• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகள் டயப்பரில் பேண்டேஜ், ஸ்டிக்கிநோட்ஸ் குளூ தயாரிக்கலாம் : மண்வளத்தை பாதுகாக்க புது முயற்சி..!

குழந்தைகள் டயப்பரில் பேண்டேஜ், ஸ்டிக்கிநோட்ஸ் குளூ தயாரிக்கலாம் : மண்வளத்தை பாதுகாக்க புது முயற்சி..!

டயப்பர்

டயப்பர்

பாலிஅக்ரிலிக் (polyacrylic acid) என்ற ஆசிட்டை கொண்டு உருவாக்கப்படும் இந்த டயப்பர்கள் எளிதாக மக்காது. இது சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துபவையாக இருப்பதால், இதற்கு மாற்றை அமெரிக்காவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டயப்பரில் இருந்து மறுசுழற்சி மூலம் பேண்டேஜ் மற்றும் ஸ்டிக்கிநோட்ஸ் குளூவை உருவாக்குவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயப்பரால் சுற்றுச்சூழல் மாசு உண்டாகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? யாராவது இதனைப்பற்றி யோசித்திருக்கிறோமா?

துணி டயப்பர்களுக்கு பதிலாக பாலிமர் டயப்பர்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து. ஒரு டயப்பர் முழுமையாக மண்ணில் மக்குவதற்கு தோராயமாக சுமார் 250 முதல் 300 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால், இதனைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெரிதாக இல்லை. இந்தியாவில் டயப்பர்களின் சந்தைமதிப்பு 1600 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

உலக தாய்ப்பால் வாரம் : பாலூட்டும் பெண்கள் குழந்தை ஆரோக்கியத்திற்காக சாப்பிட வேண்டிய 10 ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

இரவு நேரங்களில் அல்லது பயணங்களின்போது அடிக்கடி குழந்தைகள் சிறு நீர் கழித்தால், அப்போது உடனடியாக உடை மாற்ற வேண்டியிருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் இது அவர்களுக்கு மேலும் தொந்தரவாக இருக்கிறது என்பதற்காக பெரும்பாலான பெற்றோர்கள் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய பாலிமர் டயப்பர்களைக் குழந்தைகளுக்கு உபயோகப்படுத்துகின்றனர். பாலிஅக்ரிலிக் (polyacrylic acid) என்ற ஆசிட்டை கொண்டு உருவாக்கப்படும் இந்த டயப்பர்கள் எளிதாக மக்காது. இது சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துபவையாக இருப்பதால், இதற்கு மாற்று ஒன்றை அமெரிக்காவில் இருக்கும் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழலில் வெளியிடப்பட்ட ஆய்வில் வேதியியல் பேராசிரியராக இருக்கும் ஆனிமெக்னெய்ல் (Anne McNeil), பாலி கெமிஸ்டிரியில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் டகுந்தா சாஸோவாச்சி (Takunda Chazovachii) டயர்ப்பர் மறுசுழற்சி ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், டயப்பர்களை மறுசுழற்சி செய்து ஸ்டிக்கி நோட்ஸ் மற்றும் பேண்டேஜ்களை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் அமெரிக்க நுகர்வோர் கார்பரேஷனுடன் இணைந்து டயப்பர்களை மறுசுழற்சி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மூன்று படிநிலைகளில் பாலிமர் டயப்பர் மறுசுழற்சி சாத்தியமாகிறது. இது குறித்து அவர்கள் பேசும்போது, பாலிமர் டயப்பர் மறுசுழற்சி என்பது ஒருவகையான கெமிக்கல் மறுசுழற்சி எனத் தெரிவித்துள்ளனர்.



ஆய்வில் ஈடுபட்ட சாஸ்வோச்சி பேசும்போது, சூப்பசர் அப்சார்பென்ட் பாலிமர்ஸ் மறுசுழற்சி செய்வதற்கு மிகவும் கடினமானவை எனத் தெரிவித்துள்ளார். தயாரிக்கும்போதே மறுசுழற்சி மற்றும் தண்ணீரை நிரந்தரமாக தவிர்த்தல் ஆகிய பண்புகளுடன் உருவாக்கப்படுவதாக விளக்கியுள்ள அவர், இதற்கும் பிசின்களுக்கும் இடையே உள்ள ஒரே ஒற்றுமை அக்ரிலிக் ஆசிட் மட்டுமே எனக் கூறியுள்ளார். இந்த ஒத்த பண்புகளை அடிப்படையாக வைத்து கெமிக்கல் மறுசுழற்சியை சாத்தியமாக்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். பேராசியர் மெக்னெய்ல் பேசும்போது, பாலிமர் சங்கிலியை உடைக்க ஆய்வாளர்கள் முயன்று வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் பாலிமர் ஆசிட்டில் உருவாக்கப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்வது சாத்தியமாகியுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: