பிறந்த குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது என்பது பெற்றோர்களுக்கு மிகவும் கடினமான காரியம். அதிலும் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பை பற்றி பல்வேறு வித சந்தேகங்கள் இருக்கும். முக்கியமாக குழந்தைக்கு பால் கொடுப்பது பற்றியும், அவர்களுக்கு குடிநீர் கொடுப்பது பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் பெற்றோர்கள் மத்தியில் இருந்த வண்ணம் உள்ளன.
அவர்களுக்கு தாய்ப்பால் மற்றும் பால் பவுடர் கலந்துள்ள உணவுப் பொருட்களை மட்டும் கொடுப்பதால் அல்லது குடிநீர் கொடுக்கலாமா என்பது போன்ற சந்தேகங்களுக்கான விடையை இப்போது பார்ப்போம்.
குழந்தைகளுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக் கூடாது?
குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில் குழந்தைகளின் உடல் குடிநீருக்கு ஏற்றதாக இருக்காது. மேலும் குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை அவர்களின் வயிற்றில் 5 முதல் 10 மில்லி லிட்டர் அளவிலான திரவங்களுக்கான கொள்ளளவு மட்டுமே இருக்கும். இதன் காரணமாகத்தான் தாய்ப்பால் தவிர மற்ற வேறு எந்த உணவுப் பொருட்களையும் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது. மேலும் தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான வைட்டமின்கள் ஊட்டச்சத்துக்கள் கொழுப்புகள் ஆகியவை இருப்பதால் குழந்தைகள் நன்றாக வளர அவையே போதுமானவை.
எப்போது இருந்து அவைகளுக்கும் குடிநீர் கொடுக்கலாம்?
குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை அவர்களுக்கு குடிநீர் தேவைப்படாது. சில மாதங்கள் கழித்து நீங்கள் கொடுக்கும் போதும் மிகவும் சிறிதளவு நீரை மட்டுமே கொடுக்க வேண்டும். உண்மையில் குழந்தைகளுக்கு அதிக அளவு நீர் தேவைப்படாது என்பதே உண்மை. குடிநீரை விட குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
Also Read : குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள் என்னென்ன?
குடிநீர் கொடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை
குழந்தைகளுக்கு குடிநீர் முதல் முறையாக கொடுப்பதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் குடிக்கும் குடிநீரில் ஃப்ளுரைட் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. இவை பல் சொத்தை ஏற்படுவதை தவிர்க்கிறது ஆனால் குழந்தைகளுக்கு மிக ஆபத்தாக முடியக்கூடும். எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
எவ்வளவு குடிநீர் கொடுக்கலாம்..?
அரை கப்பிற்கும் குறைவான குடிநீரை குழந்தைகளுக்கு போதுமானது. குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாளைக்கு அரை கப் என்ற விகிதத்தில் குடிநீர் கொடுக்க முடியும். மேலும் இவ்வாறு கொடுப்பதற்கு முன் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொடுப்பது நல்லது.
குழந்தை வளர வளர குடிநீர் கொடுப்பது அதிகரிக்கலாம்
ஆரம்பத்தில் குறைவான அளவு குடிநீர் கொடுத்து பின் அவர்கள் வளர வளர ஒரு நாளைக்கு நான்கு கப் என்ற விகிதத்தில் அதிகரிக்கலாம். குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் நிலை உண்டாகிவிடும். எனவே அவர்கள் வளரும் போதே ஒரு நாளைக்கு உடலுக்கு போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி வளர்ப்பது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Baby Care, Drinking water, Newborn baby