• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் குழந்தை Strong-Willed சுபாவமுடையவர்கள் என்பதை கண்டறிவது எப்படி..?

உங்கள் குழந்தை Strong-Willed சுபாவமுடையவர்கள் என்பதை கண்டறிவது எப்படி..?

 ஸ்ட்ராங் வில்ட் குணமுடைய குழந்தைகள்

ஸ்ட்ராங் வில்ட் குணமுடைய குழந்தைகள்

பொதுவாக ஸ்ட்ராங் வில்ட் குணமுடைய குழந்தைகள் உற்சாகமானவர்கள் மற்றும் தைரியமானவர்கள்.

  • Share this:
பெரும்பாலும் குழந்தைகளின் குணாதிசயங்கள் அவர்களின் சிறு வயதிலிருந்தே தெளிவாகத் தெரியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தலைமைத்துவம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் சில குழந்தைகள் சமயத்தில் தங்களது முரட்டுத்தனமான பிடிவாதத்தால் தாங்கள் நினைத்ததை சாதிப்பவர்களாக வளர்கிறார்கள். பிடிவாத குணம் உள்ளவர்கள் என்பதற்காக அவர்கள் கெட்ட குணங்களை கொண்டவர்கள் என்பது அர்த்தம் கிடையாது.

அதே நேரத்தில் தங்கள் சொந்த விருப்பப்படி செயல்களை செய்வதில் உறுதியாக இருப்பவர்கள் வலுவான விருப்பமுள்ள குழந்தைகள் (Strong-willed kids) என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் பிடிவாத குணத்திற்கும் வலுவான விருப்பத்திற்கும் இடையே ஒரு கோடு இருக்கிறது. தான் நினைப்பதை நடத்தியே தீர வேண்டும் என்பதற்கும் மற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்று கொள்ளாமல் தாங்களே கற்று கொள்ள விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம் தான் அந்த கோடு.

பொதுவாக ஸ்ட்ராங் வில்ட் குணமுடைய குழந்தைகள் உற்சாகமானவர்கள் மற்றும் தைரியமானவர்கள். சில நேரங்களில் குழந்தைகளின் இந்த குணம் நன்றாக தோன்றினாலும், தொடர்ந்து அவர்கள் அதே குணத்தை வெளிப்படுத்துவது ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடும்.



எல்லாவற்றுக்கும் மேலாக சரியாக இருக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை குணாதிசயம் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். எனவே உங்கள் குழந்தைகள் பிடிவாதம் பிடித்தால் அது அவர்களுக்கு Strong-willed குணம் இருப்பதை குறிக்கலாம். அவர்களை தீவிரமாக கண்காணிப்பதே அவர்களிடம் இருப்பது வெறும் பிடிவாதமா அல்லது வலுவான விருப்பத்துடன் இருப்பதால் காணப்படும் பிடிவாதமா என்பதை கண்டறிய முடியும். உங்கள் குழந்தை வலுவான விருப்பமுள்ளவராக வளர்வதை உணர்த்தும் சில அறிகுறிகளை தற்போது பார்க்கலாம்.

ஒரே நிலைப்பாடு..

உங்களது குழந்தை Strong-willed குணம் கொண்டவர் என்றால், அவருக்கு ஒன்றின் மீது இருக்கும் கருத்தை நீங்கள் என்ன செய்தாலும் மாற்ற முடியாது. எது நடந்தாலும் ஒன்றின் மீது எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாகவே இருப்பார்கள். ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். எனவே வலுவான கருத்துகளை கொண்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் ஓபன் மைண்ட்டுடன் இருப்பது முக்கியம். அவர்கள் சொல்லலும் கருத்துக்களை காது கொடுத்து கேட்டல் வேண்டும்.

பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கிறது..?

சரியான விளக்கம்..

வலுவான விருப்பமுள்ள குழந்தைகளுக்கு சரியான விளக்கம் கொடுக்கு வரை ஒரு கருத்து அல்லது செயலில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். குழந்தைகள் சரியான விளக்கம் கோருவதில் தவறில்லை என்பதை பெற்றோரும் உணர வேண்டும். அதே போல அவர்களும் தங்களது பிடிவாதத்திற்கு நியாயமான விளக்கத்தை கொடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் விளக்கத்தை பெற்றோர்கள் உதாசீனப்படுத்தாமல் இனிமையான பேச்சின் மூலம் அவர்களுக்கு ஆதரவை வழங்கலாம்.



பிடிவாத வாக்குவாதம்..

வலுவான விருப்ப சுபாவம் கொண்ட குழந்தைகள் தங்களுக்கு பிறர் உடன்படாத வரை ஒருவரை எளிதில் விட மாட்டார்கள். தொடர்ந்து பிடிவாதமாக தாங்கள் சொல்வது அல்லது செய்வது சரி என்று தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள். மேலும் அதிகாரப் போராட்டங்களில் ஈடுபட விரும்பும் இவர்களின் விடாமுயற்சி ஒருகட்டத்தில் எதிராளியை சோர்வடைய செய்து விடுகிறது. எனவே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அவை தவறு என்று பெற்றோர் புரிய வைக்க முயற்சிக்கலாம்.

பொறுமையற்றவர்கள்..

Strong-willed சுபாவமுடைய குழந்தைகளிடம் பெரும்பாலும் பொறுமை இருக்காது. விளைவுகளை பற்றி சிந்திக்காமல் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுப்பார்கள். உங்கள் குழந்தை இந்த குணத்தை வெளிப்படுத்தினால் அவர்களை விமர்சிக்காமல் அமைதிபடுத்தி சிறந்த முடிவுகளை எடுக்க வழிகாட்டியாக இருங்கள்.



 

சொந்த விதிகள்..

ஏற்கனவே இருக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற நினைக்காமல் தங்களுக்கென்று சொந்தமாக புதிய விதிகளை உருவாக்கி கொண்டு அதன் படி நடக்க நினைப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளை சொந்த முடிவுகளையும் விருப்பங்களையும் செயல்படுத்த பெற்றோர் சுதந்திரம் கொடுக்க வேண்டும். என்றாலும் பயனுள்ள யோசனைகளை கூறுவதை தவிர்க்க வேண்டாம். தண்டனை மூலம் அவர்களின் strong-willed குணத்தை மாற்ற முயற்சிப்பது வீண். அவர்கள் சொல்வதை உன்னிப்பாக கேட்டு அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதை சரியான உதாரணத்துடன் புரிய வைக்க முயற்சிப்பதே சிறந்த வழியாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: