முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 6-12 மாத குழந்தைக்கு எந்த மாதிரியான ஊட்டச்சத்து கொடுக்கலாம்...? அம்மாக்களுக்கான யோசனை

6-12 மாத குழந்தைக்கு எந்த மாதிரியான ஊட்டச்சத்து கொடுக்கலாம்...? அம்மாக்களுக்கான யோசனை

ஆரோக்கியமான குழந்தைகள் பசியுடன் இருக்கும் போது ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப சரியான அளவை அவர்களே சாப்பிடுவர்.

ஆரோக்கியமான குழந்தைகள் பசியுடன் இருக்கும் போது ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப சரியான அளவை அவர்களே சாப்பிடுவர்.

ஆரோக்கியமான குழந்தைகள் பசியுடன் இருக்கும் போது ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப சரியான அளவை அவர்களே சாப்பிடுவர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு குழந்தை பிறந்த பிறகு அதற்கு வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆற்றலை வழங்க உறுதுணையாக இருப்பது அதன் சிறுவயதில் வழங்கப்படும் ஆரோக்கியமான உணவுகளே. அதிலும் குறிப்பாக 6 மாதங்கள் முதல் 1 வயது வரை வழங்கப்படும் ஊட்டச்சத்தான ஆகாரங்கள் மிகவும் முக்கியம். குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிக்கும் போது பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தைகள் உணவைதான் உட்கொள்ள வேண்டும், கலோரிகளை அல்ல.

பல பெற்றோர்கள், தங்களது குழந்தை, உணவுகளை சரியான அளவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவார்கள். ஆனால் உண்மையில் பெற்றோரின் வேலை பொருத்தமான, சீரான ஊட்டச்சத்தை வழங்குவதாகும். அதாவது சரியான உணவுகளை கட்டாயப்படுத்தாமல் வழங்குவதாகும். ஆரோக்கியமான குழந்தைகள் பசியுடன் இருக்கும்போது ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப சரியான அளவை அவர்களே சாப்பிடுவர். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை வழங்குவது அவர்களின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக குழந்தை பிறந்து அதற்கு 6 மாதங்கள் ஆகும் போது, அவை விரைவாக வளர தொடங்குகின்றன. எனவே முன்பை விட அதிக ஆற்றலும் ஊட்டச்சத்துக்களும் குழந்தைகளுக்கு தேவைப்படுகின்றன. 6 முதல் 12 மாதங்கள் வரையில் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறித்து பார்க்கலாம்.

தாய்ப்பால்:

6 மாதங்களுக்குப் பிறகும் குழந்தையின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரமாக தாய்ப்பால் இருக்கிறது. எனினும் திட உணவுகளையும் இப்போது குழந்தைக்கு தர துவங்குவதும் முக்கியம்.  நாள் முழுவதும் சிறிய அளவில் சத்தான உணவை அடிக்கடி சாப்பிட வைக்க வேண்டும். தானியங்கள் மற்றும் கிழங்குகளுடன் கூடுதலாக குழந்தைக்கு முட்டை, இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஜிங்க் (Zinc):

செல்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் ஜிங்க் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே ஜிங்க் சத்துகள் நிறைந்த உணவுகளை குழந்தையின் உணவில் சேர்ப்பது சிறந்த பலனை அளிக்கும்.

கால்சியம் :

வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் அவசியமான ஒன்று. பல்வேறு எலும்பு குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர வேண்டும்.  9 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு மென்மையான சீஸ் மற்றும் தயிர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை கொடுக்க தொடங்கலாம்.

வைட்டமின் டி:

குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி அவசியம் தேவை. இந்த ஊட்டச்சத்து இல்லாததால் எலும்புகள் மென்மையாக மாறி பலவீனமடையும். இதனால் ரிக்கெட்ஸ் நோய் ஏற்படும் அபாயமும் உருவாகும். வைட்டமின் டி-ன் முக்கிய ஆதாரமான சூரிய ஒளி குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. வைட்டமின் டி இயற்கையாகவே ஒரு சில உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த குறைபாட்டைத் தடுக்க பால், தானியங்கள், ஆரஞ்சு சாறு, தயிர், வெண்ணெய் போன்ற வைட்டமின் டி மூலம் பலப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

ஒமேகா 3:

குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க ஒமேகா -3 கொழுப்பு சத்து மிக முக்கியமான ஒன்று. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது, தூக்கத்தின் அளவை மேம்படுத்துகிறது மற்றும் ADHD மற்றும் ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கிறது.

வைட்டமின் சி:

வைட்டமின் சி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. குழாய் திசுக்களின் உற்பத்தியையும் வலுப்படுத்துகிறது.

ஒவ்வொரு உணவும் உங்கள் குழந்தைக்கு சாப்பிட எளிதான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை குழந்தைகளுக்கு கொடுத்தாலும், அவ்வப்போது பசிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தொடர வேண்டும். உங்கள் குழந்தை ஒரு புதிய உணவை சாப்பிட மறுத்தால் அல்லது அதை துப்பிவிட்டால் அதை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் முயற்சிக்கலாம் அல்லது உங்கள் குழந்தை விரும்பும் மற்றொரு உணவோடு அதை கலந்து கொடுக்க முயற்சிக்கலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Breastfeeding, Parenting