கொரோனா தொற்று காரணமாக பல மாதங்கள் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு தேர்வுகள் முடிந்துள்ளன. சில மாநிலங்களில் நடப்பு கல்வியாண்டிற்காக பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு உள்ளன. சில மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு திரும்புவது ஜாலியாக இருந்தாலும், ஒழுங்கற்ற தூக்க முறைகள் முதல் அதிகமானோரை நேரில் சந்திப்பதற்கான பயம் வரை சிலருக்கு பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் குழந்தைகளும், பெற்றோர்களும் தொற்றுக்கு முன்பிருந்த வழக்கமான நிலைக்கு எவ்வாறு திரும்புவது என்ற கவலையை சமாளிக்கும் வழிகளை நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். பிரைமரி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் பள்ளிக்கு செல்வது மற்றும் அதற்கு தகுந்தாற் போல் மாறுவதையும் பற்றி கவலைப்படுவது பொதுவானது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியம், வைரஸ் மற்றும் கோவிட் தொற்றுக்கு எதிரான நடத்தையை பின்பற்றும் தங்கள் குழந்தைகளின் திறன் உள்ளிட்டவற்றை பற்றி கவலைப்படுகின்றனர் என்கிறார் மூத்த மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகர் டாக்டர் பரம்ஜீத் சிங். பெரும்பாலான குழந்தைகள் பள்ளி நேரக் கட்டமைப்பிற்கு ஏற்ப அழுத்தங்களை எதிர்கொள்வது மற்றும் நீண்ட மாதங்களுக்கு பின் அதிக ஆசிரியர்கள், மாணவர்களை சந்திப்பது பற்றி கவலைப்படுகின்றனர். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் அனைத்து பாடங்களையும் ஓய்வின்றி படிக்க வேண்டுமே என்பதை பற்றிய கவலை அதிகம் உள்ளது என்கிறார் பரம்ஜீத் சிங்.
30% அதிகரித்த அப்பாயிண்ட்மெண்ட்ஸ்..
மூத்த மனநல ஆலோசகர்களில் ஒருவரான அரூபா கபீர் கூறுகையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதன் காரணமாக தன்னை கவுன்சிலிங்கிற்காக அணுகுபவர்களின் எண்ணிக்கையில் 30% உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறி இருக்கிறார். பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறி புதிய விளையாட்டு மைதானங்களுக்குள் நுழைவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அதே நேரத்தில் பதின்வயதினர் பள்ளிகளில் கூட்டத்தை எதிர்கொள்வது மற்றும் சகாக்களுடன் இணைந்து பள்ளிகளில் ஈரத்தை செலவழிப்பது குறித்து ஆர்வமாக உள்ளனர்.
COVID-ன் அபாயத்தைப் பற்றி சிந்திக்கும் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடைமுறைகளை மாற்றுவது கடினமாக உள்ளது என்றார். கடந்த 2 வருடங்களாக மாணவர்கள் வீட்டிலிருந்து படிப்பதால் அவர்களின் அன்றாட வழக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மற்றொரு மூத்த மனநல மருத்துவரான டாக்டர் சந்தீப் வோஹ்ரா கூறுகையில், ஸ்மார்ட் ஸ்கிரீன்களில் அதிக நேரம் செலவிட்டு, சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதால் குழந்தைகள் இப்போது சீரற்ற தூக்கம் மற்றும் ஒழுங்கற்ற உணவு முறைகளுக்குப் பழகிவிட்டனர்.
உங்கள் குழந்தையிடம் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா.? இந்த விஷயங்களை முயற்சி செய்யுங்கள்...
இதனால் பாதிக்கப்பட்டு உள்ள 13 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரி செய்வது சரி கடினமாக உள்ளது என்கிறார். என்னிடம் கவுன்சிலிங் அழைத்து வரப்பட்ட 17 வயது சிறுமியின் தாய் ஒருவர் தன் மகள் கவலை மற்றும் ஒழுங்கற்ற தூக்க முறை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கூறினார். சிறுமியிடம் விசாரித்த போது 2 ஆண்டுகளாக வெவ்வேறு நேரத்தில் தூங்குவது மற்றும் முறையற்ற உணவு சுழற்சியை பின்பற்றுவதும் தெரிந்தது.
அதிகாலை 2 மணிக்கு உறங்குவதும், காலை 8 மணிக்கு எழுவதும் அவர்து வழக்கம். பெற்றோர் வேளைகளில் பிசியாக இருந்ததால் அவர்களிடமிருந்தும் அவளுடைய நண்பர்களிடமிருந்தும் விலகி சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாள். இப்போது மீண்டும் பழைய கால அட்டவணைக்கு திரும்புவது கவலையை ஏற்படுத்தி தூக்கமின்மைக்கு வழிவகுத்துள்ளது. மேலும் அச்சிறுமி நேரடியாக மீண்டும் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. பல கட்ட கவுன்சிலிங்கிற்கு பிறகு தற்போது அவள் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாக சந்தீப் வோஹ்ரா கூறி உள்ளார்.
மாதவிலக்கு பற்றிய உரையாடல் ஏன் அவசியம்..? ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..?
குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்லத் தொடங்கும் போது ஏற்படும் கவலை உணர்வு இயல்பானது. பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகும் 1%குழந்தைகள் புதிய வழக்கத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ள 2 நாட்கள் வரை எடுத்து கொள்கிறார்கள். எனினும் பெற்றோர்களின் கவலை சில நேரங்களில் குழந்தைகளிடம் பிரதிபலிக்கும்.
குழந்தைகள் சில உடல் செயல்பாடு மற்றும் விளையாட்டுகளை மீண்டும் பெறுவது, சக மாணவர்களுடன் இணைந்திருப்பதை உறுதி செய்வது அவசியம். சில குழந்தைகளுக்கு பள்ளி சூழல் செட்டாக சில நாட்கள் பிடிக்கலாம். பள்ளி செல்ல துவங்கும் முதல் சில நாட்களுக்கு, அவர்கள் சுற்றுச்சூழலில் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறார்களா என்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த நிபுணர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School Reopen, School students, Stress