முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அம்மாக்களுக்கும் பிள்ளைகள் மீது பொறாமை உண்டாகுமா..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

அம்மாக்களுக்கும் பிள்ளைகள் மீது பொறாமை உண்டாகுமா..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

பிரைவசியில் தலையிடுவது முதல் எதற்கெடுத்தாலும் குறைகூறுவது வரை என அவர்களின் பொறாமை சில இடங்களில் அவர்களை அறியாமலேயே வெளிப்பட்டுவிடும்.

பிரைவசியில் தலையிடுவது முதல் எதற்கெடுத்தாலும் குறைகூறுவது வரை என அவர்களின் பொறாமை சில இடங்களில் அவர்களை அறியாமலேயே வெளிப்பட்டுவிடும்.

பிரைவசியில் தலையிடுவது முதல் எதற்கெடுத்தாலும் குறைகூறுவது வரை என அவர்களின் பொறாமை சில இடங்களில் அவர்களை அறியாமலேயே வெளிப்பட்டுவிடும்.

  • Last Updated :

பெற்ற பிள்ளைகள் மீது தாய்மார்களுக்கு எப்படி பொறாமை இருக்கும்? என கேட்பீர்கள். உறவு முறையில் எதுவும் சாத்தியம். எல்லா தாய்மார்களும் பொறாமைபடுவார்கள் என கூறவில்லை. பொறாமைபடும் சில தாய்மார்களும் உண்டு. பிரைவசியில் தலையிடுவது முதல் எதற்கெடுத்தாலும் குறைகூறுவது வரை என அவர்களின் பொறாமை சில இடங்களில் அவர்களை அறியாமலேயே வெளிப்பட்டுவிடும். இதற்கு பின்னணியில் சில காரணங்கள் உள்ளது என்றாலும், அவர்களின் பொறாமையை கண்டுபிடிப்பது எப்படி?. இந்த கேள்விக்கான விடையை இங்கே பார்ப்போம்.

1. குறைகூறிக் கொண்டே இருத்தல் :

தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் குறையை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடமாட்டார்கள். உங்களின் தோற்றம் எப்படி உள்ளது?, எப்படி பேச வேண்டும்? என்பது முதல் உங்களின் விருப்பு வெறுப்பு வரை அவர்களின் தலையீடு இருக்கும். நீங்கள் எடுக்கும் சுதந்திரமான முடிவுகள் அனைத்திலும் அவர்களின் தலையீடு இருக்கும். அவர்கள் உங்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதுபோல் இருக்கும். உங்களை தாழ்த்திக் கொண்டே இருப்பார்கள். இதற்கு காரணம், உங்களின் பலம் அவர்களை பலவீனமாக காட்டிவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கையில், அவர்களின் செயல்பாடு அப்படி இருக்கும்.

2. வலியில் சிரிப்பு :

உங்கள் வலி அல்லது தோல்வி அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உதாரணமாக, நண்பர் வரவில்லை என்று கூறி வருத்தப்படும்போது, அதனை அலட்சியப்படுத்தும் அவர்கள், வேலை இருக்கிறது, அந்த வேலையைபோய் செய் என கட்டளையிடுவார்கள். புதிய வேலை கிடைத்துவிட்டது எனக் கூறினால், நம் திறமையை பாராட்டாமல், குறைத்து மதிப்பிட்டு அதற்கு வேறொரு காரணத்தை கூறுவார்கள். சம்பளத்தை கூறினால் அதனை கேலி செய்து சிரிப்பார்கள். இவையெல்லாம், உங்களை பலவீனப்படுத்தி, அவர் தன்னை திருப்திபடுத்திக்கொள்கிறார் என்பதற்கான அறிகுறி.

3. உடலை கிண்டலடித்தல் :

யாரொருவரும் ஒருவரின் உடலைக் கிண்டலடிக்கக்கூடாது. அந்த உரிமை பெற்ற தாயாக இருந்தாலும் கிடையாது. ஆனால், தாயிடமிருந்தே, உங்கள் உடல் சார்ந்த வசவுகள் வரும். இது உங்களுக்கு மிகவும் வலியை கொடுக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதானாலேயே குறிப்பிட்டு உங்களின் பலவீனத்தை கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களின் இந்த அணுகுமுறை, அவர்கள் மீது உங்களுக்கு அதீத வெறுப்பை உண்டாக்கும்.

உங்கள் குழந்தை நீண்ட நேரம் செல்போன் பார்க்கிறதா?அப்ப இந்த அறிகுறி இருக்கான்னு செக் பண்ணுங்க..

4. தவறை சுட்டிக்காட்டுதல் :

எல்லா நேரத்திலும் ஒருவர் சரியாக இருக்க முடியாது என்றாலும், உங்களுடைய தவறுகளை உன்னிப்பாக கவனித்து சுட்டிக்காட்டுவார்கள். மேலும், திட்டிக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற அணுகுமுறையால், உறவு ஆரோக்கியமானதாக இருக்காது. இதன் மூலம், அவர்கள் ஏதோ ஒருவகையில் உங்களை தாழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளலாம் அல்லது விலகியிருக்கலாம்.

5. தனியுரிமையில் தலையிடுவது :

top videos

    நீங்கள் எழுந்ததும், காலை உணவை உட்கொள்ளும்போது, ​​உங்கள் நேரத்தை என்ன செய்கிறீர்கள் என்று அவள் பார்க்கிறாளா? இது உங்கள் தனியுரிமையில் தலையிடுவதாக அர்த்தம். அதுபோல உங்களுக்கு வரும் டெலிவரி பேக்கேஜில் என்ன இருக்கிறது என்று அவள் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் அலமாரிகளைச் சரிபார்த்து அதில் இருப்பதை கவனிப்பது போன்றவற்றை செய்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேற்கண்ட அறிகுறிகளை நீங்கள் கவனித்தால் அவரிடம் நேரடியாகவே இதுகுறித்து பேசுங்கள்.

    First published:

    Tags: Kids Care, Parenting Tips, Teenage parenting