத்து விடுங்கள்.

தொங்குவது :

உடல் செங்குத்தாக இருக்கும்படி ஏதேனும் கம்பியை பிடித்தபடி தொங்குவது உண்மையில் உங்கள் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.



தனுராசனம் :

இந்த ஆசனம் உங்கள் முதுகுத்தண்டில் வேலை செய்து முழு உடலையும் நீட்டிக்க வைக்கிறது.

நல்ல உணவுமுறை பெரிதும் உதவுகிறது :

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், கோழி, முட்டை, சோயாபீன், வாழைப்பழங்கள் மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகள் உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளுக்கு ஆரோக்கியமானவை. இதுபோனற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஒருவரின் உடலை நீட்டிக்க முடியும். மேற்கண்ட பயிற்சிகளை உங்கள் இளம் வயது குழந்தைகளை செய்ய சொல்லுங்கள் கட்டாயம் அவர்களின் வளர்ச்சியில் நல்ல மற்றம் ஏற்படும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Parenting Tips, Stretches

அடுத்த செய்தி