உணவு பழக்க வழக்கத்தில் ஏதாவது கோளாறு இருந்தால் அதனை அடையாளம் கண்டு கொள்வது என்பது மிகப்பெரிய பிரச்சனையாகும். குறிப்பாக குழந்தை அல்லது டீன் ஏஜ் பருவத்தினரிடம் உள்ள உணவு பழக்க வழக்கங்களை கண்டறிந்து கொள்வதற்கு பெற்றோர் மிகப்பெரிய போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. குழந்தையானது ஆபத்தான நிலையை அடையும் வரை பெற்றோர்கள் எதையும் சந்தேகிக்க மாட்டார்கள். சிலரோ குழந்தையின் வழக்கமான செயலாக நினைத்து கடந்து செல்வார்கள்.
ஒருவேளை உங்கள் குழந்தைகளிடம் ஈட்டிங் டிஸ்ஆர்டருக்கான அறிகுறிகளை கண்டறிந்தால் நீங்கள் அவருக்கு ஒரு நல்ல துணையாக இருந்து அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஈட்டிங் டிஸ்ஆர்டர் பற்றி இந்த கட்டுரை உங்களுக்கு விரிவாக விளக்குகிறது.
ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்றால் என்ன?
ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்பது ஒழுங்கற்ற உணவு பழக்கத்தினை சார்ந்ததாகும், அதிகப்படியான உணவு அல்லது குறைவான உணவு உட்கொள்ளுதல் ஆகும். இது மோசமான உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும் உளவியல் நிலைகளின் பிரச்சனையாகும். இது குழந்தையின் ஆரம்ப கட்டத்திலேயே உணவுப் பழக்க வழக்கம், எடை கூடுதல், உடல் வடிவம் மாறுதல் போன்ற சிக்கல்களை உருவாக்கலாம்.
ஈட்டிங் டிஸ்ஆர்டர் பல வகைகளில் உள்ளன. இவற்றில் சில,
பசியின்மை - அனோரெக்ஸியாவால் பாதிக்கப்படுபவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். மேலும் எடை அதிகரிப்பதை தடுக்க எந்த உச்சத்திற்கும் செல்லக்கூடிய அளவிற்கு தீவிரமானவர்களாக இருப்பார்கள்.
புலிமியா - புலிமியா நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இவர்கள் அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால், உடல் பருமனால் ஏற்படக்கூடிய பிற நோய்களாலும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
அதிகமாக சாப்பிடும் கோளாறு (Binge eating disorder) - இதில் மக்கள் பசியில்லாவிட்டாலும் கூட, ஆரோக்கியமற்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவார்கள்.
குறிப்பிடப்படாத உணவுக் கோளாறுகள் (EDNOS) - இவை வித்தியாசமான உணவுக் கோளாறுகள் என்றும் அழைக்கப்படுகிறது, இது மேலே குறிப்பிட்ட வேறு எந்த உணவுக் கோளாறுகளுக்கும் கண்டறியும் அளவுகோல்களுக்குள் வராத நபர்களுக்கான உணவுக் கோளாறு வகைப்பாடு ஆகும்.
கவனிப்பட வேண்டிய அறிகுறிகள்:
உங்கள் பிள்ளை பாதிக்கப்படும் ஈட்டிங் டிஸ்ஆர்டர் வகையைப் பொறுத்து, உணவுக் கோளாறுக்கான அறிகுறிகள் அதற்கேற்ப மாறுபடும்.
- விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு அல்லது இழப்பு
- சோர்வு
- இரைப்பை குடல் பிரச்சினைகள்
- தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி
- குளிர்
- வாய் தொற்று
- விரல்கள், முழங்கால்கள் போன்றவற்றில் காயங்கள் மற்றும் தழும்புகள்
- சுவாசத்தில் துர்நாற்றம் வீசுவது.
கவனிக்க வேண்டிய நடத்தை மாற்றங்கள் என்ன?:
உடல் மாற்றங்களைத் தவிர, ஈட்டிங் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்ட இளம் குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய சில நடத்தை அறிகுறிகளும் உள்ளன.
- கட்டாய உணவு, அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும்
- சாப்பிட்ட பிறகு வாந்தி
- மீண்டும் மீண்டும் தன்னை எடை போட்டு பார்ப்பது
- சமைப்பதில் திடீர் ஆர்வம்
- தனியாகவோ, ரகசியமாகவோ சாப்பிட விரும்புவது அல்லது தளர்வான ஆடைகளை அணிவது
ஜங்க் ஃபுட் சாப்பிட தோன்றினால் இந்த 3 உணவு பொருட்களை சாப்பிடுங்க... ஆசையே போய்விடும்...
உளவியல் அறிகுறிகள்:
டீன் ஏஜ் பருவத்தினர் அல்லது ஈட்டிங் டிஸ் ஆர்டபாதிக்கப்படும் குழந்தைகள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் அறிகுறிகள் இதோ...
- உடல் தோற்றம் மீதான கவலை
- சுயமரியாதை மற்றும் நம்பிக்கை குறைவது
- சாப்பிட்ட பிறகு குற்ற உணர்வு ஏற்படுதல்
- மன அழுத்தம், பதட்டம் மற்றும் கோபம்
- பீதி
- தீவிர மனநிலை மாற்றங்கள்
- தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்
- தற்கொலை எண்ணம்
ஈட்டிங் டிஸ்ஆர்டர் குழந்தைகளை கையாள்வது எப்படி?
டீன் ஏஜ் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி பேசுவது போல் எல்லாம், ஈட்டிங் டிஸ்ஆர்டர் பற்றி ஈசியாக பேசிவிட முடியாது. இதுகுறித்து குழந்தைகளிடம் பேசும் போது வார்த்தைகளை தெளிவாக தேர்ந்தெடுத்து பேசுவது நல்லது. மிகவும் முக்கியமான அவர்களுடைய பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க தயாராக இருக்க வேண்டும்.
குழந்தையிடம் பேச செல்லும் முன்பு பெற்றோர் ஈட்டிங் டிஸ்ஆர்டர் பற்றி அறிந்திருக்க வேண்டும். அதைப் பற்றி முழுமையாக படித்த பிறகே பேச வேண்டும். மேலும் எக்காரணம் கொண்டும் அவர்களது உடல் எடை அல்லது உருவம் குறித்து பேசக்கூடாது. மாறாக, உணவுக் கட்டுப்பாட்டின் ஆபத்துகள் மற்றும் அது உடலை எவ்வாறு எதிர்மறையாக பாதிக்கிறது என்பதைப் பற்றி பேசலாம்.
பிள்ளைகளிடம் அனைத்தையும் மனம் விட்டு பேசினாலும், ஒரு மருத்துவர்களின் உதவி அல்லது உளவியல் நிபுணர்களின் ஆலோசனையை நாடுவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Teenage parenting