ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொரோனாவுக்கு இடையே மீண்டும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை காக்க பெற்றோர் செய்ய வேண்டியவை!

கொரோனாவுக்கு இடையே மீண்டும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை காக்க பெற்றோர் செய்ய வேண்டியவை!

குழந்தைகள் கொரோனா பாதுகாப்பு

குழந்தைகள் கொரோனா பாதுகாப்பு

உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுக்கும் உணவில், பச்சை காய்கறிகள், கீரைகள் பழங்கள் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே இரண்டு அலை பரவியதையடுத்து தற்போது மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனிடையே தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்களுக்கு இடையே பள்ளி செல்லும் குழந்தைகள் குறித்து பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர்.

அதேநேரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அவர்களது கல்வியை கருத்தில் கொண்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். எனவே பெற்றோர்கள் வழக்கமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமன்றி, தங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.

ஊட்டச்சத்து நிபுணரான ஷிவானி காண்ட்வால் குழந்தைகளுக்கு சரியான உணவு திட்டங்களை உருவாக்குவது பற்றி விளக்கியுள்ளார். அதுகுறித்து இங்கு காண்போம்...

குழந்தைகளின் உணவில் அவசியம் இருக்க வேண்டியவைகள் :

* காய்கறிகள்

* பழங்கள்

* முழு தானியங்கள்

* புரதம்

* துத்தநாகம்

* ஆரோக்கியமான கொழுப்புகள் (நட்ஸ் , விதைகள், மீன், நெய்)

உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுக்கும் உணவில், பச்சை காய்கறிகள், கீரைகள் பழங்கள் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும். மேலும் குழந்தைகளின் வைட்டமின் டி அளவை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின்-டி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அவர்களின் குடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு நீங்கள் போதுமான புரோபயாடிக்குகளைக் கொடுத்து நன்கு நீரேற்றமாகவும் வைத்திருப்பது அவசியமாகும். ப்ரோபையாடிக்ஸ் (Probiotics) அடங்கிய உணவுகள், குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் முக்கிய காரணியாக இருக்கின்றன. மேலும் துத்தநாகம் மற்றும் கடல் உணவில் போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளையும் அடிக்கடி சேர்க்கவும். தர்பூசணி விதைகள், வரகரிசி, மட்டி மீன்களிலும், சிப்பிகளிலும் துத்தநாகம் நிறைந்துள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு கட்டாயம் தர வேண்டிய 5 ஊட்டச்சத்து மிக்க உணவுகள்...

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மட்டமன்றி, தொற்றுநோய் பரவல் குறித்தும், பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதும் அவசியமாகும். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு அனுப்பும் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் கூற வேண்டியது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.,

1. தினமும் முக கவசம் அணிந்து வெளியே செல்வதை உறுதி செய்ய வேண்டும். மூன்று அடுக்கு கொண்ட முக கவசங்களை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்கள்.

2. குழந்தைக்கு ஏற்ற சானிடைசரை கொடுத்தனுப்புங்கள், அல்லது அடிக்கடி நன்கு கைகளை கழுவ வேண்டும் என அவர்களுக்கு கற்று கொடுங்கள்.

3. சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கழுவவும், அடிக்கடி பொது இடங்களில் உள்ள பகுதிகளை தொடாமல் இருக்கவும் கற்றுக்கொடுப்பது முக்கியம்.

4. உங்கள் குழந்தைக்கு சோசியல் டிஸ்டன்ஸ் குறித்தும் தெரியப்படுத்துங்கள். நண்பர்களுக்கு கை கொடுப்பது, கட்டியணைத்து அன்பை பரிமாறுவது போற்றவற்றை தவிர்த்து வணக்கம் கூற கற்றுக்கொடுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Kids Care, Kids diet, Kids Food, School Reopen