Home /News /lifestyle /

Diabetes in kids : குழந்தைகளையும் தாக்கும் நீரிழிவு நோய் : அறிகுறிகள்..சிகிச்சை முறைகள் என்ன?

Diabetes in kids : குழந்தைகளையும் தாக்கும் நீரிழிவு நோய் : அறிகுறிகள்..சிகிச்சை முறைகள் என்ன?

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

டைப்-1 நீரிழிவு குழந்தைகளுக்கிடையே அதிகளவு காணப்படுகின்றன. 5 வயதுக்குட்பட்ட ஏராளமான குழந்தைகள் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

முந்தைய காலங்களில் வயதானவர்கள் தான் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் சமீப காலமாக இளைஞர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளடைவில் குழந்தைகளும் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் உள்ளது. அதிலும் குறிப்பாக டைப்-1 நீரிழிவு குழந்தைகளுக்கிடையே அதிகளவு காணப்படுகின்றன. 5 வயதுக்குட்பட்ட ஏராளமான குழந்தைகள் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது உலகெங்கிலும் உள்ள சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான அறிகுறிகள் :

* சோர்வு
* உடல் எடை குறைதல்
* தாகம் அதிகரித்தல்
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* காயங்கள் ஆற நாளாகுதல்
* நடத்தையில் மாற்றம்
* அதிக பசி
*மங்கலான பார்வை
* தலைவலி

பொதுவாக 2 முதல் 3 வாரங்களுக்குளளாக வெளிப்படையான அறிகுறிகள் தோன்றும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், சிறு பிள்ளைகள் அதிகளவில் சிறுநீர் கழிப்பார்கள். இப்படி உடலில் உள்ள நீர் இழப்பதினால் தாகம் ஏற்பட்டு அதிக தண்ணீர் உட்கொள்வர். சில குழந்தைகளில் உடலில் உள்ள நீர் அதிகளவில் இழப்பு ஏற்பட்டு பலவீனம், சுறுசுறுப்பின்மை மற்றும் படபடப்பு போன்றவை ஏற்படும்.

Children Health | காய்கறிக்கு 'நோ' சொல்லும் குழந்தைகள்… சாப்பிட வைக்க ஐடியா இதோ!

குழந்தைகளிடம் இந்த ஆரம்ப அறிகுறிகளை நாம் தவறவிட்டால் நீரிழிவில் குழந்தைகள் கெட்டோ அசிடோசிஸ் என்ற நிலையை அடைவார்கள். அப்போது இரத்தத்தில் கீட்டோன்கள் உருவாகும். இதனால் குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.



செய்ய வேண்டியது என்ன?

மருந்துகளை உட்கொண்டு தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் மட்டுமே இதை நிர்வகிக்க முடியும்.

முதலில் நாம் சாப்பிடும் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தானியங்கள், பழங்கள், பால் , காய்கறிகள் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். நொறுக்கு தீனிகள், ஜங்க் புட், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் குப்பிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பானங்களை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். நன்கு காற்றோட்டமான பகுதிகளில் உங்கள் குழந்தைகளை ஓடி ஆடி விளையாட விடுங்கள்.

Sibling Rivalry | குழந்தைகள் ‘அடிபுடியை’ கையாள்வது எப்படி?- பெற்றோர்களுக்கு சூப்பரான டிப்ஸ்!

குழந்தைகளிடம் நீரிழிவு நோயை நிர்வகிக்க உங்களுக்கு ஒரு நீரிழிவு நிபுணர், ஒரு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஒரு உளவியலாளர் இவர்கள் மூவரின் உதவியும் தேவைப்படும். எனவே அவர்களை அணுகி அவர்கள் கொடுக்கும் அறிவுரைகள் பேரில் உங்கள் குழந்தைகளை கவனித்து கொள்ளுங்கள்.

இவர்கள் சர்க்கரை அளவு மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ ஆகாமல் பார்த்துக்கொள்வார்கள். எனவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Kids diabetes, Type 2 diabetic

அடுத்த செய்தி