Constipation in Infants | கைக்குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் ஏற்படுமா? அதற்கான அறிகுறிகளும்... சிகிச்சையும்...

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, மலச்சிக்கல் மிகவும் பரவலாகவே காணப்படும்.

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, மலச்சிக்கல் மிகவும் பரவலாகவே காணப்படும்.

  • Share this:
சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்கொள்ளக் கூடிய மலச்சிக்கல் என்பது ஒரு செரிமானக் கோளாறு. மலம் கழிக்கும் போது கடினமாக உணர்வதையும், இயல்பற்ற  அசௌகரியமான குடல் இயக்கமும் இதைக் குறிக்கிறது.

கைக்குழந்தைகளில் இது பரவலாகக் காணப்படுகிறதா?

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, மலச்சிக்கல் மிகவும் பரவலாகவே காணப்படும். குறிப்பாக, கைக்குழந்தைகள் மற்றும் பிறந்து சில நாட்களே ஆனா குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அவ்வபோது ஏற்படும். ஆனால், பெற்றோருக்கு இது மிகவும் கவலைக்குரியதாகத் தோன்றும்.

அறிகுறிகள்:

கைக்குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறதா என்பதை சில எளிய அறிகுறிகளைக் கண்காணிப்பதன் மூலம் பெற்றோர்கள் கண்டறியலாம். கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் அறிகுறிகள் இதோ.

மலம் கழிப்பது சிரமமாக இருக்கும்:

மலம் கழிக்கும் போது, சிரமமாக அல்லது மிகவும் கடினமாக உணர்வது, மலச்சிக்கல் இருப்பதற்கான முதல் அறிகுறி. இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, கைக்குழந்தைகளுக்கும் பொருந்தும். எளிதாக மலம் கழிக்க முடியவில்லையா, உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.

குழந்தையின் மலம் இறுகிய, உலர்ந்த நிலையில் இருப்பது:

பொதுவாக, குழந்தை பிறந்த சில நாட்கள் வரை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதைக் கூட பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து கவனித்து வருவது வழக்கம். கைக்குழந்தை மலம் கழிக்கும் போது, கடினமாக உணர்வது, இறுகிய, வறண்ட அல்லது கருப்பு மற்றும் கொஞ்சம் ரத்தத்தோடு காணப்பட்டால், குழந்தை மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

மலம் கழிக்க சிரமப்படுவது:

மலச்சிகள் ஏற்பட்ட கைக்குழந்தைகளுக்கு, மலம் கழிப்பது மிகுந்த சிரமமாகவே இருக்கும். வயிற்றுப்பகுதி கல்லைப் போன்ற உணர்வோடு, மலம் கழிக்கும் போதெல்லாம் அழுவார்கள்.

Also Read | பெற்றோர்கள் கவனத்திற்கு… குழந்தைகளிடம் பயன்படுத்தவே கூடாத வார்த்தைகள்!

வயிறு உப்பசம்:

ப்ளோட்டிங் என்று சொல்லப்படும், வயிறு உப்பசம் அடைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல. கைக்குழந்தைகளுக்கும் தான். சரியான முறையில் உணவு செரிமானம் ஆகவில்லை என்னும் போது, வாயு உற்பத்தியாகி, வயிற்றுப்பகுதி உப்பசமாக, கொஞ்சம் வீங்கி காணப்படும். குழந்தைகள் அசௌகரியமாக உணர்வதால் அழுது கொண்டே இருப்பார்கள்.

வயிற்று வலி:

என்ன வகையான வயிற்றுக் கோளாறாக இருந்தாலும், வயிற்று வழியைத் தவிர்க்க முடியாது. வயிற்றில் இருக்கும் கழிவை வெளியே அனுப்ப முடியவில்லை என்னும் போது, கைக்குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படுவார்கள்.

பசி எடுக்காது, பால் குடிக்க மறுப்பார்கள்:

மலச்சிக்கல் ஏற்படும் போது, கைக்குள் அடங்கும் குட்டிக் குழந்தைகள் கூட பால் குடிக்க மறுப்பார்கள். உங்கள் குழந்தை பால் குடிக்க மறுத்தால், வயிற்றுப்பகுதியை சோதித்துப் பாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கான சிகிச்சை:

நீங்கள் உங்கள் குழந்தைக்கு இன்னும் தாய்ப்பால் கொடுத்தால், பவுடர் பாலுக்கு மாறினால், மலச்சிக்கல் சரியாகும். பாலூட்டும் அம்மா உண்ணும் உணவே குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுத்துகிறது. திட உணவுகள் கொடுக்கத் துவங்கும் போது, தண்ணீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொருட்களையும் சேர்த்துக் கொடுக்கவும். இவை பலன் தராத பட்சத்தில் மருத்துவரை நாடுவது நல்லது.
Published by:Archana R
First published: